Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

விக்ரமின் `துருவ நட்சத்திரம்’ படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்துவருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் டிடி. இவரின் கேரக்டர் என்ன என்பதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

தமிழில் ஹோம்லியாக நடிக்கும் ரெஜினா, தெலுங்கில் படுகவர்ச்சி காட்டுகிறார். ‘மாநகரம்’ சந்தீப் கிஷன் ஜோடியாக தெலுங்கில் ரெஜினா நடித்த படம் ‘ரா ரா கிருஷ்ணய்யா’. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இப்போது தமிழில் ‘மகேந்திரா’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதனால் இங்கு தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படுமோ என்று கவலையில் இருக்கிறார் ரெஜினா.

மிஸ்டர் மியாவ்

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கைக் கதை படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரி இயல்பாகவே கொஞ்சம் பருமனானவர். அதனால், கேரக்டருக்குப் பொருத்தமாக கீர்த்தியைக் கொஞ்சம் வெயிட் போடச் சொல்லியிருக்கிறார்கள். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக வெயிட் போட்ட அனுஷ்கா, `பாகுபலி’ நேரத்தில் எடையைக் குறைக்கக் கஷ்டப்பட்டார். அதைக் காரணமாகச் சொல்லி, ‘‘வெயிட் போட முடியாது; தேவையென்றால், கிராஃபிக்ஸில் பார்த்துக்கொள்ளுங்கள்’’ எனக் கறாராகச் சொல்லி விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஒரே படத்தில் பல நடிகர்கள் பங்குபெறும் ‘மல்டி ஸ்டார் காஸ்டிங் படங்கள்’ பாலிவுட்டில் சகஜம். தமிழில் இப்போதுதான் இந்தக் கலாசாரம் தொடங்கியிருக்கிறது. ‘சங்கமித்ரா’ (ஜெயம் ரவி, ஆர்யா), ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ (விஷால், கார்த்தி) வரிசையில் அடுத்து ஜீவா, ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள். ஜீவாஷங்கர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மிஸ்டர் மியாவ்

பிரபுதேவா, ஹன்சிகா நடிக்கும் ‘குலேபகாவலி’ படத்துக்கான பாடல் காட்சி ஒன்றைப் பிரமாண்டமாகப் படமாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலுக்காக இரண்டு கோடி ரூபாய் செலவில் நான்கு செட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வண்ண விளக்குகள், நவீன கேமராக்கள் என உருவாகிவரும் இந்தப் பாடல், படத்துக்கு ரொம்பவே ஸ்பெஷலாம்!

மிஸ்டர் மியாவ்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி போன்ற ஒரு கேரக்டரில் த்ரிஷா நடிக்கும் மலையாளப் படம் ‘ஹே ஜூட்’. நிவின் பாலி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஷ்யாம்ப்ரசாத் இயக்குகிறார். காதலும் காதல் நிமித்தமும்தான் படம். காதல் காட்சிகள் கோவாவில் படமாகிவருகின்றன. இந்தப் படத்துக்காக 25 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் த்ரிஷா.

மியாவ் பதில்!

மிஸ்டர் மியாவ்

`2.0’ தமிழ்ப் படத்துக்கான புரொமோஷன் பலூனை ஹாலிவுட்டில் பறக்கவிடக் காரணம் என்ன?

விளம்பரம்தான் எந்த ஒரு படத்தின் வெற்றியையும் உறுதிசெய்யும் என்பதில் தெளிவாக இருக்கிறது லைகா நிறுவனம். `2.0’ படத்தின் மொத்த பட்ஜெட்டில் 10 சதவிகித நிதி, விளம்பரத்துக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. தயாரிப்புக்கு ஆன செலவை, இந்தியாவில் மட்டும் ரிலீஸ் செய்து லாபம் பார்க்க முடியாது என்பதால், ஹாலிவுட்டில் பறக்கவிட்டு ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது பட நிறுவனம். ஹாலிவுட்டில் மட்டுமின்றி, பல நாடுகளிலும் இந்த ராட்சத பலூனைப் பறக்கவிட இருக்கிறார்கள். இப்போதிருந்தே `2.0’ பிசினஸைத் தொடங்கிவிட்டது தயாரிப்புத் தரப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism