

‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆத்மிகாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் வருகின்றன. அதில் முக்கியமானது, ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் ‘நரகாசூரன்’ படம். இதில் அர்விந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா...’ பாடல் மூலம் கவனம் பெற்றவர், அருண்ராஜா காமராஜ். சில படங்களில் நடித்திருக்கும் இவர், இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது இந்திய அணி. இதை மையப்படுத்திய கதையைப் படமாக்குகிறார் அருண்ராஜா. படத்தில் நடிக்க, கிரிக்கெட் விளையாடும் பெண்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் இவர்.

தெலுங்கில் சமீபத்தில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் ரசிகர்கள், விமர்சகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரையும் ஈர்த்திருக்கிறது. மோஸ்ட் வான்டட் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இப்படத்தைப் பாராட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, மற்ற மொழிகளுக்கு இப்படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி.

‘டிஷ்யூம்’, ‘அதிசயத் தீவு’ உள்ளிட்ட படங்களில் நடித்த பக்ரு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘உப்பு புளி காரம்’ என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். விக்ரமாதித்தன் - வேதாளம் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில், பக்ருதான் வேதாளம்!


‘வை ராஜா வை’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் டாப்ஸி, சம்பளம் வாங்குவதில் புதுமையான டெக்னிக்கைக் கையாள்கிறார். தெலுங்கில் இவர் நடித்து கடந்த மாதம் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ படத்தில், சம்பளத்துக்குப் பதிலாகப் படத்தின் லாபத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, அதன்படியே வாங்கியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘குப்பி’, ‘காதலர் குடியிருப்பு’, ‘வனயுத்தம்’ என்று பலரால் கவனம்பெறும் உண்மைச் சம்பவங்களைப் படமாக எடுப்பவர், ஏ.எம்.ஆர்.ரமேஷ். இப்போது சசிகலாவுக்குச் சிறையில் சலுகைகள் வழங்கிய விவகாரத்தை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி ரூபாவின் கதையைத் திரைப்படமாக இயக்க இருக்கிறார். ரூபா கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள்.
மியாவ் பதில்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 25 வருட திரைப்பயணம் குறித்து?
‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டில் ‘ரஹ்மான் 25’க்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைவிடச் சிறப்பானது, இந்த ஆண்டில் அவருடைய அடுத்த அடிகளும் அடுத்தடுத்து அமைந்திருப்பது தான். இந்தியாவின் முதல் கான்செர்ட் மூவியாக ‘ஒன் ஹார்ட்’ படத்தை உருவாக்கியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், செப்டம்பர் 8-ம் தேதி உலகம் முழுக்க இப்படத்தை வெளியிடுகிறார். தவிர, ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியிருக்கும் ‘லே மாஸ்க்’ என்ற இந்தியாவின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி படம், போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதியிருக்கும் ‘99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. விரைவில் ரஹ்மானின் பன்முகத் திறமையை ரசிக்கலாம்!