பிரீமியம் ஸ்டோரி

`வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, `ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் - சூரி - இயக்குநர் பொன்ராம் கூட்டணி இணைகிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்குகிறது. சிவகார்த்திகேயன், சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுக்க இருக்கிறார்கள். இதில் சமந்தா கலந்துகொள்ளவில்லை. தற்போது விஜய் ஜோடியாக நடித்துவரும் அவர், அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார். சிம்ரன், நெப்போலியன், லால் என வெரைட்டியான காம்பினேஷனில் உருவாகிறது படம். 

மிஸ்டர் மியாவ்

‘விஜய் 61’ படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு டாக்டர் வேடம். அதேபோலத் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ படத்தில் அவரோடு ஜோடி சேரும் ரகுல் ப்ரீத் சிங்குக்கும் டாக்டர் வேடம். இதைக் கேள்விப்பட்ட இருவரும், வாட்ஸ்அப்பில் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மிஸ்டர் மியாவ்


வி
ஜய், தனுஷ், விஷால், சூர்யா என எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். பிற மொழிகளிலிருந்தும் அழைப்பு வருகிறதாம். படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகிவருவதால், கெத்து காட்டுகிறாராம் கீர்த்தி. திடீரென 15 நாள்கள் இவரைத் தொடர்புகொள்ள முடியவில்லையாம். ‘இந்த எண் உபயோகத்தில் இல்லை’ என்று வர, தயாரிப்பாளர்கள் செம ஷாக். பதறியடித்து கீர்த்தியின் அம்மாவுக்கு போன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய ரோலில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். பத்து நாள்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டதை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன. 

‘நஸ்ரியா கர்ப்பமாக இருக்கிறார்’ என்ற செய்திதான் மலையாளக் கரையோரத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அதற்கு ஏற்றதுபோல நஸ்ரியாவின் கணவர் ஃபகத் பாசிலும் சில பட நிகழ்ச்சிகளைக் கடைசி நேரத்தில் ரத்து செய்ய, பலரும் நஸ்ரியாவுக்கு போன் செய்து வாழ்த்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கடுப்பான நஸ்ரியா, வதந்திகளை மறுத்திருக்கிறார். 

மிஸ்டர் மியாவ்

‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து, பாலிவுட் நடிகைகளுக்கு ஹூமாவின் மீது லைட்டாகப் பொறாமையாம். இப்போது ரஜினிக்கு ஜோடி ஈஸ்வரி ராவ் எனத் தெரிய வர, பலரும் ஹூமாவுக்கு போன் போட்டு கலாய்க்கிறார்களாம்.

மியாவ் பதில்

ரஜினியின் `2.0’, ரிலீஸுக்கு முன்பே தயாரிப்புச் செலவை சம்பாதித்துவிட்டதாமே?

ரஜினியின் இந்த மெகா பட்ஜெட் படத்தை வைத்து மொத்தமாக 1,000 கோடி ரூபாயை வசூலித்துவிட வேண்டும் என்பதுதான் படக்குழுவின் இலக்கு. `2.0’ படத்துக்கான இந்தி திரையரங்க உரிமை 80 கோடி ரூபாய்க்கும், டி.வி உரிமை 30 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதியை, பட ரிலீஸுக்கு முன்பே படக்குழு சம்பாதித்துவிட்டது. சாட்டிலைட், இணையதள உரிமை என இன்னும் சில விற்பனைகளையும் முடித்துவிட்டால், பட ரிலீஸுக்கு முன்பே தயாரிப்புக்கு ஆன மொத்த செலவான 400 கோடி ரூபாயைச் சம்பாதித்துவிடும். ரிலீஸ் நேர விற்பனைகளையும் சேர்த்தால், 1,000 கோடி ரூபாய் சாத்தியமே என்று சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு