Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

`ஒரு இயக்குநரின் காதல் டைரி’ படத்தைத் தொடர்ந்து `கடவுள்-2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன். 1997-ம் ஆண்டில் வேலுபிரபாகரன் இயக்கி நடித்த `கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கிறது இப்படம்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகராக ரொம்பவே பிஸி. `மெர்சல்’, `ஸ்பைடர்’ படங்களை முடித்துவிட்ட அவர், `மாயா’ அஸ்வின் சரவணன் இயக்கும் `இரவாக்காலம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். `போகன்’ தெலுங்கு ரீமேக்கில் அர்விந்த் சுவாமி நடித்த கேரக்டரில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை  அணுகியிருக்கிறார்கள். இதுதவிர, தானே தயாரித்து இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

தமிழ் சினிமாவில், கதை திருட்டுப் பிரச்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது. `` நடிகர் அஜித்துக்கு நான் சொன்ன கதையிலிருந்து, `விவேகம்’ படத்தின் பல காட்சிகள் கையாளப்பட்டிருக்கின்றன’’ எனக் குற்றம் சாட்டியிருந்தார், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ``மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் `வேலைக்காரன்’ படத்தின் கதை என்னுடையது’’ எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் இயக்குநர் தமிழ்வாணன். இது தொடர்பாக இயக்குநர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

`2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவைப் பிரமாண்டமான முறையில் நடத்திய படக் குழுவினர், அதன் ஆடியோ, டீஸர், ட்ரெய்லர் வெளியீட்டு விழாக்களையும் அதேபோல நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் நடந்ததைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அக்டோபர் மாதம் துபாயிலும், அதைத் தொடர்ந்து டீஸர் வெளியீட்டு விழாவை நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும் நடத்துகிறார்கள். ட்ரெய்லர் வெளியீடு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஜனவரி 25-ம் தேதி படம் ரிலீஸ்.

மிஸ்டர் மியாவ்

தமிழ் சினிமாவில் கவனிக்கும்படியான கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், `டாடி’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் பிரிவியூ ஷோ பார்த்த பாலிவுட் பிரபலங்கள், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பைப் பெரிதும் பாராட்டித் தள்ளினார்கள். இதில் நெகிழ்ந்துபோயிருக்கிறார் ஐஸ்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

நடிகர் விஷாலின் 25-வது படமாக உருவாகிறது `சண்டக்கோழி-2’. விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

மியாவ் பதில்

நடிகர் செந்தில் மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டாராமே?

ம். அ.தி.மு.க-வில் நிலவும் உட்கட்சிப் பிரச்னைகள், நடிகர் செந்திலை மீண்டும் சினிமாவுக்குத் திருப்பியிருக்கிறது. இப்போது சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் செந்தில், அடுத்து `மெட்ரோ’ சிரிஷ் நடிக்கும் `பிஸ்தா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் செந்தில் - சதீஷ் காமெடிக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, மேலும் சில படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார் செந்தில்.