தொடர்கள்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்துக்காக, மும்பை தாராவி பகுதியைப் போல சென்னையின் ஒரு தீம் பார்க்கில் செட் போட இருந்தார்கள். ஆனால், ‘‘இது ஒரிஜினல் போல இருக்காது’’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் ரஞ்சித். அதனால், மும்பையிலேயே ஷூட்டிங் நடத்த முடிவாகிவிட்டது. இதில், முக்கிய ரோல் ஒன்றில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளார்.

மந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் 6-ம் தேதி திருமணம். தேனிலவுக்காக நியூயார்க் செல்ல திட்டமிட்டுள்ளனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தெலுங்கு வெர்ஷனில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதில் க்ளைமாக்ஸ் காட்சிகள் நியூயார்க்கில் நடக்கும். அங்குதான் அவர்களின் காதல் தொடங்கியது. எனவே, காதல் தொடங்கிய இடத்திலேயே தேனிலவையும் கொண்டாடி மகிழப்போகிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ரு காலத்தில் தமிழ், தெலுங்கில் டாப் நாயகி த்ரிஷா. இங்கு விஜய் ஜோடி என்றால் அங்கு மகேஷ்பாபு ஜோடி என உச்சத்தில் இருந்தவர். இப்போது த்ரிஷாவின் இடத்தை தெலுங்கில் அலங்கரிப்பது ரகுல் ப்ரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் ரகுல். இந்தப் படத்தின் மூலம் தமிழிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று டார்கெட் வைத்துள்ளாராம்.

ஜித் பட ஷூட்டிங்குக்காக பல்கேரியாவில் இருந்த காஜல் அகர்வால், தற்போது விஜய் படத்துக்காக ஐரோப்பாவில் இருக்கிறார். அடுத்தடுத்து விஜய், அஜித் படங்களில் நடிப்பதால், ‘‘தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை நான்தான்’’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறாராம், காஜல். அப்படியே, தன் சம்பளத்தை உயர்த்தவும் திட்டமாம்.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்குப் பிறகு, கிளாமர் ரோல்களில் நடிக்கவே ரெஜினாவை அணுகுகிறார்களாம். அதில், ரெஜினாவுக்கு விருப்பமில்லை. ‘கிளாமர் ரோல்’ என்று யார் கதை சொல்ல வந்தாலும் கடுப்படிக்கிறார் ரெஜி.

மிஸ்டர் மியாவ்

மிழில் அதிகமான படங்கள் நடிக்க வேண்டும் என்பது நித்யா மேனனின் ஆசை. ஆனால், தமிழ்ப் பட வாய்ப்புகள் அவருக்கு வருவதே இல்லை. ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அதிகம் கோபப்படுவதுதான் காரணம்’ என்கிறார்கள்.

மியாவ் பதில்

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை என்ன?


ரோமான் பியர்துலாஸ் (Romain Puertolas) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் உலகப் புகழ்பெற்ற நாவலான ‘The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe’ என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு கென் ஸ்காட் இயக்கிவரும் படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்’. இந்தியாவின் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த அஜா என்ற கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இவர் மேஜிக் கலைஞர். அம்மாவுக்காக பாரீஸ் பறக்கிறார். அங்கு மேரி என்பவரிடம் காதலில் விழுகிறார். அங்கு நடக்கும் பிரச்னை ஒன்றினால் பாரம்பர்யமிக்க அலமாரிக் கடையில் சிக்கிக்கொள்கிறார். அவர் சிக்கியிருக்கும் அலமாரி, ஐரோப்பா முழுவதும் சுற்றித் திரிகிறது. அந்தப் பயணத்தில் நடக்கும் பிரச்னைகளும், அதிலிருந்து தப்பிக்க தனுஷ் செய்யும் மேஜிக்குகளும்தான் கதை. இறுதியில் அவர் பாரீஸ் வந்து சேர்ந்தாரா, காதலியை மீண்டும் சந்தித்தாரா என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். முதல்கட்டமாக, மும்பையில் ஷூட்டிங் நடந்துமுடிந்திருக்கிறது. அடுத்தபடியாக பாரீஸ், ரோம், பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.