Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

டான்ஸர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்... இப்படிப் படிப்படியாக உயர்ந்த பிரபுதேவா, இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘யங் மங் சங்’ படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகம் ஆகிறார். தங்கர் பச்சான்,  ஆர்.ஜே.பாலாஜி, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பிரபுதேவா.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

பாலிவுட்டில் மெகா ஹிட்டான ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் காஜல் அகர்வால். ‘உத்தமவில்லன்’ படத்துக்குப் பிறகு இப்படத்தை இயக்குகிறார், நடிகர் ரமேஷ் அரவிந்த். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் இப்படம் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் நாயகியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த ராய் லட்சுமி, ‘ஜூலி-2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். முதல் படத்திலேயே க்ளாமரில் அசத்தியிருக்கும் ராய் லட்சுமியைப் பார்த்து அசந்துபோயிருக்கிறது பாலிவுட். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரை 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

மியாவ் பதில்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி தொழிலாளர்களுக்குமான பிரச்னை எப்படி இருக்கிறது?


திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சி இரண்டாவது முறையாக ஸ்டிரைக் அறிவித்ததைத் தொடர்ந்து, இப்போது மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ‘படப்பிடிப்புகளில் வேலை செய்ய ஆட்கள் தேவை’ எனக் கொடுத்த விளம்பரம்தான் இந்த மோதலுக்கான காரணம். இதனால் அதிர்ந்துபோன பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ‘‘தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்களின் சங்கங்களை அடியோடு அழிக்கப் பார்க்கிறது. நாங்கள் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதற்கும் ஒத்துழைக்கவில்லை எனில், எங்கள் தொழிலாளர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது’’ என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.