Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த ஓவியாவுக்கு,  `பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்கும் ஆதரவும் விளம்பரமும் ஓஹோ! சினிமாவில் அவரின் இரண்டாவது இன்னிங்ஸ் விரைவில் ஸ்டார்ட் ஆகும் போலிருக்கிறது. ஓவியா நடித்த ‘யாமிருக்க பயமேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவரை வைத்தே உருவாக்கும் முடிவில் இருக்கிறார் ஹீரோ கிருஷ்ணா. `பிக் பாஸ்’ முடிந்து ஓவியா வெளியே வந்த கையோடு ஷூட்டிங் போகிறார்களாம்.

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் மியாவ்

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கும் ஆர்த்தி, அவரைக் கிண்டல் செய்து வந்திருக்கும் மீம்களைப் பார்த்துக் கொதித்துவிட்டாராம். ‘இந்த மீம்களுக்கு ரியாக்ட் செய்தால், அதற்கும் மீம் போட்டுவிடுவார்கள்’ என்று வீட்டில் கண்டிக்க, சமூக வலைதளங்கள் பக்கமே தலை காட்டாமல் இருக்க முடிவுசெய்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

`ரெமோ’வைத் தொடர்ந்து ஆர்.டி.ராஜா தயாரிக்கும் `வேலைக்காரன்’, ரிலீஸுக்கு ரெடி. அடுத்தகட்டமாக ராஜா கதை எழுதித் தயாரிக்கும் படத்தில் ஹீரோ நிவின் பாலி. புதுமுக இயக்குநர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார். `ரெமொ’வைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.

மிஸ்டர் மியாவ்

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமாரின் அடுத்த படத்திலும் ஹீரோ விஜய்சேதுபதிதான். டஜன் கணக்கில் கைவசம் வைத்திருக்கும் படங்கள் முடிந்ததும் அருண்குமாருடன் பணியாற்றவிருக்கிறார் விஜய்சேதுபதி.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

நயன்தாரா, மம்மூட்டி நடித்து மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, அதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. கொச்சி, கொல்கத்தா பகுதிகளில் ஷூட்டிங் முடித்துத் திரும்பியிருக்கிறது படக்குழு. தமிழில் அமலாபால், அர்விந்த் சுவாமி நடிக்கும் இந்தப் படம் செப்டம்பர் ரிலீஸ்.

மியாவ்  பதில்

மிஸ்டர் மியாவ்

ஸ்ருதி ஹாசன் கோபப்பட்டு விலகிய பிறகு, ‘சங்கமித்ரா’ படம் பற்றி எந்தத் தகவலும் இல்லையே?

‘சங்கமித்ரா’வில் நடிக்க விஜய், சூர்யா, மகேஷ்பாபு எனப் பலரிடமும் கேட்கப்பட்டு இறுதியில் ஜெயம் ரவியும், ஆர்யாவும் ஒப்பந்தமானார்கள். அதுபோலவே பல ஹீரோயின்களிடமும் கேட்டு, இறுதியில் ஒப்பந்தமானார் ஸ்ருதி. ஆனால், ‘கதையைக்கூட முழுமையாகச் சொல்லவில்லை’ என்ற கடுப்பில் விலகிவிட்டார். பலரும் நடிக்க ஓகே சொல்லிவிட்டு, பின்னர் காலை வாரிவிடுவதால், ‘சங்கமித்ரா’ பற்றிய செய்திகளை சீக்ரெட்டாக வைத்திருக்கிறது படக்குழு. சமீபத்தில் ‘சங்கமித்ரா’ கேரக்டரில் ஹன்சிகாவை நடிக்க வைப்பதற்காக, இளவரசி கெட்டப்பில் அவரை ரகசியமாக போட்டோஷூட் எடுத்திருக்கிறார்கள்.