Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

‘சதுரங்க வேட்டை 2’வில் அர்விந்த் சுவாமிக்கு மனைவியாக, நான்கு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் த்ரிஷா. ஆனாலும் இருவருக்குமே எதிரெதிர் துருவத்தில் இருப்பது போன்ற கேரக்டராம். சமீபத்தில்தான் படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைத்திருக்கிறது படக்குழு.

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`இறுதிச்சுற்று’ ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா, விஜய்சேதுபதியிடம்தான் முதலில் கதை சொன்னார். அதன்பிறகு சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லியிருக்கிறார். இருவருமே தயங்க, இப்போது சுதாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருப்பது சூர்யா. இந்தப் படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் தகவல்.

மிஸ்டர் மியாவ்

விக்னேஷ் சிவனிடம் அவரின் திருமணம் பற்றிக் கேட்டாலே முகம் வாடிவிடுகிறதாம். அவருக்கும் நயன்தாராவுக்குமான நெருக்கம், சீக்கிரமே திருமணமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரிடம் திருமணம் பற்றி நெருங்கிய நண்பர்கள் கேட்டாலே, முகத்தில் சோக ரேகை படர்கிறதாம். ‘‘விக்னேஷுக்கும் நயன்தாராவுக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு இருக்கலாம்’’ என்று நண்பர்கள் கவலையோடு சொல்கிறார்கள்.  

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

அமிதாப் பச்சனுடன் நடித்த ‘பிங்க்’ கொடுத்த வெற்றியால் பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார் டாப்சி. அடுத்தடுத்து இந்திப் படங்களை மட்டுமே டிக் செய்கிறார். ‘ஜூட்வா 2’-வில் வருண் தவானுடன் நடித்துவருகிறார். அடுத்ததாக மற்றுமொரு படத்தில் வக்கீல் ரோலிலும் நடிக்கிறார். சின்ன ரோல் என்றாலும் மறுக்காமல் யெஸ் சொல்லி, நடிப்பில் டாப் பெர்ஃபார்மென்ஸ் கொடுப்பதால், நிறைய பாலிவுட் வாய்ப்புகள் டாப்சியைத் தேடிவருகின்றன.  

மிஸ்டர் மியாவ்

அஜித்தின் `விவேகம்’ ரிலீஸாகும் ஆகஸ்ட் 11-ம் தேதி, ராமின் `தரமணி’யும் வெளியாகவிருக்கிறது. ‘தலையோடு மோதுறோம்’ எனக் கெத்து காட்டுகிறார் தயாரிப்பாளர். சென்சார் போர்டு சொன்ன 11 சீன்களை கட் செய்யாமல்,  `A’ சான்றிதழுடனே படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இளசுகளை இந்தப் படம் நிச்சயம் ஈர்க்கும் என்பதால், அஜித் படத்தோடு போட்டியிட்டு கல்லா கட்டிவிடலாம் என்று நம்புகிறார்கள்.

மியாவ் பதில்

‘காலா’, ‘2.0’ இரண்டுமே ஒரே நேரத்தில் தயாராகிவருகின்றனவே, எது முதலில் ரிலீஸ்?

`2.0’ பட ஷூட்டிங் முடிந்த கையோடு ‘காலா’ படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் ரஜினி. மும்பையில் எடுக்கவேண்டிய காட்சிகள் இரண்டு கட்டங்களாக முடிந்துவிட்டன. இனி, தாராவி செட் போட்டு சென்னையில் மீதிக் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள். பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது விரைவில் ரிலீஸ் ‘காலா’தான். ஏனெனில், `2.0’-வில் கிராஃபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால், இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸாக வேண்டியது, அடுத்த வருடம் தள்ளிப்போகிறது. அதற்கு முன்னதாகவே ‘காலா’ முடிந்துவிடும் என்பதால், இந்த வருட இறுதிக்குள் ரஜினி- பா.இரஞ்சித் காம்போவில் ‘காலா’ வருவார்!