Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கான `மெர்சல்’ டைட்டில், அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உலக ட்ரெண்ட்டானது. அதுமட்டுமின்றி, 10 லட்சம் முறைக்குமேல் `மெர்சல்’ என்ற பெயர் ட்விட்டரில் மென்ஷன் செய்யப்பட்டதும், புதிய சாதனை. 

மிஸ்டர் மியாவ்

• அஜித் நடிக்கும் படங்களுக்கு மும்பையில் ஷூட்டிங் நடத்தியது உண்டு. ஆனால், இந்தியில் வெளியானது இல்லை. `விவேகம்’ படம் முதன்முறையாக மும்பைக்கு இந்தியிலும் செல்ல இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி, இந்தியிலும் `விவேகம்’ படம் டப்பிங் செய்யப்படுகிறது. இந்தியாவில் 2,000 திரையரங்குகளிலாவது படத்தைத் திரையிட, தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

• விஜய்க்கு பல பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல, கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் வித்தியாசமாக ஓவியத்தில் வாழ்த்துச் சொல்லி, விஜய்க்கே ‘மெர்சல்’ காட்டியிருக்கிறார். விஜய் உருவத்தை அவரே வரைந்து, ‘என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்... பல கோடி ரசிகைகளில் ஒருத்தி’ என்ற டேக் லைனுடன் அந்த ஓவியத்தை இணையத்தில் பகிர, ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி.

•   சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படம் செப்டம்பரில் ரிலீஸ். அதன் சாட்டிலைட் உரிமையை பல கோடி ரூபாய் கொடுத்து விஜய் டி.வி கைப்பற்றியிருக்கிறது. முந்தைய படமான `ரெமோ’வுக்குக் கொடுத்ததுபோல இரண்டு மடங்கு தொகையாம்! 

மிஸ்டர் மியாவ்

• அஞ்சலியும் ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி, ஊர் அறிந்த விஷயம். `எப்போது திருமணம்?’ எனக் கேட்டால், இருவருமே எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இருவருக்குமே பட கமிட்மென்டுகள் இருக் கின்றன. அதையெல்லாம் முடித்துவிட்டே திருமணம் செய்துகொள்வார்கள் எனச் சொல்லப்படுகிறது.

• கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் ரம்யா நம்பீசன். இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு நெகட்டிவ் ரோல். `கெட்ட பையன் சார் இவன்’ என்ற டைட்டிலுடன் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

மியாவ் பதில்

கவுண்டமணி பற்றி அடிக்கடி வதந்தி பரவுகிறதே, இதற்கு அவரின் ரியாக்‌ஷன்தான் என்ன?

ன்றுபோலவே இன்றும் அதே நக்கல், நையாண்டி என ஆரோக்கியமாக இருக்கிறார் கவுண்டமணி என்பதே உண்மை. அவரைப் பற்றித் தெரியாத சிலர் ஊதிவிடும் பலூன்கள்தான் இந்த வதந்திகள். தினமும் காலை ஒரு மணி நேரம் வாக்கிங். குடும்பத்தினருடன் ஜாலி அரட்டை. அடுத்து நடிக்கவிருக்கும் படத்துக்கான கதை விவாதம்... என தினமும் செம ஆக்டிவ்வாக இருக்கிறார் கவுண்டமணி. தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பும் நபர்மீது நடவடிக்கை எடுக்க, அவரின் வழக்குரைஞர் மூலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறார். வதந்தியாளர்கள் கவனத்துக்கு...