Published:Updated:

சந்தானம் தேதிக்கு காத்திருக்கும் உதயநிதி !

சந்தானம் தேதிக்கு காத்திருக்கும் உதயநிதி !
சந்தானம் தேதிக்கு காத்திருக்கும் உதயநிதி !
சந்தானம் தேதிக்கு காத்திருக்கும் உதயநிதி !

'இது கதிர்வேலன் காதல்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் முடித்துவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு.

பிரபாகரன் இயக்கி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா. சந்தானம், சாயா சிங் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து, அடுத்த தயாரிப்புகள், வாங்கி வெளியிடும் படங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட போது " 'இது கதிர்வேலன் காதல்' படத்தின் கோயம்புத்தூர் படப்பிடிப்பினை முடித்துவிட்டு திரும்பி இருக்கிறோம்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது சந்தானம் தேதிகள் ஒதுக்கியவுடன் முடிவு செய்யப்படும். சந்தானம் இல்லாமல் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்து விட்டோம்.

சுந்தர்.சி இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை. ஆனால் எனது நிறுவனமான ரெட் ஜெய்ண்ட் தயாரிக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. அவர் இன்னும் என்னிடம் கதை கூறவில்லை. கதை கூறியவுடன் இது குறித்து முடிவு செய்வோம்.

இப்போதைக்கு ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் உதயம் NH4, என்றென்றும் புன்னகை, நேரம் உள்ளிட்ட படங்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். 'இது கதிர்வேலன் காதல்', 'வணக்கம் சென்னை' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறோம்.

உதயம் NH4 படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தின் ROUGH COPYஐ நான், தயாநிதி அழகிரி, வெற்றிமாறன் பார்த்தோம். ஏப்ரல் 1ம் தேதி இசை வெளியீடு இருக்கிறது, அதனைத் தொடர்ந்து படம் சென்சார் ஆனவுடம் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

சந்தானம் என்னிடம் 'என்றென்றும் புன்னகை' படத்தின் காமெடி காட்சிகள் எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறது என்றார். ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டூடியோ சென்ற போது படத்தின் பாடல்களை கேட்டேன் அற்புதமாக இருந்தது. ஆகையால் 'என்றென்றும் புன்னகை' படத்தினை வாங்கி வெளியிட முடிவு செய்தேன்.

'நேரம்' படத்தில் PISTAH பாடல் என்று YOUTUBE இணையத்தில் வெளியானதோ அன்றே எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உடனே 'நேரம்' படக்குழுவினை தொடர்பு கொண்டு படம் முடிவடைந்தால் திரையிட்டு காட்டுங்கள் என்றேன். கோயம்புத்தூரில் திரையிட்டு காட்டினார்கள். 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தினைப் போன்று வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதைதான் 'நேரம்'. உடனே படத்தினை வாங்கிவிட்டேன்.

முதலில் உதயம் NH4, நேரம், என்றென்றும் புன்னகை ஆகிய வரிசையில் படங்களை வெளியிட இருக்கிறோம். 'இது கதிர்வேலன் காதல்', 'வணக்கம் சென்னை' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தினை பேசிவருகிறேன். 10 நாட்களில் அப்படத்தினை நான் வெளியிட இருக்கிறேனா என்பது குறித்து தெரியும் " என்றார்.