Published:Updated:

”சென்சார், ஸ்ட்ரைக்... எதுவும் இல்லை!” - பொழுதுபோக்கின் எதிர்காலம் நெட்ஃபிளிக்ஸ்

விகடன் விமர்சனக்குழு

ஜியோவின் இன்டர்நெட் புரட்சிக்கு பிறகு இந்தியாவில் இணையச் சந்தைக்கு பெருமதிப்பு உண்டாகியுள்ளது. அமேசான் போன்ற 'ஸ்ட்ரீமிங் நெட்ஒர்க்' திரைப்படங்களை வாங்கி ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் சொந்தமாக பல தயாரிப்புகளை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது.

”சென்சார், ஸ்ட்ரைக்... எதுவும் இல்லை!” - பொழுதுபோக்கின் எதிர்காலம் நெட்ஃபிளிக்ஸ்
”சென்சார், ஸ்ட்ரைக்... எதுவும் இல்லை!” - பொழுதுபோக்கின் எதிர்காலம் நெட்ஃபிளிக்ஸ்

மீப காலமாக யூடியூப் பக்கம் சென்றாலே வாசலைத் திறப்பது நெட்ஃபிளிக்ஸின் விளம்பரங்களே. எந்தக் காணொளியை பார்த்தாலும் ஆரம்பத்திலோ, இடையிலோ, முடிவிலோ நெட்ஃபிளிக்ஸிடமிருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அந்த விளம்பரங்களைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.

உலகம் முழுக்க முக்கால்வாசி நாடுகளுக்கு இணையம் மூலம் வீடியோக்களை ஒளிபரப்புகிறது நெட்ஃபிளிக்ஸ். வெப் சீரிஸ், திரைப்படங்கள் என தன் ஒளிபரப்புக்காக பிரத்யேகமாக பல தயாரிப்புகளை வழங்கிக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வைத்துள்ள பெரிய கை.

இவையெல்லாம் ஏதோ நேற்று தோன்றியதல்ல. கிட்டத்தட்ட 1997 ம் ஆண்டே அஞ்சல் மூலம் DVD விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் கேபிள், செட் ஆப் பாக்ஸுகளுக்கு பதில் இணையம் மூலம் அனைத்து விதமான ஒளிபரப்புகளையும் காணும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இந்தியாவில் 2016 க்கு பிறகு அடியெடுத்து வைத்த நிறுவனம் இங்கு தன் வெற்றியைக் கணிசமாக நிகழ்த்தியது. மேலும் ஜியோவின் இன்டர்நெட் புரட்சிக்கு பிறகு இந்தியாவில் இணையச் சந்தைக்கு பெருமதிப்பு உண்டாகியுள்ளது. அமேசான் போன்ற 'ஸ்ட்ரீமிங் நெட்ஒர்க்' திரைப்படங்களை வாங்கி ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் சொந்தமாக பல தயாரிப்புகளை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் பல முன்னணி இயக்குநர், நடிகர், நடிகைகள் வெப் சீரிஸ்கள் மேல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதல் ஒரு மாதத்திற்கு இலவசமாகச் சேவையும் (அதேதான்) பின் மாதத்திற்குக் குறைந்த பட்சம் 8 டாலர் வரை (ஜூங்கா விஜய் சேதுபதி போல தற்போதைய மதிப்பிற்கு ×69 என பெருக்குங்க) கட்டணம் செலுத்த வேண்டும். ஏறத்தாழ 500 ரூபாய். நம்ம ஊர் கேபிளை விட மூன்று மடங்கு அதிகம். ஆனாலும், அது தரும் கண்டெண்ட்க்காக கொடுக்க தயாராக இருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

தெருக்கூத்து, கிராமிய கலைகள், நாடகம் போன்றவற்றை காலி செய்துவிட்டு எப்படி வெள்ளித்திரையும் சின்னதிரையும் உருவானதோ, அதற்கே விபூதி அடிக்கப்போகிறது இந்த இணையத்திரைகள். காலத்தின் கட்டாயம் அவ்வாறு உள்ளது. உலக அளவில் வில்ஸ்மித் உள்படப் பெரிய நட்சத்திரங்கள் முதல் பலர் திரைப்படங்களை வெளியிட்டு லாபம் பார்க்கின்றனர். பாலிவுட்டிலும் பலர் களமிறங்கி விட்டனர். வருடத்திற்கு 200 படங்கள் வரை வெளியாகும் தமிழ் சினிமாவில் அனைத்தும் வெற்றியடைவதில்லை. ஆதலால், இது போன்ற மீடியம்கள் சினிமாவிற்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்க வாய்ப்புள்ளது. இது போன்ற ஐடியாக்களை கமல், சேரன் போன்றவர்கள் முன்பே முயன்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃபிளிக்ஸின் பெரிய பிளஸ் இன்னும் சென்சார் கண்களில் படாமல் இருப்பதே. எனவே, வெளிப்படையான கருத்துக்களுடன் படைப்பாளர்கள் இதை அணுகலாம். ஆனால், அதே நேரத்தில் பாலியல் சம்பந்தமாக பல சர்ச்சைகளை நெட்ஃபிளிக்ஸ் சந்தித்துள்ளது. உதாரணத்திற்கு, சமீபத்தில் இதில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற பாலிவுட் வெப் சீரிஸில் பெண்களின் பாலியல் வேட்கையை வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளது என்ற கண்டனத்துக்குள்ளானது.

காலத்தின் போக்கும் இணையத்தின் வளர்ச்சியும் அடுத்த தலைமுறைக்கான 'என்டர்டெய்மென்ட்களை' உருவாக்கிக்கொண்டுள்ளது. வீட்டில் டிவி சீரியல் பார்க்கும் அம்மாக்களை ஏளனம் செய்த 4G தலைமுறை இன்று பேஸ்புக்கில் தவற விட்ட சீரிஸ் கதையை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உலகில் சர்வைவ் ஆக இன்றைய தேவை ஒன்றே ஒன்றுதான். அப்டேட்! அப்டேட் ஆகிக்கொள்ளுங்கள்!