Published:Updated:

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

பாசிட்டிவ் கண்கள்ஆர்.வைதேகி

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

பாசிட்டிவ் கண்கள்ஆர்.வைதேகி

Published:Updated:
‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

மிழ் சினிமாவில் பெண் டெக்னீஷியன் களின் அறிமுகமும் இருப்பும் அரிது. அப்படி ஒரு குறிஞ்சிப்பூ, ப்ரீத்தா ஜெயராமன்.

‘நாக் நாக் ஐ’ம் லுக்கிங் டு மேரி’ என்ற இந்திப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ப்ரீத்தா. தமிழில் ‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘அபியும் நானும்’, ‘கௌரவம்’, ‘உன் சமையலறையில்’ என கவனிக்கத்தக்க படங்களின் சினிமாட்டோகிராபர். கன்னடப் படங்களிலும் ப்ரீத்தாவின் கேமரா கவிதை கொஞ்சியிருக்கிறது.

‘தட்கா’ (Tadka) படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் கால்பதிக்கும் ப்ரீத்தாவிடம் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாலே, அவரின் பாசிட்டிவ் எனர்ஜி நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

``சின்ன வயசுலயிருந்தே க்ரியேட்டிவா, வித்தியாசமா ஏதாவது பண்ணணும்னு ஆசை. நிறைய எழுதுவேன். தாத்தா டாக்டர், அப்பா இன்ஜினீயர். ஆனாலும், என் தேடல் வேற எதுவாகவோ இருந்திருக்கு. பி.சி.ஸ்ரீராம் சார் என் மாமா. அவரோட க்ளாஸிக் வொர்க் ஆழ்மனசுல பதிஞ்சிருச்சு. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து படிச்சேன். ஒளிப்பதிவுல எனக்கிருந்த அதீத ஆர்வத்தால், இந்தத் துறையில ஒரு பெண்ணா என்னால ஜெயிக்க முடியுமா, தாக்குப்பிடிக்க முடியுமா என்பதைப் பற்றியெல்லாம் மூளை யோசிக்கலை. ஆர்வமும் நம்பிக்கையும் மட்டும் தான் இத்தனை வருஷங்கள்ல என்னைக் கைப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போயிட்டிருக்கு...'' - ஸூம் அவுட்டில் அறிமுகம் சொன்னாலும் ப்ரீத்தாவின் வளர்ச்சி அழகானது... ஆரவாரமற்றது.

``1993-ல் படிப்பை முடிச்சேன். ‘மே மாதம்’ படத்திலிருந்து ‘குருதிப்புனல்’ படம் வரை அஞ்சு வருஷம் பி.சி சார்கிட்ட அசிஸ்டன்ட்டா இருந்தேன். அவர் என் மாமா என்பதால், முதல்ல என்னை அசிஸ்டன்ட்டா சேர்த்துக்கத் தயங்கினார். வேற யார்கிட்டயாவது சேர்த்துவிடறதா சொன்னார். ஒருவழியா சமாதானமாகி சேர்த்துக்கிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

ஒளிப்பதிவு நுணுக்கங்கள்கூடவே, சினிமா செட்ல எப்படி வேலைபார்க்கிறது, மனிதர்களை எப்படிக் கையாள்றதுனு நிறைய கத்துக்கிட்டேன். நான் தனியா படம் பண்ணினப்போ அதெல்லாம் ரொம்ப உதவியா இருந்தது.

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

இடையில் நிறைய டாக்குமென்ட்டரி படங்கள் பண்ணினேன். பி.சி. சார் ஸ்கூல்ல யிருந்து வந்தவளா இருந்துமே எனக்கு முதல் பட வாய்ப்புக் கிடைக்கிறது பெரிய சவாலா இருந்தது. ஆனாலும், வருத்தங்கள் ஏதுமின்றி முயற்சியைத் தொடர்ந்தேன். 2002-ல் முதல் பட வாய்ப்புக் கிடைத்தது. லென்ஸ் வழியாக ஒரு காட்சியைப் பார்க்கவும் அதன் மூலமா கதையைச் சொல்லவும் முடியும் என்ற அந்த நம்பிக்கை எனக்குப் பெரிய தெம்பைக் கொடுத்தது'' என எனர்ஜி குறையாமல் பேசும் ப்ரீத்தா, 15 வருடங்களில் எட்டு படங்கள் முடித்திருக்கிறார்.

``எண்ணிக்கை குறைவா இருக்கலாம். ஆனா, ஒவ்வொரு படமும் எனக்கும் என் திறமையை நம்பின இயக்குநருக்கும் திருப்தியைக் கொடுக்கிறதா அமைந்தது. பெண்களுக்கு இங்கே வாய்ப்புகள் குறைவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆணா, பெண்ணா என்பதை வைத்து எடை போடாமல் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுக்கிற ஆட்கள் இங்கே குறைவு. அந்த நிலைமை மாறினால் நல்லது. மாறும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கு. இந்த மாற்றம் இயக்குநர்கள்கிட்டயிருந்து தொடங்கணும்.

பெண்கள் மென்மையானவங்க, அவங்களோட வேலையும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறது தப்பு. ‘கௌரவம்’ படத்துல நிறைய ஸ்டன்ட் சீன்ஸ் இருந்தது. அந்த மாதிரி காட்சிகள் ஷூட் பண்றதுக்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘உங்களால ஃபைட் சீனெல்லாம் ஷூட் பண்ண முடியுமா?!’னு பார்த்த பலரும் ஆச்சர்யமா கேட்டாங்க. ஒளிப்பதிவாளர் ஒரு பெண் என்பதால் இப்படிக் கேட்கிறது அபத்தமானது. ஓர் ஆண் ஒளிப்பதிவாளரைப் பார்த்து, ‘நீங்க ஆணாச்சே... உங்களால மென்மையான காதல் காட்சிகளை எடுக்க முடியுமா?’னு கேட்கிறோமா என்ன? நிஜ வாழ்க்கையில நான் ஃபைட் பண்ண மாட்டேன். ஆனா, எனக்கு அதை ஷூட் பண்ணத் தெரியும். டெக்னிக்கலா என்ன கேமரா, என்ன லென்ஸ், என்ன லைட்டிங் நல்லாருக்கும், இதை எவ்வளவு க்ரியேட்டிவா எடுத்துக் கொடுக்கலாம் போன்ற விஷயங்களைப் பார்க்கிறதுதான் என் வேலை.

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

பெண்களுக்கும் க்ரியேட்டிவிட்டிக்கும் பெரிய இடைவெளி இருக்கிறதா நினைச்சா, அது அவங்களுக்குதான் நஷ்டம். நான் கம்மியான படங்கள் பண்ணினதுக்கு அந்தக் கற்பிதமும் ஒரு காரணம். ஆனாலும், நான் இன்னும் நிறைய படங்கள் பண்ணப்போறேன் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. நிறைவான படங்களைத் தந்திருக்கோம் என்கிற திருப்தியும் எனக்கிருக்கு. அதிக வாய்ப்புகள் கிடைக்கலேயேன்னு என்னை நானே டீமோட்டிவேட் பண்ணிடக்கூடாதில்லையா?'' என்று தெளிந்த சிந்தனையுடன் பேசுபவர், பெண் இயக்குநர்களே பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தயங்குவது பற்றி என்ன நினைக்கிறார்?

``விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் பெண் இயக்குநர்கள்  இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இந்நிலை மாற நீண்ட காலமாகலாம். டாப் 10 டைரக்டர்களில் ஐந்து பேர் பெண்களா இருந்தா, அவங்க பெண் டெக்னீஷியன்களுக்கு சான்ஸ் கொடுக்கணும்னு எதிர்பார்க்கலாம். ஆனா, அவங்க பெண் என்ற காரணத்துக்காகவே பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு சொல்றதும் தப்பு'' - சுயநலமில்லாத பதில்.

‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்!’

``ப்ரீத்தாவின் முன் நிற்கும் மிகப்பெரிய சவால்?''

``ஷூட்டிங் போயிட்டா எதுவுமே பிரச்னையா தெரியாது. கேமரா உமன்தான்... ஆனாலும், உடலளவுல பயங்கர ஃபிட்டா இருக்கணும். அதுக்காக நான் ஜிம்முக்குப் போகணும். வொர்க் அவுட் பண்ணணும். ராத்திரி, பகல் பார்த்து வேலை செய்ய முடியாது. மரத்துக்கு மேலேயோ, மலையின் மேலேயோ ஏறணும்னாலும் தயாரா இருக்கணும். இதையெல்லாம்விட ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்குமான காத்திருப்புதான் நிஜமான சவால். அந்த இடைவெளியில் என்ன செய்யறதுங்கிற தவிப்பைக் கடக்கிறது சாதாரணமானதில்லை. ஷூட் இல்லாத நாள்கள்ல நிறைய எழுதறேன், படிக்கிறேன். என் ஏழு வயசுக் குழந்தை மீராவுடனும், கணவர் ஸ்ரீகாந்த்துடனும் சந்தோஷமா பொழுதைக் கழிக்கிறேன். ஸ்ரீகாந்த், கம்யூனிகேஷன் டைரக்டர். சினிமா துறைக்குத் தொடர்பில்லாதவர். ஆனாலும், என்கூட சேர்ந்து படங்களை ரசிக்கக் கத்துக்கிட்டார். அவர் சினிமாதான் என் ஃபேஷன்னு புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட் பண்றவர். பிஸியா இருக்கும்போது மட்டுமில்லை, படங்கள் இல்லாம இருக்கிற நாள்கள்லயும் என் மனநிலையைப் புரிஞ்சு நடந்துக்கிறவர். இதெல்லாம்தான் என்னுடைய காத்திருப்பை அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வெச்சிருக்கு.'' - பாசிட்டிவ் மனுஷியின் ஒளி ஓவியத்துக்காக பிரகாஷ்ராஜுடன் தமிழில் ஒன்று, வி.ப்ரியாவுடன் கன்னடத்தில் ஒன்று, ஹிந்தியில் ஒன்று என மூன்று படங்கள் காத்திருக்கின்றன.