Published:Updated:

"விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட், சூர்யாவுடன் லண்டன் டிரிப்,'மாப்ள' சமுத்திரக்கனி..." - 'விக்ரம் வேதா' பிரேம்

"விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட், சூர்யாவுடன் லண்டன் டிரிப்,'மாப்ள' சமுத்திரக்கனி..." - 'விக்ரம் வேதா' பிரேம்

சூர்யா, விஜய் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் பிரேம் குமார் பேட்டி.

"விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட், சூர்யாவுடன் லண்டன் டிரிப்,'மாப்ள' சமுத்திரக்கனி..." - 'விக்ரம் வேதா' பிரேம்

சூர்யா, விஜய் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் பிரேம் குமார் பேட்டி.

Published:Updated:
"விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட், சூர்யாவுடன் லண்டன் டிரிப்,'மாப்ள' சமுத்திரக்கனி..." - 'விக்ரம் வேதா' பிரேம்

```நாட்டுப்புறப் பாட்டு' படத்துக்குப் பிறகு சினிமாவுல அடுத்து என்ன பண்றதுனு தெரியலை. என் நண்பர் கமல் ராய்தான் சீரியல்ல நடிக்கிறியானு கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டேன். அதை டிவியில பார்த்துட்டு ஏவி.எம்.சரவணன் சார் என்னைக் கூப்பிட்டார். உள்ளே போனவுடனே, எஸ்.பி.முத்துராமன் சார் இருந்தார். கால்ஷீட் வாங்கிட்டு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம்னு சொன்னாங்க. இப்படித்தான் என் சீரியல் வாழ்க்கை ஆரம்பிச்சது. அடுத்தடுத்து `அண்ணி', `கங்கா யமுனா சரஸ்வதி', `மனைவி'னு நிறைய வாய்ப்புகள் வந்தது." பழைய நினைவுகளைச் சுமந்தபடியே உரையாடலைத் தொடங்குகிறார், நடிகர் பிரேம் குமார். 
 

``பாலசந்தர் புரொடக்‌ஷன்ல `அண்ணி' சீரியல்ல நடிச்ச அனுபவம்?" 

``அந்த நாள்களையெல்லாம் மறக்கவே முடியாது. பாலசந்தர் சார் வசனம் எழுதி, சமுத்திரக்கனி இயக்கிய சீரியல் இது. கே.பி சாருக்குப் பிடிச்ச காட்சியா இருந்தா, அவரே வந்து எடுப்பார். கமா, புள்ளி, ஆச்சர்யக் குறி மாதிரியான குறியீடுகளுக்கு முகபாவனைகளை எப்படி மாத்தணுங்கிறது எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்ததுதான். அவர் வசனம் எப்போவும் பிங்க் கலர் பேனாவுல எழுதியிருப்பார். அதை மட்டும் மாத்திப் பேசிடவே கூடாதுனு `மாப்ள' சமுத்திரக்கனி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார். பாலசந்தர் சார் ஒருநாள் எனக்கு போன் பண்ணி, `உன் நடிப்பைப் பார்த்துட்டு அழுதுட்டேன்டா. நீ நல்லா வரணும்டா'னு என்கிட்ட சொன்னது என் வாழ்நாள்ல மறக்கவே முடியாது."

``சீரியல் டூ சினிமாவுக்கு வர என்ன மாதிரியான சவால்களைச் சந்திச்சீங்க?" 

``என் கனவு சினிமாவுல நடிக்கணும். ஆனா, சீரியல்கள்தான் எனக்கு நடிப்பைக் கத்துகொடுத்தது, என் கரியருக்கு அஸ்திவாரம் போட்டது. ஒரு கட்டத்துல சினிமாதான்னு முடிவெடுத்து, சீரியல்ல நடிக்கிறதை விட்டுட்டு சினிமாவுக்கு முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். நான் சீரியல்ல இருந்த சமயத்துல டைரக்டர்கள்கிட்ட இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். ஆனா, மறுபடியும் போன் பண்ணா, எடுக்கவே மாட்டாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். சீரியல்ல ரொம்ப பிஸியாவே இருந்துட்டு சும்மா இருக்கிறது கடுப்பா இருந்தது. என்ன வீட்ல சும்மாவே இருக்கார்னு வீட்ல வேலை செய்றவங்க தப்பா நினைச்சிடுவாங்களோனு சும்மாவாவது காரை எடுத்து ஊரைச் சுத்திட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவேன். சில இடங்கள்ல `யார் நீங்க? டைரக்டர் சாரைப் பார்க்க முடியாது. போயிட்டு அப்புறமா வாங்க!'னு சொல்லும்போது வேதனையா இருக்கும்."

``சினிமாதான்னு நீங்க முடிவெடுத்த பிறகும், பெரிய ஸ்கிரீன்ல உங்களுக்கான ஓர் அடையாளம் கிடைக்கலையேங்கிற வருத்தம் உண்டா?"     

``நிச்சயமா! பல முறை வருத்தப்பட்டிருக்கேன். நிறைய படங்கள்ல நடிச்சிருந்தாலும், அதுக்கான ஷூட்டிங் ரொம்ப கம்மியான நாள்கள்தான் இருக்கும். `விக்ரம் வேதா'தான் எனக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தது. அதுக்கு முன்னாடி `நேபாளி' படம் எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுக்கும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா, படம் சரியாப் போகலை. `தனம்' படமும் நான் நினைச்ச அளவுக்கு மக்கள்கிட்ட ரீச் ஆகல. `உன்னைப்போல் ஒருவன்' படத்துல நடிச்சதுக்குப் பிறகு நிறைய போலீஸ் ரோல்தான் எனக்கு வந்தது. `விக்ரம் வேதா' வாய்ப்பு வந்தபோதுகூட போலீஸ் கேரக்டரா இருக்கக் கூடாதுனு சாமிகிட்ட வேண்டிகிட்டு இருந்தேன். போலீஸ் யூனிஃபார்ம் இல்லைனு சொன்னபிறகுதான், கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தது. படம் ஹிட்டானது எனக்குப் பெரிய சந்தோஷம். இதுக்காகத்தான் இத்தனை வருடம் காத்திருந்தேன்."

``விஜய்கூட `சர்கார்', சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில உருவாகும் படத்துல நடிச்சிட்டு இருக்கீங்க. எப்படி இருக்கு அந்த அனுபவம்?"

```சர்கார்' படத்துல விஜய் சார்கூட காம்போ சீன் இருக்குனு சொன்னதே எனக்கு சந்தோஷம். என்னைப் பார்த்ததும், `` `விக்ரம் வேதா' படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க"னு சொன்னார். பிறகு, ஸ்பாட்ல `ஹாய் நண்பா.. எப்படி இருக்கீங்க?'னு ரொம்ப ஜாலியாப் பேசுவார், விஜய். ஆக்சுவலா, நானும் அவரும் சின்ன வயசுல ஒரே ஏரியாவுல இருந்தோம். ஒண்ணா கிரிக்கெட் விளையாடியிருக்கோம். அந்தக் கதையையெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்ல பேசிக்கிட்டு இருப்போம். ஆனா, அவருக்கு அதெல்லாம் மறந்துபோயிருக்கு. நான்தான் ஞாபகப்படுத்திச் சொன்னேன். சூர்யா - கே.வி.ஆனந்த் சார் சேர்ந்து வொர்க் பண்ற படத்தோட ஷூட்டிங்கிற்காக நானும், சூர்யாவும் லண்டன் போயிருந்தோம். அது, சூர்யாகூட நெருக்கமா பழக ஒரு வாய்ப்பா அமைஞ்சது. ரொம்ப டெடிகேஷனான நபர். எட்டு மணிக்கு ஷூட்டிங்னா, ஏழரை மணிக்கு ஸ்பாட்ல இருப்பார். ரெண்டு படங்களும் வித்தியாசமான அனுபவமா இருந்தது. ரெண்டு படத்திலும் இன்னும் எனக்கான போர்ஷன்ஸ் இருக்கு. திரும்ப விஜய், சூர்யா ரெண்டுபேரையும் மீட் பண்ண ஆர்வமா இருக்கேன்." 
 

``அஜித்தை சந்திச்ச அனுபவம்?" 

``பத்து வருடங்களுக்குப் பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடித்தது..."

``சமுத்திரக்கனிக்கும் உங்களுக்குமான நட்பு?"

``நடிகர் சங்க வேலைகள்..."  

இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு, சுவாரஸ்யமான பதில்களைக் கொடுத்திருக்கிறார், பிரேம் குமார். அதை வீடியோ வடிவில் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.!