Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘அறம் செய்து பழகு’ என்ற தன் படத்தின் டைட்டிலை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றிய சுசீந்திரன், ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்ற டைட்டிலில் எடுத்துக்கொண்டிருந்த படத்தின் பெயரையும் ‘ஏஞ்சலீனா’ என மாற்றியிருக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் சூரி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். தன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ‘மாடர்ன்’ கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறாராம் சுசீந்திரன்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

2010-ல் வெளியான ‘ராவணன்’ படத்தின் ஹிந்தி வெர்ஷனான ‘ராவண்’ படத்தில் ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் இணைந்து நடித்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது இந்த நட்சத்திர  தம்பதி. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க, புதுமுக இயக்குநர் ஜஸ்மீத் இயக்கவிருக்கும் படம்தான் இது. பிரபல பஞ்சாபி கவிஞர் சஹிர் லூதியான்வியின் வாழ்க்கை வரலாறு இது.

மிஸ்டர் மியாவ்

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்துக்கு, ‘புகழேந்தி எனும் நான்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். சமீபகாலமாக சமூகத்தின் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கரு.பழனியப்பன் இப்படத்தில் முழுக்க அரசியல் பேசுகிறார். டி.இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘நடிகை தமன்னா, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்’ என்று பரவிய தகவலால் தூக்கம் இழந்திருக்கிறார் தமன்னா. இருவரும் ஒரு நகைக்கடையில் ஒன்றாக நின்று நகைகளைப் பார்ப்பது போன்ற படத்தை வெளியிட்டு, ‘திருமணத்துக்காக நகை வாங்கியபோது எடுத்த படம்’ எனவும் செய்தி பரவியது. ஆனால், ‘‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்குப் போயிருந்தபோது எடுத்த படம் அது. நான் திருமணம் பற்றி இப்போது யோசிக்கவே இல்லை’’ என்கிறார் தமன்னா.

மியாவ் பதில்

மிஸ்டர் மியாவ்

‘பாகுபலி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்போது சுற்றுலாத்தலம் ஆகியிருக்கிறதாமே?

ம். பிரமாண்ட வெற்றி வெற்ற ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட அரங்குகள் அனைத்தும் சமீபத்தில் சுற்றுலாத்தலம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்து, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. உலகளவில் இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, படத்துக்குப் பயன்படுத்தப்பட்ட அரங்குகள் அனைத்தும் சுற்றுலாத்தலம் ஆக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக பார்வையாளர்கள் வந்து மகிழ்மதி கோட்டை, தேர், யானைகள், பிரமாண்ட ராணா சிலை என எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு படத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட், சுற்றுலாத்தலம் ஆக்கப்படுவது தென்னிந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்!