Published:Updated:

`ஏம்ப்பா... எத்தனை தளபதி இருக்கீங்கனு சொல்லிருங்களேன்!’ - விகடன் பிரஸ் மீட்டில் சிம்பு

`ஏம்ப்பா... எத்தனை தளபதி இருக்கீங்கனு சொல்லிருங்களேன்!’ - விகடன் பிரஸ் மீட்டில் சிம்பு

குழந்தை நட்சத்திரமாக அவர் கேமரா முன் நின்ற தருணத்தில் தொடங்கி இப்போது 'சிம்பு ஷூட்டிங்க்கு சரியாக வரமாட்டேங்குறார்' என்ற குற்றச்சாட்டு வரை விகடன் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் சிம்பு.

`ஏம்ப்பா... எத்தனை தளபதி இருக்கீங்கனு சொல்லிருங்களேன்!’ - விகடன் பிரஸ் மீட்டில் சிம்பு

குழந்தை நட்சத்திரமாக அவர் கேமரா முன் நின்ற தருணத்தில் தொடங்கி இப்போது 'சிம்பு ஷூட்டிங்க்கு சரியாக வரமாட்டேங்குறார்' என்ற குற்றச்சாட்டு வரை விகடன் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் சிம்பு.

Published:Updated:
`ஏம்ப்பா... எத்தனை தளபதி இருக்கீங்கனு சொல்லிருங்களேன்!’ - விகடன் பிரஸ் மீட்டில் சிம்பு

விகடன் நிருபர்கள் சிம்புவைச் சந்தித்து அவரிடம் கேட்பதற்காகப் பல கேள்விகளோடு காத்திருந்தோம். ப்ரவுன் கலர் குர்தா அணிந்துகொண்டு கலரிங் செய்த ஹேர் ஸ்டைலோடு என்ட்ரி கொடுத்தார் எஸ்.டி.ஆர். மைக்கை மாட்டிக்கொண்டு கேமராமேனைப் பார்த்து `ரோலிங்கா ?' என்றார். கேமராமேன், `ரோலிங் சார்' என்று சொல்ல இனிதே தொடங்கியது விகடன் பிரஸ் மீட் வித் சிம்பு. 

குழந்தை நட்சத்திரமாக அவர் கேமரா முன் நின்ற தருணத்தில் தொடங்கி இப்போது `சிம்பு ஷூட்டிங்குக்குச் சரியாக வரமாட்டேங்குறார்' என்ற குற்றச்சாட்டு வரை சினிமா தொடர்பான பல கேள்விகளை அடுக்கடுக்காக நிருபர்கள் அவரிடம் கேட்டனர். `உங்களின் முதல் சம்பளம் என்ன ?' என்ற கேள்விக்குச் சிம்பு சொன்ன பதில் அவ்வளவு குழந்தைத் தனம்! அரசியல் தொடர்பான கேள்விகளையும் சிம்பு ஜஸ்ட் லைக் தட் என டீல் செய்தார். ``நான் சிஸ்டம் சரியில்லைனு எல்லாம் சொல்லலை... சிஸ்டமே தேவையில்லைனு சொல்றேன்" என்ற சிம்புவின் அந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. `நீட் தேர்வு மெடிக்கல் படிப்புக்கான என்ட்ரன்ஸா?' என்று இவர் நிருபர்களிடம் கேட்டது சற்று ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சில கேள்விகளுக்கு அவர் சொன்ன பதிலில் அவருக்குள் இருந்த ஹியூமர் சென்ஸ் லைம் லைட் வெளிச்சத்தில் எட்டிப்பார்த்தது என்று சொல்லலாம். 

``சிம்பு, ஒரு சில வீடியோ செக்மென்ட் இருக்கு. அதுக்கு நீங்க தயாரா?" எனத் தொகுப்பாளர் கேட்க, `எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ணமாட்டோமா? ' என்பது போல் இருந்தது அவரது ரியாக்‌ஷன். நடிகர்களின் அடைமொழிகளை காண்பித்து இது யாருடையது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் முதல் வீடியோ செக்மென்ட். ஒவ்வோர் அடைமொழிக்கும் கஷ்டப்பட்டு யோசித்து பதிலளித்த சிம்பு, ஒரு கட்டத்தில் `ஷ்ஷ்.... மொத்தம் எத்தனை தளபதிங்கப்பா இருக்கீங்க?' என்று அவர் சொன்ன கமென்ட் அனைவரையும் சிரிக்க வைத்தது. யுவன், கெளதம் மேனன், டிடி, ஶ்ரீரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் சிம்புவிடம் தான் கேட்க விரும்பும் கேள்விகளை செல்ஃபி வீடியோவில் கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்குச் சிம்பு பதிலளித்த விதம் க்யூட்! வீடு, நண்பர்கள் எனத் தன்னுடைய பர்சனல் விஷயங்கள் சார்ந்த கேள்விகளுக்கு அவரிடமிருந்து வெளிப்படையான பதில்கள் கிடைத்தன. இசையமைப்பாளர் சிம்புவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் ட்ரம்ஸ் வாசிக்கச் சொல்லி ஒரு டாஸ்க் கொடுத்தோம். அதற்கு, உடனே தயாரான சிம்பு, ட்ரம்ஸை வாசிக்க ஆரம்பிக்கும் முன் அதற்கான மரியாதை செலுத்தி வாசிக்கத் தொடங்கினார். வெஸ்டர்ன் இசையில் நம்மை ரசிக்க வைத்தவரிடம் `சார் அந்த ஒத்தை அடி' என்று கூட்டத்திலிருந்து குரல் ஒலித்தது. அதனை உற்சாகத்தோடு வாசித்த சிம்பு, அரங்கை அதிரச் செய்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலைஞருக்கும் உங்களுக்குமான தருணங்கள் பற்றி கேட்டதற்கு, ``என் வீட்டுக்கு அவர் வந்தபோது, அவருடைய பேனாவைத் திருடியிருக்கேன்" என்று சிரித்தவர், ``என்னால ஒரு விஷயத்தைக் கையாள முடியலைன்னா, அவருக்குதான் போன் பண்ணிப் பேசுவேன். அந்தளவுக்கு நெருக்கம். ஒரு முறை `வல்லவன்' படத்தைப் போட்டுக்காட்டுறேன்னு சொல்லிட்டு காட்டலை. ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்கும்போது அதை ஞாபகம் வெச்சிருந்து என் கன்னத்துல அறைஞ்சார் பாருங்க... ப்ப்பா" என்று தன் கன்னத்தில் கைவைத்து அந்தத் தருணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அறிவிப்பு வெளியாகி ட்ராப்பான படங்களின் போஸ்டர்களைக் காட்டி அதன் பின் இருக்கும் காரணங்கள் சொல்லச் சொன்னதற்கு, அவரது பதில் அவர் எவ்வளவு வெளிப்படையானவர் என்பதை வெளிப்படுத்தியது. வீட்டில் அப்பா எப்படி, பிக் பாஸ் மஹத் மேல இருக்க குற்றச்சாட்டு, பீப் சாங், ஷூட்டிங்கிற்கு ஏன் லேட் போன்ற பல கேள்விகளுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் பதிலளித்தார். குறிப்பாக, `உங்களின் மனைவியாக வர என்ன தகுதி வேண்டும்?' என்ற ஶ்ரீரெட்டியின் கேள்விக்கும் `மோடியிடம் நீங்க கேட்க நினைக்கும் கேள்வி என்ன ?' என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் அட்டகாசம்!

இப்படிப் பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு அதைவிட சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார் சிம்பு. அதைப் பார்க்கணுமா? 
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சிம்பு ஆன் தி வே.