Published:Updated:

’’எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டு... நினைச்சாலே செம கெத்தா இருக்கு..!’’ - கலக்கப்போவது யாரு பாலா

’’எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டு... நினைச்சாலே செம கெத்தா இருக்கு..!’’ - கலக்கப்போவது யாரு பாலா
News
’’எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டு... நினைச்சாலே செம கெத்தா இருக்கு..!’’ - கலக்கப்போவது யாரு பாலா

’’எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டு... நினைச்சாலே செம கெத்தா இருக்கு..!’’ - கலக்கப்போவது யாரு பாலா

''இவங்க இப்படித்தான் இருப்பாங்கனு நமக்குள்ள ஒரு எண்ணம் இருக்கும்ல, அப்படி நான் நினைச்சு வச்சிருந்த எண்ணத்தை சேது அண்ணா உடைச்சிட்டார். தான் ஒரு நடிகர்னு அவர் எங்கேயும் காட்டிக்கிட்டது இல்லை. நாங்க எல்லாரும் பாரிஸ்ல ஷூட்டிங் போயிருந்தபோது நான் குளிரால கஷ்டப்பட்டேன். அப்போ, ‘டேய் அது என் கேரவன் மட்டும் இல்லை. உன்னோட கேரவனும்தான். அங்க போய் இரு’னு சேது அண்ணா சொன்னார். ஒரு தம்பி மாதிரிதான் என்னைப் பார்த்துகிட்டார். உண்மையாகவே சேது அண்ணா ரசிகனை ரசிக்கும் தலைவன்தான்...’’ என நெகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தார், 'ஜுங்கா' படத்தில்  'Poetu' தினேஷாக நடித்த ’கலக்கப்போவது யாரு’ ஆறாவது சீசனின் வெற்றியாளர் பாலா.

’ஜுங்கா’ படத்தோட வாய்ப்பு எப்படி கிடைத்து..?

’’சினிமாவில் நடிக்கணும்கிறது என்னோட ஆசை. ஆனால், நான் ’ஜுங்கா’ படத்தில் நடிக்கிறதுக்காக முயற்சி பண்ணலை. கோகுல் சாரே என்னை கூப்பிட்டு இந்த வாய்ப்பை கொடுத்தார். என்னோட முதல் படத்துலேயே எனக்குனு ஒரு என்ட்ரி சீன், ஒரு பாட்டுனு கொடுத்து, என்னோட சினிமா கரியரை தொடங்கி வெச்சிருக்கார். அதுவும் எனக்கு பிடிச்ச சேது அண்ணா படம் மூலமா நான் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கேன். நினைச்சாலே செம கெத்தா இருக்கு தல.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

’லோலிக்கிரியா’ பாட்டுல உங்க டான்ஸ் பயங்கரமா இருந்ததே..?

’’முதலில் என்கிட்ட, ‘உனக்கு ஒரு சாங் இருக்கு’னு சொன்னாங்க. ஹீரோ, ஹீரோயின் ஆடுவாங்க நாம சும்மா பின்னாடி ஆடுவோம் போலனு நினைச்சேன். அப்பறம் பார்த்தா அந்த சாங்கே என் கேரக்டருக்குத்தான். இதுக்காக ஸ்ரீதர் மாஸ்டர்கிட்ட டான்ஸ் க்ளாஸுக்கு அனுப்புனாங்க. அவர் பெரிய பெரிய ஹீரோக்களுக்கெல்லாம் ஓப்பனிங் சாங் பண்ணுனவர். என்னைப் பார்த்ததும், ‘உனக்கெல்லாம் டான்ஸ் சொல்லித்தரணுமா’னு சொல்லுவாரோனு நினைச்சேன். ஆனால், மாஸ்டர் அப்படி எதுவும் சொல்லலை. என்னைய ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் டான்ஸ் ஆட வெச்சார். ஆனால், அந்த கஷ்டத்தை வெளியில காட்டிக்கலை. என் டான்ஸ் பயங்கரமா இருந்ததுக்கு அவரோட பங்குதான் அதிகம்.’’

சாயீஷாவுடன் டான்ஸ் ஆடுன அனுபவம்..?

’’ ‘வனமகன்’ படத்தில் அவங்களோட டான்ஸைப் பார்த்து மிரண்டிருக்கேன். செம டான்ஸர். அவங்ககூட ஆடுனதே மறக்க முடியாத அனுபவம்தான். இந்தப் படத்தில் ஆடும் போது சில ஸ்டெப் நான் அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன்; சில ஸ்டெப் அவங்க எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. செம ஃபன்னா போச்சு.’’

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கு வரணும்கிற யோசனை எப்படி வந்தது..?

’’விஜய் டிவியில ஷோ பண்ணுன அமுதவாணன் அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப் பார்த்துதான் காமெடி பண்ணணும், மிமிக்ரி பண்ணணும்னு ஆசைப்பட்டேன். அவரோடு சில நாள்கள் ட்ராவல் பண்ணுனேன். அவர் மூலமா எனக்கு ’கலக்கப்போவது யாரு’ ஷோவோட டைரக்டர் தாம்ஸன் சார் பழக்கமானார். அவர்தான் என்னை நம்பி ’கலக்கப்போவது யாரு’ ஆறாவது சீசனில் கலந்துக்க வாய்ப்புக் கொடுத்தார். எந்த ஒரு வாய்ப்பும் யாருக்கும் சீக்கிரமோ இல்ல எளிதாகவோ கிடைக்காது. அப்படி எனக்கு கிடைச்ச வாய்ப்பை நான் எப்போதும் தவற விடக்கூடாதுனு நினைப்பேன். அப்படி விடாமுயற்சியோட வொர்க் பண்ணித்தான் ’கலக்கப்போவது யாரு’ டைட்டில் வின் பண்ணுனேன். அடுத்து கோகுல் சார் மூலமா ’ஜுங்கா’பட வாய்ப்பு கிடைச்சது. அதையும் சரியா யூஸ் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு வர வாய்ப்புகளையும் இது மாதிரி யூஸ் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்’’ என சீரியஸாக பேசிக் கொண்டிருந்த பாலா, பிக் பாஸ் பிரபலங்கள் போல் மிமிக்ரி செய்ததை கீழே இருக்கும் வீடியோவில் காணலாம்.

...