பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

இசையமைப்பாளர், நடிகர் என்று பரபரப்பாக இருந்தாலும் ஜி.வி.பிரகாஷூக்கு நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை ஒன்றிருக்கிறது. ஹாலிவுட்டில் ஆல்பம் ஒன்று பண்ணவேண்டும் என்பதுதான் அது. அதற்கான வேலைகளையும் இடையிடையே கவனித்துக்கொண்டிருக்கிறாராம். வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட்டுக்குச் செல்லும் ஜி.வி-யின் இசை!

மிஸ்டர் மியாவ்

சிறையில் சசிகலாவுக்குத் தனி வசதிகள் செய்து தரப்பட்டதும், அதற்காக 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கைமாறியதாகக் கூறப்படுவதும்தான் பரப்பன அக்ரஹாரா பரபரப்பு. இப்படி பட்டையைக் கிளப்பிய சம்பவத்தையே படமாக்க முடிவெடுத்திருக்கிறார்      ஏ.எம்.ஆர்.ரமேஷ். ஏற்கெனவே, ராஜீவ் காந்தி கொலைவழக்கை மையப்படுத்தி ‘குப்பி’ படத்தை இயக்கியவர் ரமேஷ்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

விஜய் சந்தருடன் ‘ஸ்கெட்ச்’, கெளதமுடன் ‘துருவ நட்சத்திரம்’ இரண்டுமே இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. அடுத்ததாக ‘சாமி 2’ என மூன்று படங்களிலும் விக்ரம் செம ஆக்டிவ். நான்காவதாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரமை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்க விக்ரமும் அதிக ஆர்வம் காட்டிவருகிறாராம்.

மிஸ்டர் மியாவ்

‘ஜெயம்’ ரவி ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘சங்கமித்ரா’விலும்  கமிட்டாகியிருக்கிறார். இவ்விரு படங்களும் முடிந்தபிறகு அஹ்மத் இயக்கத்தில் அதிரடி ஆக்‌ஷன் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அஹமத். ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு நடுவில் கூட இந்தப் படத்தில் ரவி நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்

கேரளாவின் ராபின்ஹூட் ‘காயங்குளம்’ கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கவிருக்கிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ். ‘36 வயதினிலே’வுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு படங்களை மலையாளத்தில் இயக்கியவர், இப்படத்தையும் மலையாளத்தில்தான் இயக்கவிருக்கிறார். தமிழில் ரீமேக் செய்யவும் திட்டமாம். இதில் நிவின்பாலி, அமலாபால் இருவரும் லீட் ரோலில் நடிக்கிறார்கள்.

மியாவ் பதில்!

‘தலைவன் இருக்கிறான்’ எப்பொழுது?

மிழகத்தையே அசரடிக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, அரசியல் வியூகம், சினிமா சர்ச்சை என மூன்று திசைகளிலும் ஒரே நேரத்தில் இயங்கிவருகிறார் கமல். ‘விஸ்வரூபம் 2’ இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவருகின்றன. இன்னும் க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே பாக்கி. முதல் ரிலீஸூம் இதுவே. அதன்பின்னரே ‘சபாஷ் நாயுடு’ படத்தைக் கையில் எடுப்பார். இந்த வருட இறுதிக்குள் படத்தை முடிக்கவும் திட்டம். அடுத்த வருடம்தான் கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ ஷூட்டிங் தொடங்கும். அரசியல் மற்றும் நிழல் உலகப் பிரச்னை இரண்டையும் இந்தப் படம் பேசும். எப்படியும் அடுத்த கோடையில் தலைவன் வருவான்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு