Published:Updated:

"'உங்ககிட்ட நிறைய பேசணும்'னு சொன்னார்... ப்ச் பேசாமலே போயிட்டார்!" - விக்ரம்

"'உங்ககிட்ட நிறைய பேசணும்'னு சொன்னார்... ப்ச் பேசாமலே போயிட்டார்!" - விக்ரம்

'சாமி ஸ்கொயர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்.

"'உங்ககிட்ட நிறைய பேசணும்'னு சொன்னார்... ப்ச் பேசாமலே போயிட்டார்!" - விக்ரம்

'சாமி ஸ்கொயர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்.

Published:Updated:
"'உங்ககிட்ட நிறைய பேசணும்'னு சொன்னார்... ப்ச் பேசாமலே போயிட்டார்!" - விக்ரம்

ரி இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'சாமி ஸ்கொயர்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. கமர்ஷியல் ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்ற 'சாமி' படம் வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 'சாமி ஸ்கொயர்' உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் இருந்த பரபரப்பும், விறுவிறுப்பும் 'சாமி ஸ்கொயர்' படத்திலும் இருக்குமா? என்ற கேள்வி இருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம். 'சாமி ஸ்கொயர்' இசை வெளியீடு நிகழ்விற்குத் திரைப் பிரலங்கள் பலரோடு, சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனும் கலந்துகொண்டார்.   

நிகழ்ச்சியில் பிரபலங்கள் பேசியதாவது...

படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன் :

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"'சாமி' படத்தின் விநியோகஸ்தராக இருந்த நான், இன்று 'சாமி ஸ்கொயர்' படத்தைத் தயாரித்திருக்கிறேன். நம் உடம்புக்கு ரத்தம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஒரு படத்தைத் தயாரிக்க ஃபைனான்ஸியர் முக்கியம். அன்புச்செழியன் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். எனக்கு அவர் நண்பர்கூட கிடையாது. ஆனாலும், எங்களுக்குள் நிறைய அன்பு இருக்கிறது'' என்றார். 

ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் :

''ஹரி அண்ணனும் விக்ரம் சாரும் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்திருக்காங்க. ஹரி அண்ணா படத்தில் டெக்னீஷியன்கள் நிறைய கஷ்டப்படுவாங்க. அவங்க கஷ்டம் வீண் போகாது!” 

படத்தின் இயக்குநர் ஹரி : 

''என் முதல் படமான 'தமிழ்' முடிச்சிட்டு அடுத்த படத்துக்காகக் காத்திருந்தேன். அப்போ விக்ரம் சார், ‘ஒரு படம் பண்ணனும் ஹரி. கதை சொல்லு'ன்னார். ஒரு சின்ன அவுட்லைன் மட்டும் சொன்னேன். எதுவும் சொல்லாம போயிட்டார். பிறகு, கவிதாலயா நிறுவனத்துல இருந்து போன் வந்தது. விக்ரம் சார்கூட 'சாமி' படம் இப்படித்தான் அமைஞ்சது. படம் மிகப்பெரிய ஹிட். அதுக்காக, விக்ரம் சாருக்கு நன்றி சொன்னேனானு தெரியலை. இப்போ, அந்த நன்றியை சொல்லிக்கிறேன். 

'அருள்' படத்துக்குப் பிறகு, 'நல்ல கதை அமையும்போது, மறுபடியும் படம் பண்ணலாம்'னு விக்ரம் சார் சொன்னார். அவருக்கான கதையை ரெடி பண்ணத்தான் இத்தனை நாளாகிடுச்சு. ஏன்னா, அவர் கமர்ஷியல் ஹீரோ மட்டுமில்ல, நல்ல நடிகர். தயாரிப்பாளர் ஷிபு, ஹெலிகாப்டர் வேணும்னு சொன்னாகூட உடனே ஏற்பாடு செஞ்சு கொடுத்திடுவார். ஆக்ரா, தாஜ்மஹால், டெல்லினு நான் கேட்ட எல்லா இடங்களிலும் ஷூட் பண்ண முகம் சுளிக்காம ஏற்பாடுகளை செஞ்சு கொடுத்தார். இவருக்குப் படம் பண்ண நான் கொடுத்து வெச்சிருக்கணும். 

ஐஸ்வர்யா ராஜேஷ், 'படத்துல எனக்கு சின்ன கேரக்டர்'னு சொன்னாங்க. அவங்க கேரக்டர் படத்தோட முக்கியமான கேரக்டர். படத்தோட கடைசி ஷெட்டியூலதான் அவங்ககிட்ட கேட்டோம். உடனே நடிக்க ஒப்புக்கிட்டாங்க. அதுக்குப் பெரிய மனசு வேணும்!"

நடிகர் சூரி :

''இந்தச் சமயத்தில் ஹரி சாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் சார் இல்லாதது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் சீக்கிரமே ஹீரோவா நடிப்பார்னு எதிர்ப்பார்க்கிறேன். ஏன்னா, பாதி நேரம் ஜிம்லதான் இருக்கார். விக்ரம் சாருக்கு நன்றி சொல்லணும். 'ஸ்கெட்ச்' பட ஆடியோ லாஞ்ச்ல, ‘சூரிக்கு படத்துல நிறைய சீன்ஸ் என்கூட இருந்துச்சு. ஆனா, படத்தோட நீளம் அதிகமா இருந்ததால நான்தான் கம்மி பண்ணச் சொன்னேன்'னு மன்னிப்பு கேட்டார். இந்த மனசு அவருக்கு மட்டும்தான் வரும்!."

நடிகர் விக்ரம் :

“'சாமி' படம் எனக்கு கமர்ஷியல் ரீதியா மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ஹரி எப்பவுமே பரபரப்பா இருப்பார். அவர் ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. ஒளிப்பதிவாளர் ப்ரியனை 'அருள்' படத்துக்குப் பிறகு நான் சந்திக்கவே இல்லை. 'சாமி ஸ்கொயர்' ஷூட்டிங்ல, 'உங்கக்கிட்ட நிறைய பேசணும் ஜி'னு ப்ரியன் சொன்னார். ஆனால், எதுவும் பேசாமலேயே போயிட்டார்.

'கந்தசாமி' படத்துக்கு தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து, எல்லாப் பாடல்களையும் என்னைப் பாட வைத்தார். பாடல் வரிகளுக்கு இருக்கிற முக்கியத்துவம் கொடுத்து வேலை வாங்குவார். இந்தப் படத்துலயும் என்னை ஒரு பாட்டு பாட வெச்சிருக்கார். என்கூட சேர்ந்து கீர்த்தி சுரேஷும் பாடியிருக்காங்க. கீர்த்தி நடிச்ச 'மகாநதி' படத்தை லேட்டாதான் பார்த்தேன். சாவித்திரி அம்மா பன்முகத் திறமை கொண்டவர். அவரை மாதிரியே கீர்த்தியும் பன்முகத் திறமைசாலி. இந்தப் படத்துல வில்லனா நடிச்சிருக்கார், பாபி சிம்ஹா. இந்தப் படம் முடியிறவரை வேறெந்தப் படத்திலும் கமிட் ஆகாம இருந்தார். அவருக்கு இந்தப் படம் திருப்புமுனையைக் கொடுக்கும்!."  

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் :

''நிகழ்ச்சிக்கு தாமதமா வந்ததுக்கு மன்னிக்கவும். காரணம், படத்துல அம்மா பற்றிய ஒரு பாட்டை புதுசா சேர்த்திருக்கோம். அதை மியூசிக் நிறுவனத்துக்கு அனுப்பிட்டு வர தாமதமாகிடுச்சு. இந்தப் பாட்டை என் அம்மாவுக்கு மட்டுமில்ல, ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவுக்கும் அர்ப்பணிக்கிறேன். ஏன்னா, ஐஸ்வர்யா ராஜேஷை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவங்க அம்மா நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க. 

விக்ரம் சாரைப் படத்துல பாட வைக்க ஆசைப்பட்டேன். ஏன்னா, அவர் என் ரோல் மாடல். அவருக்காகவே 'மெட்ரோ ரயில்' பாட்டை உருவாக்கினேன். பெண் குரலில் யார் பாடினால் நல்லாயிருக்கும்னு யோசிச்சப்போ, தயாரிப்பாளர் ஷிபுவே, ‘கீர்த்தி சுரேஷ் நல்லாப் பாடுவாங்க’னு சொல்லி, அவங்க பாடிய ஒரு வீடியோவைக் காட்டினார். ஸ்ருதி தப்பாமல் கீர்த்தி பாடுனது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அதனால, அவரையே பாடவெச்சுட்டேன்” 

இவ்வாறாக, படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.