Published:Updated:

‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா!” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி

‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா!” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி

சின்ன ரோல்தான் ஆனாலும் தமிழ்படம் 2-வில் எளிதாக அடையாளம் காணப்பட்டவர். ஆமாம்... 'இறுதிச் சுற்று' ரித்திகா சிங்கைப் போல வந்து ஆளைக் கொள்ளும் அழகியேதான்!

‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா!” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி

சின்ன ரோல்தான் ஆனாலும் தமிழ்படம் 2-வில் எளிதாக அடையாளம் காணப்பட்டவர். ஆமாம்... 'இறுதிச் சுற்று' ரித்திகா சிங்கைப் போல வந்து ஆளைக் கொள்ளும் அழகியேதான்!

Published:Updated:
‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா!” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி

தமிழ்ப் படம் 2 -விலன் மூலம் அகில உலக சூப்பர் ஸ்டாராக அறிவித்துக் கொண்டாரோ அறிவிக்கப்பட்டாரோ தெரியவில்லை. ஆனால், அதே படத்தில் நடித்ததன் மூலம் ஃப்ரெண்ட்ஸ் மத்தியில் 'லவ்வபிள் பாக்ஸர்' என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார் நவ்யா சுஜி. 

``எனக்கு சொந்த ஊரு ஆந்திரா மாநிலம் விஜயவாடா... இன்ஜினீயரிங் முடிச்சுட்டு  இங்கே சென்னைக்கு ஒரு வேலைக்காக வந்தேன். ஐ.டி ஃபீல்டுல வேலை பார்த்துக்கிட்டே மாடலிங் பண்ணிட்டு இருந்தேன்... ஆனா மாடலிங் பண்றதுக்கு வீட்டுல அவ்ளோ சப்போர்ட் இல்லை... அப்புறம் ஒரு வழியா போராடித்தான் அவங்களை சம்மதிக்க வெச்சேன்... இனிமே அந்த நம்பிக்கையைக் காப்பாத்த நிறைய நடிக்கணும்! அதுக்கான எனர்ஜியை தமிழ்ப் படம் 2 எனக்குக் கொடுத்திருக்கு!''

- மிகவும் நம்பிக்கையோடு பேசுகிறார் நவ்யா சுஜி. சின்ன ரோல்தான் என்றாலும் தமிழ்படம் 2-வில் எளிதாக அடையாளம் காணப்பட்டவர். ஆமாம்... 'இறுதிச் சுற்று' ரித்திகா சிங்கைப்போல வந்து 'தாவி' ஆளைக் கொல்லும் அந்த அழகியேதான்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``எப்படி கிடைச்சதுங்க தமிழ்படம் 2 வாய்ப்பு?''

``தமிழ்படம் 2-வுக்கு ஆடிஷன் நடந்துட்டு இருந்துச்சுனு ஃப்ரெண்ட் மூலம் கேள்விப்பட்டேன். நானும் போயிருந்தேன். அப்போ இந்த ரோலுக்கு நிறைய பேரு வந்து கலந்துக்கிட்டாங்க. நீங்க படத்துல பார்த்துருப்பீங்களே சேலை கட்டிக்கிட்டு லெட்டர் வாசிக்கிற சீன். அதுல வர்ற டயலாக் தான் என்னோட ஆடிஷனுக்கு எங்கிட்ட கொடுத்துப் பேசச் சொன்னாங்க. டயலாக் மொத்தமும் தெலுங்குல எழுதி பேசி காட்டினேன். அன்னைக்கு சாயங்காலமே திரும்ப  கூப்பிட்டு, 'யூ ஆர் செலக்டட்'னு சொல்லி கேரக்டரை விளக்குனாங்க. அது ‘இறுதி சுற்று’ல ரித்திகா சிங் ரோலோட ஸ்பூஃப்னு அப்போதான் தெரிஞ்சுச்சு! செம ஜாலியா ஓ.கே சொல்லிட்டா இந்த நவ்யா!''

``ஆமா, எப்படி ஒத்துக்கிட்டீங்க லிப்லாக்குக்கு..?''

``ஓடி வந்து எகிறி குதிச்சு சிவா கூட லிப்லாக் இருக்கும்னு ஆடிஷன் அப்போவே சொல்லிட்டாங்க. ‘எத்தனை டேக் போச்சு’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. முதல் டேக்குக்கு முன்னாடியே அமுதன் சார் எப்படி பண்ணனும்னு தெளிவா சொல்லிட்டார். அதனால ஒரே டேக்லயே ஓ.கே ஆகிடுச்சு. அதிகடேக் எல்லாம் போகல..!''

`` தமிழ்படம் 2 ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்துச்சு?''

``அந்த கேரக்டருக்கு நான் செலக்ட் ஆயிட்டேன்னு சொன்னதும் டென்ஷன் அதிகமாயிடுச்சு. ஷூட்டிங்ல தப்பு பண்ணிடகூடாதுன்னு திரும்ப திரும்ப ‘இறுதிசுற்று’ல ரித்திகா எப்படி பண்ணிருப்பாங்கன்னு பார்த்துக்கிட்டு எங்க அக்காவ நிக்கவச்சு கிட்டத்தட்ட ஒரு பத்து முறையாவது ஓடிவந்து ஜம்ப் பண்ணி பிராக்டீஸ் எடுத்தேன். 'போதும்டி நவ்யா. இதுக்கு மேல முடியாதுடி'னு ஒதுங்கிட்டா. ஷூட் அப்ப நான் ஏறிவந்து குதிச்சதும் சிவா உட்பட என்னோட நடிச்ச ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் இடுப்பை புடிச்சிட்டு நின்னுட்டாங்க. ஆர்வத்துல ஓடிவந்து வேகமா மோதியிருக்கேன். ரொம்ப பாவம்ல அவங்க. ஆனா, மொத்த டீமும் ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க. `நல்லா நடிச்சிருக்கேம்மா'னு சொன்னாங்க. அவங்களாலதான் இது எல்லாம் சாத்தியம்னு நம்புறேன். என்னை செலக்ட் பண்ணி நடிக்க வெச்ச அமுதன் சாருக்கு ஸ்பெஷல் நன்றி!''

``அடுத்து என்னென்ன படங்கள் பண்றீங்க..?''

``இப்ப மூணு படம் பண்ணிட்டு இருக்கேன். எல்லாமே வெரைட்டி ரோலாதான் இருக்கும். கண்டிப்பா படம் பார்க்குறவங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்னு நம்புறேன்...‘இந்தப் பொண்ணு செம ஆக்டர்பா’னு சீக்கிரமே பாராட்டுவாங்க பாருங்க!''

``சரி... உண்மையச் சொல்லுங்க. படத்துல தாவினதுபோல நிஜத்துல தாவியிருக்கீங்களா..?''

``ஹாஹாஹா... நான் சமத்துப் பொண்ணு. எனக்கு குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பார்த்தா ஈஸியா ஃப்ரெண்டாகிடுவேன். அவங்களைப்போல மாறி பழகுறதால அவங்கதான் என்மேல அப்படி தாவி அன்பை வெளிப்படுத்தியிருக்காங்க.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism