பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

`வனமகன்’ கொடுத்த அறிமுகத்தால், பல படங்களில் கமிட்டாகி வருகிறார் சாயிஷா. முதல்கட்டமாக பிரபுதேவா இயக்கத்தில் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தில் நடிக்கிறார். விஷால், கார்த்தி என இரு நாயகர்களில் யாருக்கு இவர் ஜோடி என்பது சஸ்பென்ஸ்.

மிஸ்டர் மியாவ்

பைனான்ஸ் பிரச்னையால் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தள்ளிப்போய்விட்டதில், ரெஜினா செம அப்செட். படங்கள் தொடர்ந்து வெளிவந்தால்தானே ட்ரெண்டிங்கில் இருக்க முடியும்! இந்தப் படத்தில் வேலைக்காரப் பெண்ணாக வரும் ரெஜினாவை, எஸ்.ஜே.சூர்யா கொலை செய்துவிடுவார். பேயாக வரும் ரெஜினாவின் பழிவாங்கல்தான் கதை.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மலையாளக் கரையில் மிளிரும் மஞ்சு வாரியர், தமிழில் என்ட்ரி ஆகிறார். அறிவழகன் இயக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தில் லீட் ரோல் இவர்தான். ‘36 வயதினிலே’ மாதிரி சாஃப்ட்டாக இல்லாமல், ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்துவாராம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் படம் தயாராகி இருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

`கொடிவீரன்’ படத்தில் பூர்ணாவுக்கு நெகட்டிவ் ரோல். சசிகுமாருக்கு வில்லியாக நடிக்கிறாராம். ஏற்கெனவே ‘சவரக்கத்தி’யில் கர்ப்பிணி கேரக்டரில் நடித்திருக்கிறார். படம் கிடைத்தால் போதும் என்றில்லாமல், வெரைட்டியான கேரக்டரைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என்பதே இவரின் திட்டமாம்.

மிஸ்டர் மியாவ்

`காலா’ முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் ரஜினி. மருத்துவரின் அறிவுரைப்படி மூன்று வார ஓய்வு எடுத்துக்கொண்டு, இந்த மாத இறுதிக்குள் ‘காலா’ அடுத்தகட்ட ஷூட்டிங்கில் ரஜினி கலந்துகொள்வார். அதற்காக ‘தாராவி’ செட் சென்னையில் தயாராகிவருகிறது.

மிஸ்டர் மியாவ்

மலையாளத்தில் ஹிட்டடித்த, `மகேஷின்டே பிரதிகாரம்’ தமிழ் ரீமேக்கை இயக்குகிறார் பிரியதர்ஷன். உதயநிதிக்கு, இதில் இரண்டு ஜோடி. நமீதா பிரமோத் ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த நிலையில், மற்றொரு நாயகியாக பார்வதி நாயரை டிக் அடித்திருக்கிறார்கள்.

மியாவ் பதில்

சாட்டிலைட் உரிமையை வாங்குவதில் டி.வி நிறுவனங்களுக்குள் போட்டா போட்டியாமே?

மாம்! ஆனால், பெரிய பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றுவதில் மட்டுமே போட்டி நடக்கிறது. சமீபத்தில் ‘2.0’ உரிமையைப் பல கோடி ரூபாய்க்குக் கைப்பற்றிய   ஜி டி.வி நிறுவனம், தற்போது `மெர்சல்’ படத்தையும் வாங்கிவிட்டது. சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ பட உரிமையை விஜய் டி.வி கைப்பற்ற, அதற்குப் போட்டியாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் உரிமையை சன் டி.வி நிறுவனம் வாங்கியிருக்கிறது. அந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில்கூட உறுதியாகவில்லை. நடிகர்களும், படத்தின் பட்ஜெட்டும்தான் சாட்டிலைட் விற்பனையை நிர்ணயிக்கிறது. சிறு பட்ஜெட் படங்களை எந்த டி.வி நிறுவனமும் கண்டுகொள்வதே இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு