Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் 40 நாள்களுக்குமேல் அடைந்துகிடந்ததால், இப்போது ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார் ஓவியா. வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தனக்குப் பிடித்த இடங்களிலெல்லாம் தனியாகச் சுற்றுகிறார். `பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியே வந்தவர்களில் அதிக பட வாய்ப்புகள் குவிவது ஓவியாவுக்கு மட்டும்தான். ஆனால், பிடி கொடுக்காமல் எஸ்கேப் ஆகிறாராம் ஓவி.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

பிரபுதேவா, ஹன்சிகா நடிக்கும் ‘குலேபகாவலி’ படத்தின் அறிமுகப் பாடலுக்காக, உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டத்தைப் போலவே கார்களைக்கொண்டு தொங்கும் தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் கதிர். இதற்காக, கோடிகளில் செலவு செய்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் விஷால். சென்னையிலேயே மதுரை நகரத்தை செட் போடும் வேலைகள் நடந்துவருகின்றன. சித்திரைத் திருவிழா, 500 கடைகள் என்று பிரமாண்டமாக உருவாகி வருகிறது மதுரை மாநகர செட்.

மிஸ்டர் மியாவ்

‘வேலைக்காரன்’ ரிலீஸுக்குத் தயார். அடுத்து பொன்ராம் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இசை அனிருத். சிவா - விக்னேஷ் கூட்டணி அமைய முக்கியக் காரணம், நயன்தாரா. 

மிஸ்டர் மியாவ்

பெரிய பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றுவதில், சன் குழுமத்துக்கும் விஜய் டி.வி-க்கும் போட்டா போட்டி. சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, சந்தானத்தின் ‘மன்னவன் வந்தானடி’, சிவகார்த்திகேயன் படம் என அடுத்தடுத்து படங்களை வாங்கியிருக்கும் சன் குழுமம், இப்போது அஜித்தின் `விவேகம்’ பட உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

`பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா, சென்னையில் தங்கவில்லை. யாருடனும் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காகவும் இமாசலப் பிரதேசத்தின் இமயமலைப் பகுதிக்கு ட்ரிப் சென்றிருக்கிறார்.

மியாவ் பதில்

அரசியல் நிலைப்பாட்டுடன் இருக்கும் ரஜினி, கமல், விஜய்... மூவரையும் ஒரே மேடையில் காண முடியுமா?


விஜய்யின் ‘மெர்சல்’ பட இசை வெளியீட்டு விழாவை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இம்மாதம் 20-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு ரஜினி, கமல் இருவருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர்கள் வந்தால், இது சாத்தியமாகும். மூவருமே இன்றைய ஆளுங்கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள். இந்த மூவரும் ‘மெர்சல்’ இசை வெளியீட்டில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினால் எப்படியிருக்கும் என்பதற்குத்தான் ஒட்டுமொத்த திரை உலகமும் வெயிட்டிங்!