Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

சாதி மறுப்பு திருமணத்தையடுத்து நிகழும் ஆணவக்கொலை அவலத்தைப் பற்றிய மராத்தி படம் ‘சாய்ரத்’. ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்த இந்தப் படம், தேசிய விருது பெற்றது. ‘சாய்ரத்’ கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. `லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க இருக்கிறார். புதுமுகங்களையே நடிக்க வைக்கத் திட்டமாம்!

ரு நிமிட சீன் என்றாலும் பிரமாண்டம் காட்டும் ஷங்கரின் ‘2.0’ பட இசை வெளியீட்டு விழா எப்படியிருக்கும் என்பது, பலரின் எதிர்பார்ப்பு. ஜனவரியில் படம் வெளியாக இருப்பதால், இசை வெளியீட்டை அக்டோபர் மாதம் துபாயில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்த விழாவில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் கலந்துகொள்ளப் போகிறது.

மிஸ்டர் மியாவ்

சினிமா என்ட்ரிக்கு முன்பே யோகா டீச்சராக இருந்தவர் அனுஷ்கா. அதனால் எப்போதுமே அனுஷ் செம ஃபிட். கடைசியாக நடித்த `பாகுபலி’, `இஞ்சி இடுப்பழகி’ படங்களுக்காக உடல் எடையை ஏற்றி இறக்கியதில், அவரால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. மீண்டும் பழைய ஃபிட்னெஸுக்கு வர, தீவிர யோகா பயிற்சியில் இறங்கி இருக்கிறார் அனுஷ்கா. அதனால், இப்போதைக்குப் படங்களுக்கு
`நோ’ சொல்லிவிட்டார்.

கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’. இயக்கம், புதுமுக இயக்குநர் ஆறுமுக குமார். பழங்குடியின மக்களின் தலைவனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக எட்டு கெட்டப்களில் வருகிறார். இதுவரை ஏழு கெட்டப்களுக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது.

ந்த நடிகையும் செய்யாத வித்தியாசத்தைச் செய்திருக்கிறார் நிக்கி கல்ராணி. ‘மரகத நாணயம்’ படத்தில் இவருக்கு டப்பிங் ஆண் வாய்ஸ். இந்த மாதிரி வெரைட்டியான ரோலில் நடிக்கவே நிக்கிக்கு ஆசையாம். தமிழில் நிறையப் படங்கள் கமிட் ஆவதால், சென்னையிலேயே வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். நயன்தாரா வசிக்கும் அப்பார்ட்மென்டில்தான் நிக்கியும் இருக்கிறார்.

நயன் ‘A’ பிளாக், இவர் ‘B’ பிளாக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

மியாவ் பதில்

படப்பிடிப்புகளில் நயன்தாரா கடுமையாக நடந்துகொள்வதாகச் செய்தி உலவுகிறதே?

தை கேட்பதில் தொடங்கி படம் ரிலீஸ் வரை சின்சியராக உழைப்பவர் நயன்தாரா. அந்த அர்ப்பணிப்புக்குக் கிடைத்த பரிசுதான் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம். நேரத்துக்குப் படப்பிடிப்பில் ஆஜராவார். சொன்ன நேரத்தில் மேக்கப் போட்டு ரெடியாகிவிடுவார். சீன் இல்லையென்றால், கேரவனில் ரெஸ்ட் எடுக்கும் பழக்கம் நயனுக்குக் கிடையாது. எந்த நேரமும் ரிகர்சல் பார்த்துக்கொண்டிருக்கும் சின்சியர் நடிகை என்றாலும், ஒட்டுமொத்த யூனிட்டையும்  தனக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்கிறாராம். ‘கதையில் மாற்றங்கள் சொல்கிறார், சீன்களில் தொடங்கி காஸ்ட்யூம் வரை எல்லாவற்றிலும் தலையிடுகிறார்’ எனப் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள். தன் விருப்பத்துக்கு மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவதால் சக நடிகர்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோருமே அவர்மீது கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்கள்.