Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க அதிக ஆர்வம்காட்டுகிறார் நயன்தாரா. இந்த வகையில் `டோரா’வைத் தொடர்ந்து `அறம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, இப்போது `கோலமாவு கோகிலா’ என்ற காமெடி த்ரில்லர் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். பாதியில் நிற்கும் சிம்புவின் `வேட்டை மன்னன்’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார்தான் `கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளப் பாதிப்பை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அப்போது நடைபெற்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகளைத் தனது `ஸ்பைடர்’ படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் திரைக்கதையில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றனவாம்.

`இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைகிறார், இயக்குநர் கோகுல். `ஜூங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக `வனமகன்’ சாயிஷா நடிக்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்குகிறது.

மிஸ்டர் மியாவ்

தன் கார்க்கி பாணியில் பாடல்களோடு, படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார் கபிலன் வைரமுத்து. அஜித்தின் `விவேகம்’ படத்தில் இடம்பெறும் சில வசனங்கள் கபிலன் வைரமுத்து எழுதியவை. இப்போது `ஹவ்ரா பிரிட்ஜ்’ என்ற படத்தில் வசனம் எழுதுகிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் கன்னட நடிகை பிரியங்கா உபேந்திரா நடிக்கிறார். இந்தப் படம், தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

`பாகுபலி’ பிரமாண்டத்துக்குப் பிறகு `சாஹோ’ திரைப்படத்தின் மூலம் அடுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்டார் பிரபாஸ். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில், பிரபாஸ் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்க, படத்தில் இடம்பெறும் பவர்ஃபுல்லான ஒரு கேரக்டருக்கு அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மியாவ் பதில்

இயக்குநர் அமீர் இப்போது என்ன செய்கிறார்?

மிஸ்டர் மியாவ்

பெப்ஸி பொறுப்பு, போராட்டங்கள் என இயங்கிவந்த அமீரை நண்பர்கள் வற்புறுத்தி மீண்டும் சினிமா பக்கம் திருப்பியுள்ளார்கள். சிறிய இடைவேளைக்குப் பிறகு ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் `சந்தனத்தேவன்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் அமீர். இதற்கிடையில் `எம்.ஜி.ஆர் பாண்டியன்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அரசியலை விமர்சனம் செய்யும் நகைச்சுவைத் திரைப்படமான இதில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடிக்கிறார். புதுமுக இயக்குநர் ஆதம்பாவா, இந்தப் படத்தை இயக்குகிறார்.