Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

‘‘நான் மும்பை பொண்ணு. தென்னிந்திய நடிகை என என்னைச் சொல்லாதீர்கள்’’ என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்து சர்ச்சை ஏற்படுத்தினார் காஜல் அகர்வால். இப்போது, ‘‘நான் தென்னிந்திய நடிகை. தவறுதலாக மும்பையில் பிறந்துவிட்டேன்’’ என்று தெலுங்கு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். பேசாமல் அரசியல்வாதி ஆகிவிடலாம் அவர்.   

மிஸ்டர் மியாவ்

குஷ்புவின் இரண்டாவது மகள் அனந்திதா, 10-ம் வகுப்பு படிக்கிறார். பள்ளியில் குட் மார்க் வாங்கும் இவர், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் லைவில் வந்து பலரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதை ஒரு ஹாபியாக வைத்திருக்கிறார். குஷ்பு நடித்ததில் பிடித்தப் படம், பிடித்த ஹீரோ... என எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார். சில சமயம் குஷ்புவே வந்து மகளிடம் கேள்வி கேட்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

விக்ரம் பிரபுவுக்கு நடிக்க வந்த நாள் முதலே ஓர் ஆசை இருக்கிறதாம். அவரது அப்பா பிரபுவுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதுதான் அது. ‘‘சிவாஜி தாத்தாவும் அப்பாவும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. எனக்கும் அப்பாகூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. நல்ல ஸ்க்ரிப்ட் கிடைச்சா நிச்சயமா நாங்க நடிப்போம்” என்கிறார்.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

‘மோகன்லால்’ - இது நடிகரின் பெயர் அல்ல; ஒரு படத்தின் பெயர். சஜித் யாஹியா இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், இந்திரஜித் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கச் சொல்லி மோகன்லாலிடம் கேட்டிருக்கிறார்கள்.

மியாவ் பதில்

“பொதுக்கூட்ட உரைகளுக்கிடையே சினிமா ஸ்க்ரிப்ட் எழுதுவதிலும் பரபரப்பாக இருக்கிறாராமே சீமான்? அவர் அடுத்து படம் இயக்கப்போகிறார் என்பது உண்மையா?”    

மிஸ்டர் மியாவ்

“ஆமாம். ‘பகலவன்’ என்ற படத்தின் கதையை, பத்து வருடங்களுக்கு முன்பே எழுதியிருந்தார் சீமான். அப்போது விஜய் நடிப்பதாக இருந்தது. கதையில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார் விஜய். சீமான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விஜய் அந்தப் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு விக்ரம், ஜீவா, சிபி போன்ற பலரிடம் கதையைச் சொல்லியிருக்கிறார் சீமான். விக்ரம் சம்மதம் தெரிவித்தாலும், கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு சிம்பு நடிப்பதாக இருந்தது. அவரும் ஏனோ பின்வாங்கிவிட்டார். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கிறார். பத்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை என்பதால், ஸ்க்ரிப்டை இன்றைய சூழலுக்கு ஏற்றபடி சரிசெய்துகொண்டிருக்கிறார் சீமான். செப்டம்பர் மாதம் ஷூட்டிங் ஆரம்பம். அடுத்து டிசம்பரில் ‘கோபம்’ என்ற தலைப்பில்    ஜி.வி.பிரகாஷை வைத்தும் படம் இயக்குகிறார் சீமான்.”    

மிஸ்டர் மியாவ்

ஸ்ருதி ஹாசன் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியதும், அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. சமூக வலைதளங்களிலும் அவரைக் கிண்டல் செய்தார்கள். ‘‘நான் யாருக்கும் பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் கிடையாது. என்னைப் பற்றி யார் என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க. எனக்குக் கவலை இல்லை’’ எனக் கோபப்பட்டிருக்கிறார் ஸ்ருதி.    

மிஸ்டர் மியாவ்

‘காலா’ படத்தில் ரஜினிக்குப் பல வில்லன்கள். அதில் ஒருவர், நானா படேகர். மும்பை அரசியல்வாதியாக வரும் இவர், தமிழர்களை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்துகிறார். அவரை அடக்கி, தமிழர்களின் உரிமையை மீட்டு எடுக்கிறாராம் ரஜினி.  

மிஸ்டர் மியாவ்

‘அச்சம் என்பது மடமையடா’, ‘சத்ரியன்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மஞ்சிமா மோகனின் லவ் அப்டேட்தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். ‘ரம்’ படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷிகேஷூம் மஞ்சிமாவும் இணைந்து ஒன்றாக சுற்றுவதாக கிசுகிசுகிறார்கள். விரைவில் ‘டும் டும் டும்’ செய்தி வரலாம் என்கிறார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism