Published:Updated:

`` `ஜோடி’யில சிம்பு சண்டை போட்டது ஸ்கிரிப்ட் கிடையாது..!’’ - நெல்சன்

`` `ஜோடி’யில சிம்பு சண்டை போட்டது ஸ்கிரிப்ட் கிடையாது..!’’ - நெல்சன்

`கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன், படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்...

`` `ஜோடி’யில சிம்பு சண்டை போட்டது ஸ்கிரிப்ட் கிடையாது..!’’ - நெல்சன்

`கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன், படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்...

Published:Updated:
`` `ஜோடி’யில சிம்பு சண்டை போட்டது ஸ்கிரிப்ட் கிடையாது..!’’ - நெல்சன்

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. ஸ்கூலிலிருந்து காலேஜ் படிச்சது வரைக்கும் சினிமா பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை. நல்லா படிப்பேன். என்னோட கவனமெல்லாம் படிப்பில்தான். எப்படியாவது படிச்சு இன்ஜினீயரா வரணும்னு கனவு கண்ட என்னை, எங்க அப்பா, அடம் பிடிச்சு விஸ்காம் சேர்த்து விட்டார். ஏன்னா, என் அப்பா டாக்குமென்ட்ரி படங்களில் வொர்க் பண்ணியிருக்கார். அவருடைய கனவை என் மூலமா நிறைவேற்றிட்டார். படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது வேலை செய்யணுங்கிறனால விஜய் டி.வில வேலைக்குச் சேர்ந்தேன். இப்போ இயக்குநராவும் ஆகிட்டேன்...'' என்று உற்சாகமாகப் பேசுகிறார் `கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன். 

``ரொம்ப வெகுளியா இருக்கிற பொண்ணு, யாருமே நம்ப முடியாத காரியத்தைச் செய்தால் எப்படியிருக்கணும்னு ஒரு சின்ன நாட் தோணுச்சு. அதை வெச்சுதான் இந்தப் படத்தோட ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். அதே மாதிரிதான் `கோகிலா'ங்கிற பெயரையும் செலக்ட் பண்ணினேன். ட்ரெண்ட்டியான பெயர் வைக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. கொஞ்சம் பழைய பெயர் அதே நேரத்துல சவுண்டு குட்டா இருக்கிற பெயரா இருக்கணும்னு இதை செலக்ட் செய்தேன். 

அதே மாதிரி,  நயன்தாரா அப்பா கேரக்டர் தேர்வு செய்றதுல ரொம்ப கவனமா இருந்தேன். ஏன்னா, எல்லா படங்களிலும் வரக்கூடிய வழக்கமான அப்பாவாக இல்லாம இருக்கணும்; யுனிக்கான விஷயம் ஏதாவது இருக்கணும்னு நினைச்சேன். அப்படிப்பட்ட கேர்க்டர் தேடிட்டு இருக்கும் போதுதான் `ஆர்.எஸ்.சிவாஜி' சார் ஞாபகத்துக்கு வந்தார். அவர்கிட்ட பேசுனேன். அவருடைய போட்டோ ஒண்ணு அனுப்பச் சொன்னேன். மொட்டை அடிச்சிருந்த போட்டோ அனுப்புனார். எனக்கு அந்த லுக் பிடிச்சிருந்துச்சு. உடனே, அவரை கமிட் பண்ணிட்டேன். அதே மாதிரிதான் சரவணன் சார் கேரக்டரும். சவுத் பக்கத்தில் இருக்கிற போலீஸ் மாதிரியிருக்கணும்னு நினைச்சேன். அதுக்கு சரவணன் சரியா இருந்தார். 

படத்தோட ஸ்க்ரிப்ட் எழுதும் போதே மைண்டில் நயன்தாரா இருந்தாங்க. அதுக்குக் காரணம் அவங்களுடைய நடிப்பு. கமர்ஷியல் ரீதியாவும் அவங்க சரியா இருப்பாங்கனு தோணுச்சு. பத்து வருடமாவே நயன்தாராவை தெரியும்ங்கிறனால படத்தோட கதையை எழுதி முடிச்சிட்டு நயன்தாராகிட்ட போய் நின்னேன். கதையைக் கேட்டாங்க. `ஓகே நெல்சன் பண்ணலாம்'னு சொல்லிட்டாங்க. யோகி பாபு கேரக்டர் பற்றியும் சொன்னேன். அதுக்கும் எந்தவொரு மறுப்பும் சொல்லலை.

அதே மாதிரிதான் யோகி பாபு கேரக்டரும் டிசைன் பண்ணினேன். இப்போ, இருக்கிற காமெடியன்ஸ்ல யோகிதான் கரெக்டா இருப்பார்னு தோணுச்சு. `எனக்கு கல்யாண வயசுதான்' பாட்டை படத்தோட ஷூட்டிங் முடிச்சதுக்கு அப்புறம்தான் ப்ளான் பண்ணி எடுத்தோம். பாட்டுக்குனு தனியா கோரியோகிராஃபர்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு நானே கோரியோ பண்ணிட்டேன். படத்தோட புரோமோஷனுக்காக இந்தப் பாட்டை வெளியிட்டவுடனே பாட்டுக்கான ரீச் அதிகமா இருந்தது. படத்துல நயன்தாரா கால்ஷீட் வாங்கிறதைவிட யோகி பாபு கால்ஷீட் வாங்கிறதுதான் கஷ்டமான விஷயமா இருந்தது. ஏன்னா, இப்போ வரக்கூடிய எல்லா படத்துலயும் யோகி பாபு இருக்கார், அதுவும் முக்கியமான ரோலில். சரண்யா பொண்வண்ணன் மேடமும் அப்படிதான்.’’

உங்களுடைய `வேட்டை மன்னன்' படத்துக்குப் பிறகு ரெண்டாவது படம் எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?

`` `வேட்டை மன்னன்' படம் இடையில் டிராப் ஆனவுடனே ரெண்டு நாள் ரொம்ப ஃபீல் பண்ணினேன். அப்புறம் சரி ஓகேனு என்னை நானே ஆறுதல் படுத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இதற்கு இடையில் எந்தப் படத்துக்கும் ஸ்க்ரிப்ட் எழுதல. அதுமட்டுமல்லாம `வேட்டை மன்னன்' சமயத்துல டிஜிட்டல் வளர்ச்சி இந்தளவுக்கு இல்லை. ஆனா, இப்போ நமக்குப் போட்டியா நிறைய  பேர் இருக்காங்க. அவங்க எல்லாரையும் பீட் பண்ணி முன்னாடி வரமாதிரியான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணணும். அப்படி ரெடி பண்ணுனதுதான் இந்தப் படம். நயன்தாராகிட்ட கதை சொல்றதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் `கோலமாவு கோகிலா' படத்தோட கதை எழுதுனேன். சுடச் சுட எழுதி இயக்கி முடிச்சிட்டேன்.’’

`வேட்டை மன்னன்' படத்தைத் திரும்பவும் இயக்கிக் கொண்டுவர ஐடியா இருக்கா?

``தயாரிப்பாளர், ஹீரோவுக்கு விருப்பம் இருந்தா பண்ணலாம். அதுவுமே, படத்தோட கதையை ரீ ரைட் பண்ணி இன்னைக்கு இருக்கிற ட்ரெண்ட்டுக்கு ஏத்தமாதிரி வொர்க் பண்ணி செய்யணும். பார்ப்போம்.’’

`வேட்டை மன்னன்' படத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிருக்காராமே?

``அவர் நடிகரா ஆகுறதுக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. சிவகார்த்திகேயன் விஜய் டி.வியில இருந்ததால நல்ல அறிமுகம். இந்தப் படத்தோட ஸ்க்ரிப்ட் வொர்க் போகும்போதும் கூடவே இருந்தார். ஒரு சின்ன ரோல் படத்துல இருந்துச்சு. `நானே பண்றேன்’னு அவரே நடிச்சிட்டார். அதே மாதிரி `எனக்குக் கல்யாண வயசு' பாட்டு ரெடி பண்ணும் போதும் சிவா எழுதுனா நல்லாயிருக்கும்னு அனிருத் ஃபீல் பண்ணுனார். அவர்கிட்ட சொன்னவுடனே, `என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலேயே'னு கேட்டுட்டு ஒரு ரெண்டு நாள் டைம் எடுத்து எழுதிக் கொடுத்துட்டார். கண்டிப்பா, இது எங்க டீம் தவிர வேற யாருக்காவும் சிவா பண்ணியிருப்பாரானு தெரியல.’’

அனிருத் பற்றி?

``அனிருத் எனக்குப் பல வருடங்களாகவே நண்பன். நான் ஸ்கூல் படிக்கும் போது அவர் என்னோட ஜூனியர். ஒண்ணா சேர்ந்து கிரிக்கெட்லாம் விளையாடியிருக்கோம். படத்துக்கு மியூசிக் யார் பண்ணலாம்னு யோசிச்சவுடனே அனிருத்தான் கண் முன்னாடி வந்தார். அதுக்குக் காரணம், அவர் என்னோட நண்பர் அப்படிங்கிறதையும் தாண்டி இப்போ அவர் முன்னணி இசையமைப்பாளர். படத்துல நான் கேட்டதையும் தாண்டி நிறைய வொர்க் பண்ணிக் கொடுத்தார். நானே போதும்னு சொல்லிட்டாலும் அடுத்த ட்யூனை ரெடியா வெச்சியிருப்பார்.’’

`ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் சிம்பு, பிருத்விராஜ் இடையில் நடந்த சண்டை நீங்க எழுதி கொடுத்த ஸ்க்ரிப்ட்னு கேள்விப்பட்டோமே''?

``சிம்பு இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே என்னாலதான். அவரும் நானும் ஸ்கூலிலிருந்து நண்பர்கள். இப்படியொரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமானு கேட்டவுடனே, ஓகே சொன்னார். மற்றப்படி நிகழ்ச்சியில் ஸ்க்ரிப்ட்படியெல்லாம் சண்டை நடக்கல. அது அன்னைக்கு இருந்த சூழ்நிலையில எதார்த்தமா நடந்த ஒண்ணுதான்.’’

`பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலுக்கு, நீங்கதான் இயக்குநரா?

``கமல் சாருடைய வெர்ஷனுக்கு ஒரு டீம்மே வொர்க் பண்ணுவோம். அதில் நானும் ஒருத்தன். அவரோடு பேசுறதே நல்ல அனுபவமா இருக்கும். அவருடைய நாலேஜ், பேஷன் எல்லாத்தையும் பற்றிப் பேசுவார்.’’