Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவாகிறது துல்கர் சல்மானின் ‘சோலோ’. நான்கு கதைகள், மூன்று ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள்... இவையே படத்தின் ஸ்பெஷல். தவிர, நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் என துல்கருக்கு இதில் நான்கு ஹீரோயின்கள்!

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

விஜய்சேதுபதி, கைவசம் இருக்கும் ஐந்து படங்களிலும் அடுத்தடுத்து நடித்துவருகிறார். இதற்கிடையில் மணிரத்னம் படத்தில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தப் படத்துக்கு முழுமையாக ஒரு வருடம் கால்ஷீட் கேட்பதால் யோசிக்கிறாராம் விஜய்சேதுபதி.

மிஸ்டர் மியாவ்

தமிழ் சினிமாவையே கலாய்த்தெடுத்த காமெடி மூவி, ‘தமிழ்ப் படம்’. இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே கூட்டணியில் சி.எஸ்.அமுதன் இயக்க, சிவா நடிக்கப் போகிறார். ஸ்க்ரிப்ட் வேலையில் இருக்கிறார்கள் படக்குழுவினர். இன்னும் இரண்டு மாதங்களில் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

பிரபு சாலமனின் ‘கும்கி 2’ படப்பிடிப்பு, விரைவில் தொடங்க இருக்கிறது. இமானுக்குப் பதில் நிவாஸ் கே.பிரசன்னா இசை. லட்சுமி மேனனுக்குப் பதில் அமீரின் `சந்தனத்தேவன்’ படத்தில் நடிக்கும் அதிதி மேனன் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

‘விளம்பரங்களில் மட்டுமே இணைந்து நடிப்போம். படங்களில் சேர்ந்து நடிக்க மாட்டோம்’ என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் பிரசன்னா - சினேகா தம்பதியர். பல மொழிப் படங்களிலும் நடிக்க சினேகாவுக்கு வாய்ப்பு வருகிறதாம். சினேகா எல்லாவற்றையும் மறுத்துவிடுகிறார். மகன் விஹானைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவாம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘பாகுபலி 2’-வுக்குப் பிறகு பல வாய்ப்புகள் தேடி வந்தும் ‘நோ’ சொல்லிவிட்டார் அனுஷ்கா. காரணம், அவரின் உடல் எடை. தீவிர யோகா, கடும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டு தற்போது ஸ்லிம் ஆகிவிட்டார். இனி, அனுஷ்காவைத் தொடர்ச்சியாகப் படங்களில் பார்க்கலாம்.

மியாவ் பதில்

காமெடியனாகக் கலக்கிக் கொண்டிருந்த சந்தானம், ஹீரோவானதும் சத்தமே இல்லையே?

மிஸ்டர் மியாவ்

ந்தானத்தின் அடுத்த படம் `சர்வர் சுந்தரம்’. அது வெளிவருவதில் சிக்கல் உள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த கெனன்யா ஃபிலிம்ஸின் முந்தைய படங்களான ‘ஒருநாள் கூத்து’, ‘புரூஸ் லீ’ இரண்டுமே பெரிய வெற்றியில்லை. அவற்றால் ஏற்பட்ட கடன்தான், ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது. அதுமட்டுமின்றி, சந்தானத்தின் ‘மன்னவன் வந்தானடி’, ‘சக்கப்போடு போடு ராஜா’, ஓடி ஓடி உழைக்கணும்’ போன்ற படங்களும் இன்னும் முடிந்தபாடில்லை. சந்தானம் மற்றும் கெனன்யா ஃபிலிம்ஸ் இருவரின் பிரச்னைக்கும் ஒரே தீர்வு ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ்தான். காமெடியனாக கைநிறையச் சம்பாதித்தவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டரில் ஆஜரானவர், ஹீரோவான பிறகு பட ரிலீஸுக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.