Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மும்பை தாராவியில் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் திருநெல்வேலி பக்கமிருந்து பலர் மும்பையில் செட்டிலானார்கள். அதில் ஒருவர்தான் ‘காலா’ ரஜினிகாந்த். முதன்முறையாக நெல்லை வட்டார மொழி பேசி நடிக்கிறார் ரஜினி. படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் தாராவி ஏரியாவில் தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ பட வரிசையில் ஐந்தாவது பாகமான ‘டெட் மேன் டெல் நோ டேல்ஸ்’ உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியானது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இது முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலும் நல்ல வசூல். அதே நாளில்தான் ப்ரியங்கா சோப்ரா நடித்திருக்கும் ‘பே வாட்ச்’ படம் ரிலீஸ் ஆனது. பிரபல டி.வி தொடரைத்தான் படமாக்கினார்கள். இருந்தாலுமே, வசூல் லிஸ்ட்டில் டாப்பில் வரமுடியவில்லையே என்று ப்ரியங்கா செம அப்செட்.

மிஸ்டர் மியாவ்

14 பிரபலங்கள், 30 கேமரா கண்கள், எந்த வித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரே இடத்தில் வசிக்கவேண்டும். இதுவே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலுக்குச் சம்பளம் மட்டுமே ரூ.15 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்குச் சம்பளம் எப்படியிருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்! ஆனாலும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் மட்டும் உறுதியாகாமல் இருக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்

தேவசேனா அனுஷ்காவுக்கு வயது 35. இன்னும் திருமணமாகவில்லை என்பதால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஜோசியரிடம் விசாரிக்க, தோஷம் காரணமாகத்தான் திருமணச் சிக்கல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் குடும்பத்துடன் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்து வழிபட்டிருக்கிறார் அனுஷ்கா.

மிஸ்டர் மியாவ்

முத்தையாவின் ‘கொடிவீரன்’ படப்பிடிப்பில் இருக்கிறார் சசிகுமார். படத்தின் நாயகிகளாக மஹிமா நம்பியார், சனுஷா ஒப்பந்தமாகி இருந்தனர். இப்போது மூன்றாவது நாயகியாகப் பூர்ணாவும் கமிட்டாகி இருக்கிறார். கிராமமும் கிராமம் சார்ந்த இடங்களில் நாயகிகளுடனான பாடல் காட்சிகளுக்கு நடனமாடி முடித்துவிட்டார் சசி.

மிஸ்டர் மியாவ்

னுஷ் தயாரிப்பில் வெளியான முதல் படம் ‘3’. தமிழில் பல சின்ன பட்ஜெட் படங்களில் தொடங்கி, ரஜினியின் ‘காலா’ பட தயாரிப்பு வரையிலும் வந்துவிட்டார். அடுத்த கட்டமாக மலையாளத்திலும் படம் தயாரிக்கவிருக்கிறார். நேஹா ஐயர் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பெயர் ‘தரங்கம்’.

தெ
லுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார்கள் சிரஞ்சீவியும் பவன் கல்யாணும் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகின்றன. படப்பிடிப்பு மட்டும் இன்னும் தொடங்கவில்லை. ஆனால், அண்ணனும் தம்பியும் அரசியலிலும் சொந்தத் தொழிலிலும் செம பிஸி. விரைவில் இருவரும் இணைந்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் த்ரிவிக்ரம்.

மியாவ்  பதில்

மிஸ்டர் மியாவ்

திருமணத்துக்குப் பிறகும் சமந்தா நடிப்பாரா?

நாக சைதன்யா - சமந்தா காதல் திருமணம் அக்டோபர் 6-ல் நடப்பது உறுதியாகிவிட்டது. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் செப்டம்பர் வரையிலும் நடிக்க இருக்கிறார் சமந்தா. அக்டோபர் மாதம் மட்டும் ஷூட்டிங் வேண்டாம் என்று மேனேஜரிடம் சொல்லிவிட்டாராம். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால் என பலருடன் படங்களில் கமிட்டாகி இருப்பதால் திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிப்பது உறுதி.