Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்கும் `ஒக்கடு மிகிலடு’ என்ற தெலுங்குப் படம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. தமிழில் `நான் திரும்ப வருவேன்’ என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகிறது.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2017-ம் ஆண்டு, ஜி.வி.பிரகாஷுக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரிலீஸ் லிஸ்ட்டில் `4ஜி’, `அடங்காதே’, `செம’, `ஐங்கரன்’, `குப்பத்து ராஜா’ என அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் இருக்க, பாலா இயக்கும் `நாச்சியார்’ படத்தின் டப்பிங் பணிகளையும் சமீபத்தில் முடித்துவிட்டார். ‘‘மற்ற படங்களைவிட `நாச்சியார்’ என் பயணத்தில் முக்கியமானது என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறேன்’’ என ட்வீட் தட்டியிருக்கிறார் ஜி.வி.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

கஷ்டப்பட்டு உடல் மெலிந்த ஹன்சிகாவுக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை. தமிழில் `குலேபகாவலி’ படம் மட்டுமே கைவசம். இந்நிலையில், தமிழ்ப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்காக, தீவிரமாக தமிழ் கற்று வருகிறார் ஹன்சிகா.

மிஸ்டர் மியாவ்

`நெருங்கி வா முத்தமிடாதே’ படத்துக்குப் பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால், இந்தி, தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நடிகை பியா, `அபியும் அனுவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் பியாவுக்கு வெயிட்டான கேரக்டராம்!

மிஸ்டர் மியாவ்

பாரதிராஜாவின் `தாஜ்மஹால்’ மூலம் தமிழில் அறிமுகமான ரியா சென்னுக்கும், அவரின் காதலர் ஷிவம் திவாரிக்குமான திடீர் திருமணம்தான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக். கடந்த புதன்கிழமை, புனேவில் பெங்காலி முறைப்படி எளிமையாக நடந்திருக்கிறது இந்தத் திருமணம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இதுவரை தமிழில் மட்டுமே பாடல்கள் எழுதிவந்த மதன் கார்க்கி, முதல்முறையாக தெலுங்கில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `ஸ்பைடர்’ படத்துக்காக இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகும் `ஸ்பைடர்’ மூலம் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகிறார்.

மியாவ் பதில்

த்ரிஷா பற்றி பேச்சே காணோமே... என்ன ஆனார் அவர்?

‘`கனவுலகூட என்னை அடிக்கணும்னு நினைச்சீங்கன்னா, உடனே எழுந்து ஸாரி கேளுங்க!” என்ற அனல் தெறிக்கும் பன்ச் வசனத்துக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் நடிகை த்ரிஷா. `கர்ஜனை’, `1818’, `96’, `சதுரங்க வேட்டை-2’ என்று பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு, சமீபகாலமாக பாக்ஸிங் மீது தீராக்காதல். உடனே அதைக் கற்றுக்கொள்ள களமிறங்கியவர், பாக்ஸிங் இடைவேளையில் தட்டிய ட்வீட்தான் மேலே சொன்ன வசனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism