Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ‘டார்ச்லைட்’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார், நடிகை சதா. இதில் சதாவும், ரித்விகாவும் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மலையாளத்தில் உருவான ‘த்ரிஷ்யம்’ தமிழில் ‘பாபநாசம்’ என ரீமேக் ஆனது. தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளிலும் ரீமேக் ஆகி இப்போது சீன மொழிக்கும் தாவிவிட்டது ‘த்ரிஷ்யம்’. தென்னிந்திய சினிமா ஒன்று சீனாவில் ரீமேக் செய்யப்படுவது இதுதான் முதல்முறை!

மிஸ்டர் மியாவ்

தெலுங்கில் வெற்றிபெற்ற ‘100% லவ்’ படத்தைத் தமிழில் தயாரிக்கிறார்கள்.  ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் முதலில் லாவண்யா திரிபாதி ஹீரோயினாக ஒப்பந்தமானார். சில பிரச்னைகளால் அவர் விலக, ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். படத்தின் பெரும்பகுதி லண்டனில் படமாக்கப்படவுள்ளது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ என்ற கேரக்டரில் பெண்ணாக நடிக்கும் விஜய்சேதுபதியின் ஸ்டில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் பஹத் பாசில், இயக்குநர் மிஷ்கின், நதியா, சமந்தா மற்றும் பலர் நடிக்கிறார்கள். விரைவில் வெளிவரவிருக்கும் ‘சிகை’ படத்தில் கதிரும் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

‘ஹரஹர மஹாதேவகி’யில் நடித்துள்ள கெளதம் கார்த்திக், அதன் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் அதே இயக்குநர், தயாரிப்பாளருடன் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற படத்தில் இணைகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ‘பிக்பாஸ்’ புகழ் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மகள் ஐஸ்வர்யாவை ஹீரோயின் ரேஸில் தக்கவைத்துக்கொள்ள ‘சொல்லிவிடவா’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார் நடிகர் அர்ஜூன். சந்தன் என்ற புதுமுக நடிகர் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் முழுக்க காதலை மையமாகக் கொண்டது. தமிழ், கன்னடம் மொழிகளில் தயாராகியிருக்கும் ‘சொல்லிவிடவா’ தீபாவளிக்குத் திரையைப் பார்க்கலாம்.

மியாவ் பதில்கள்

“விஷால் அறிமுகப்படுத்திய ஒரு ரூபாய் திட்டம் என்ன ஆனது?’’


‘‘திரையரங்குகளில் வசூலாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை எடுத்து, அதை விவசாயிகளுக்கு வழங்குவோம் எனத் தயாரிப்பாளர் சங்க  நிர்வாகிகள் பதவியேற்பில் சொன்னார் விஷால். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள், தற்போது ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் முதல்கட்ட நடவடிக்கை ‘துப்பறிவாளன்’ படத்திலிருந்தே துவங்குகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விஷால் என்பதால் பெரும் எதிர்ப்பு கிளம்பவில்லை. மற்ற தயாரிப்பாளர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. இனிவரும் நாள்களில் இத்திட்டம் எப்படி செயல்படும் என்பது போகப்போகத்தான் தெரியும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism