Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மூன்று கேரக்டர்களில் விஜய் நடிக்க... நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று நாயகிகள் ஜோடி சேர... வடிவேலு, சத்யன், யோகிபாபு என மூன்று காமெடியன்கள் இணைய... இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்டது ‘விஜய் 61’. வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, விஜய்யின் நடிப்பு, நடனம் பற்றி ஒவ்வொருவரிடமும் புகழ்ந்து தள்ளுகிறாராம்.

‘இதுதான்டா போலீஸ்’ படத்தில் நடித்த டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் திரையுலகுக்கு வரவிருக்கிறார். தன் அம்மாவான நடிகை ஜீவிதா போல் வரவேண்டும் என்பதுதான் இவரின் விருப்பம். மருத்துவம் படித்துவரும் ஷிவானி, படிப்பு முடிந்ததும் நடிக்க வருகிறார். மகளுக்காகக் கதைகளை இப்போதே கேட்டுக்கொண்டிருக்கிறார் டாக்டர் ராஜசேகர்.

மிஸ்டர் மியாவ்

துவரை இல்லாத அளவுக்கு அஜித் பட விற்பனையில் சாதனை படைக்கத் திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தியாகராஜன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஏற்கெனவே தயாரித்த ‘தொடரி’, ‘சத்ரியன்’ இரண்டுமே எதிர்பார்த்த லாபம் இல்லையென்பதால், அஜித் படத்தை வைத்து ஈடுகட்ட நினைக்கிறார்கள். அதற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஏரியாவாக விற்பனையில் இறங்கிவிட்டது.

வில்லன் ரோல்களைத் தேடிப் பிடித்து நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் பாபி சிம்ஹா, ஹரி இயக்கத்தில் `சாமி-2’வில் வில்லனாக நடிக்க இருக்கிறார். த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படம், `சென்னை 28’ இரண்டாம் பாகம் போலவே, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமாம்.

விவாகரத்து பெற்ற பிறகு, அடுத்தடுத்து தமிழ், மலையாளப் படங்களில் செம பிஸியாக இருக்கிறார் அமலாபால். `என்னைச் சுற்றி எரியும் நெருப்பைவிட, எனக்குள் எரியும் நெருப்பு பிரகாசமாக இருப்பதால்தான் நான் உயிர்ப்புடன் இருக்கிறேன்’ என்று ட்வீட் செய்திருக்கிறார் அவர்.

சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெமினி கணேசனாக நடித்துவருகிறார் துல்கர் சல்மான். அடுத்ததாக ரா.கார்த்திக் இயக்கத்தில் தமிழில் தனது நான்காவது படத்துக்கும் இவர் ரெடி. பயணம் சார்ந்த படமாக உருவாக இருக்கிறது அது. துல்கருக்கு ஜோடியாக நான்கு முன்னணி ஹீரோயின்களை  நடிக்க வைக்கத் திட்டமாம்.

‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் கெளதம்கார்த்திக். தந்தை மாதிரி நிச்சயம் தன்னால் நடிக்க முடியாது எனக் கருதும் கௌதம், ‘‘அப்பா பெயரைக் கெடுத்துவிடக் கூடாது’’ என்கிறாராம். 

மியாவ் பதில்

`விவேகம்’ பட மியூசிக்கில் அப்படி என்ன ஸ்பெஷல்?


ஜித் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆவதால், அதை `விவேகம்’ படம் கொண்டாட இருக்கிறது. அஜித்தின் வாழ்க்கையைச் சொல்லும் ட்ரெண்டியான தீம் மியூஸிக்கில் ஒரு பாடலை இசையமைத்திருக்கிறார் அனிருத். அந்தப் பாடலுக்காக 50 ட்யூன்களை அஜித்துக்குப் போட்டுக்காட்டி, அதில் அஜித் தேர்ந்தெடுத்த ட்யூனில்தான் தீம் பாடல் ரெடியாகியுள்ளது. பாடல் ரிலீஸானால், நிச்சயம் அது `அஜித் ஆன்தம்’ ஆக அவர் ரசிகர்களால் கொண்டாடப்படும்.