‘காக்கா முட்டை’யை அடுத்து ‘வட சென்னை’ படத்திலும் சென்னை தமிழ் பேசி நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். ‘‘காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலும், நெரிசலான மீன் மார்க்கெட்டிலும் மீன்களைக் கையில் சுமந்தபடி நடித்த அனுபவம் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும்’’ என்கிறார் ஐஸ்வர்யா.

ஹன்சிகா, தென்னிந்தியப் படங்களில் நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிகிறது. தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்தவர், இப்போதுதான் முதல் மலையாளப் படத்தில் நடிக்கிறார். ‘‘மோகன்லாலின் ‘வில்லன்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகம் ஆவது ரொம்பவே ஸ்பெஷல்’’ என்கிற ஹன்சிகா, ‘‘இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நடிப்பு மட்டுமே இலக்கு’’ என்று உறுதிமொழி எடுத்திருக்கிறார்.

பொதுவாக திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடத்தப்படும். பட்ஜெட் நெருக்கடி காரணமாக, சில படங்களின் இசை, நேரடியாக இணையத்தில் வெளியாகும். ‘இதுவரை யாரும் இசை வெளியீடு நடத்தாத இடத்தில் செய்ய வேண்டும்’ என்று, விக்ரமின் `ஸ்கெட்ச்’ பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியை, லண்டனில் நடத்த முடிவெடுத்திருக்கிறது படக்குழு.

`வனமகன்’ சாயிஷா ஹைதராபாத்தில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். இதற்கு முன்னர் சமந்தா வசித்த வீடுதான் அது. அந்த வீட்டுக்குச் சென்ற நேரத்தில்தான் சமந்தா டாப் நடிகையானாராம். அதே ஃபார்முலா தனக்கும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சாயிஷா.

சிவப்புத் தாவணியில் பக்கா வில்லேஜ் பெண்ணாக இருக்கும் சமந்தாவின் போஸ்தான், சமீபத்திய வைரல் போட்டோ. இது, சமூக வலைதளங்கள் தொடங்கி பலரின் மொபைல் ஸ்க்ரீன் வரை இடம்பிடித்துவிட்டது. இந்தப் புகைப்படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் பட ஷூட்டிங்கின்போது க்ளிக்கியது. இந்தப் படம் முடிந்த கையோடு, திருமண வேலைகளில் மும்முரமாக இறங்குகிறாராம் சமந்தா.

`நடிச்சா ஹீரோதான்’ என்ற தீர்மானத்தில் இருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, `இறைவி’ கொடுத்த வரவேற்பு நெகிழ வைத்துவிட்டதாம். எனவே, கேரக்டர் ரோல்களில் களமிறங்கிவிட்டார். ஆனாலும், சம்பள விஷயத்தில் இறங்கி வரவில்லை. விஜய்க்கு வில்லனாக `மெர்சல்’ மற்றும் மகேஷ்பாபுவுடன் `ஸ்பைடர்’ என பிக் பட்ஜெட் படங்களில் நடிப்பதால், உற்சாகமாக இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

மியாவ் பதில்

ரஜினியின் ட்வீட், அரசியல் நிலவரம், ஜி.எஸ்.டி என நிறைய விஷயங்கள் பற்றி கமல் பேசியிருக்கிறாரே, ரஜினியும் கமலும் சந்தித்துப் பேச வாய்ப்பு இருக்கிறதா?

ரஜினியின் `காலா’ படப்பிடிப்பும், கமல் நடத்தும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங்கும் நடப்பது ஒரே இடத்தில்தான். சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகில் உள்ள ஈ.வி.பி கார்டன்தான் அது. இரண்டுக்குமான செட்டுகள் அருகருகே இருப்பதால், இருவரும் சந்தித்துக்கொள்ளவும் அரசியல் நிலவரம் முதல் கேளிக்கை வரி வரை பேசவும் வாய்ப்பு இருக்கிறது.