Election bannerElection banner
Published:Updated:

'' 'ரஜினி முருகன்' படத்துக்காக பல கஷ்டங்களை அனுபவிச்சோம்!" பொன்ராம்

'' 'ரஜினி முருகன்' படத்துக்காக  பல கஷ்டங்களை அனுபவிச்சோம்!" பொன்ராம்
'' 'ரஜினி முருகன்' படத்துக்காக பல கஷ்டங்களை அனுபவிச்சோம்!" பொன்ராம்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'சீமராஜா' படம் குறித்து இயக்குநர் பொன்ராம் பேட்டி.

''வெறுமென காமெடிப் படங்களை மட்டுமே இயக்குவது எனக்குப் பிடிக்காது. காமெடிக்குள்ள சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கணும். அந்தவகையில், 'சீமராஜா' படத்துல காமெடி ப்ளஸ் ஆக்‌ஷன் சேர்த்திருக்கேன். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துல சிவாவுக்கு ஆக்‌ஷன் இருக்காது. அவர் அடி வாங்குற மாதிரிதான் காட்சிகள் இருக்கும். இதுல ஆக்‌ஷனும் இருக்கும். சிவாவுடைய ஆக்‌ஷன் லெவல் படத்துல நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு!" மகிழ்ச்சியுடன் பேசுகிறார், இயக்குநர் பொன்ராம்.   

"சிவகாத்திகேயனுடனான உங்க நட்பைப் பற்றி சொல்லுங்க...?" 

" 'சிவா மனசுல சக்தி' படத்துல ரஜினி குரலுக்கு சிவாதான் டப்பிங் கொடுத்தார். அப்ப இருந்தே சிவா எனக்கும், ராஜேஷுக்கும் பழக்கம். ஆனால் அதிகம் பேசிக்கிட்டது கிடையாது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தோட கதையை சொல்றதுக்காக சிவாகிட்ட போன்ல பேசினேன். 'நேர்ல வாங்க பேசலாம்'னு சொன்னார். கதை சொன்னேன், படம் பண்ணோம். பிறகு குறுகிய காலத்திலேயே நெருங்கிய நண்பர்கள் ஆயிட்டோம். சினிமாவைத் தாண்டி எங்க ரெண்டுபேர் குடும்பமும் நல்ல நட்போட இருக்கோம். அவரோட சினிமா கமிட்மென்ட்ஸ் பத்தி என்கிட்ட பகிர்ந்துக்குவார், சில முடிவுகளுக்கு என்கிட்ட கருத்து கேட்பார். சிவகார்த்திகேயன், என் நல்ல நண்பன்."  

"சிவா - சூரி கூட்டணியை தொடர்ந்து பார்க்கிற ஆடியன்ஸுக்கு போர் அடிக்காதா?"  

"இவங்க ரெண்டுபேரோட கூட்டணியும் எப்போவுமே மக்களுக்குப் பிடிக்கும், ரசிப்பாங்க. இந்தப் படத்துல ரிப்பீட் காமெடிகள் வராத அளவுக்கு சீன்ஸ் வெச்சிருக்கோம். 'ஏன் திரும்பத் திரும்ப வந்து நிற்குற.. உன் மூஞ்சியைப் பார்த்து போர் அடிச்சிருச்சு'னு சொல்ற வசனம் படத்துல இருக்கு. முந்தைய படங்களைவிட இதில் வேற லெவல் காமெடியை எதிர்ப்பார்க்கலாம்!."  


''ஒரு படத்தை எடுக்குறது ஈஸி, ரிலீஸ் பண்றது கஷ்டம்னு பெரும்பாலான இயக்குநர்கள் சொல்றாங்க... உங்க கருத்து என்ன?"  

"பணம் வைத்து படம் பண்றவங்களைத்தான் தயாரிப்பாளர்னு சொல்வோம். இப்போ அப்படியில்ல. இப்போ இருக்கிற பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வட்டிக்குப் பணம் வாங்கித்தான் படம் பண்றாங்க. இப்படி வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் பண்ணும்போது, 75% பட்ஜெட்டுக்கும், 25% வட்டிக்கும் சேர்த்துதான், படத்தோட மொத்த பட்ஜெட்டா கணக்குல எடுத்துக்க வேண்டியிருக்கு. அதாவது, லாபத்துல வரவேண்டிய பணம், வட்டிக்குப் போயிடுது. இந்த வட்டியைக் கட்டுறதுக்கு குறைஞ்சது 30% எக்ஸ்ட்ரா நாம லாபம் பார்க்கணும். அப்போதான், தயாரிப்பாளருக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்கும். இந்த கந்துவட்டிப் பிரச்னை மட்டும் இல்லைனா, சினிமா சூப்பரா இருக்கும். கந்து வட்டிதான் சினிமாவை அடக்குது. அதுதான், ஒரு சினிமா ரிலீஸ் ஆகாம இருக்கிறதுக்கு முக்கியமான காரணம். 'ரஜினி முருகன்' பட சமயத்துல வட்டி பிரச்னையாலதான் படத்தை ரிலீஸ் பண்ணமுடியாம, பல கஷ்டங்களை அனுபவிச்சோம்."

"உங்க முதல் படமான 'திருத்தம்' பற்றி எங்கேயும் பெருசா பேசமாட்டேங்கிறீங்களே...?" 

"ஆமா, என் முதல் படம் 'திருத்தம்'தான். இப்படியொரு படம் ரிலீஸ் ஆனது பலருக்குத் தெரியாது. இந்தப் படத்தைப் பண்ணும்போது, எனக்குப் பல பிரச்னைகள். என் தம்பியோட இதய சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டது. இயக்குநர் ராஜேஷும், நானும் 'திருத்தம்' படத்தைப் பண்ணலாமானு நிறைய யோசிச்சோம். அட்வான்ஸ் வாங்கியாச்சேனு அந்தப் படத்தை முடிச்சுக் கொடுத்தேன். சீரியஸான ஜானர்ல நான் எடுத்த படம் அது. 'தூத்துக்குடி' ஹரிகுமார் நடிச்ச படம். அவருக்குத் தகுந்தமாதிரி கதையைக் கொஞ்சம் மாத்தியிருக்கணும், அதை என்னால பண்ணமுடியலை. என்னை நம்பி அந்த சூழ்நிலையில எனக்குப் படம் கொடுத்தவர், ஹரிகுமார். அதுக்காக, நான் அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். இனி வாழ்க்கையில் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கக்கூடாதுனுதான், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' கதையை காமெடியா எடுத்தேன். ஆக்சுவலா, இந்தப் படமும் சீரியஸ் ஜானர்லதான் இருந்தது."  

"எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்கப்போறார். சிவாகிட்ட என்ன சொல்லி அனுப்பிவெச்சிருக்கீங்க?" 

" 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' கதையை சிவாகிட்ட சொல்லுனு என்னை அனுப்பி வெச்சது, இயக்குநர் எம்.ராஜேஷ். அதேமாதிரி, இந்தமுறை ராஜேஷை சிவாகிட்ட நான் அனுப்பிவெச்சேன். சிவாவுக்கும் கதை பிடிச்சுப்போக, படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க."

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு