தன்னம்பிக்கை
Published:Updated:

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

ஸ்டார் ஃபேக்ட்ஸ் ஆர்.சரண்

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

ங்கை நிஷா அகர்வாலோடு பயணம் செய்வதென்றால் காஜல் அகர்வாலுக்குக் கொள்ளை இஷ்டம். ஷூட்டிங் இல்லாத நாள்களில் இருவரும் தூர தேசத்துக்குப் பறந்து விடுவது வழக்கம். சமீபத்திய விசிட் துருக்கியின் இஸ்தான்புல்!

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

‘பிரேமம் மலர் டீச்சர்’ சாய் பல்லவி, கோத்தகிரி தமிழ்ப் பெண் என்பதும் ஃபாரினில் டாக்டருக்குப் படித்தவர் என்பதும் தெரியும். ரங்கோலி வரைவதிலும் டான்ஸ் ஆடுவதிலும் பள்ளி நாள்களிலேயே ஏக பாப்புலர்!

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

`தேவசேனா’ அனுஷ்கா ஒரு யோகா பயிற்றுநர் என்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாத விஷயம், அவர் பைக் காதலர். அதிலும் நேரம் கிடைத்தால் டுகாட்டி, என்ஃபீல்டு போன்ற பைக்குகளை ஓட்டுவதில் கில்லி.

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

த்ரிஷா ஸ்டைலில் ‘ஆறுகளை மீட்போம்!’ என களம் இறங்கி இருக்கிறார் நடிகை தமன்னா. ‘RallyForRivers’ என்ற வாசகத்தோடு தன்னார்வ அமைப்பு ஒன்றின் தூதுவராகக் களத்தில் குதித்திருக்கிறார்.

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

`காக்கா முட்டை’ காதல் இன்னும் ஐஸ்வர்யா ராஜேஷுக்குக் குறைந்தபாடில்லை. நேரம் கிடைத்தால் தோழிகளோடு சென்னையின் சில குப்பங்களுக்கு சத்தமில்லாமல் விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இது தவிர, சமீபத்தில் ஐஸ் விசிட் அடித்த லொக்கேஷன் நயாகரா நீர்வீழ்ச்சி!

ரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்!

நயன்தாராவுக்கு நடிப்பையும் தாண்டி இசை ஆர்வமுண்டு. சின்ன வயதில் லண்டன் ட்ரினிட்டி காலேஜ் தேர்வுக்குச் செல்லும் அளவுக்கு கீ-போர்டு கற்றிருக்கிறார். ஆனால், வாழ்க்கை மல்லுவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா வுட்களிலும் முன்னணி நடிகையாக பிஸியாக்கிவிட, கீபோர்டை மறந்தே விட்டார்.