பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளினி, சீரியல் நடிகை... இந்த வரிசையில் புதிய அவதாரமாக, ‘மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பிரியா பவானி சங்கர். இதில் ஹீரோ, வைபவ். தான் இயக்கிய ‘மது’ என்ற குறும்படத்தையே ‘மேயாத மான்’ ஆக திரைப்படமாக்குகிறார் அறிமுக இயக்குநர் ரத்ன குமார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார் என்றதும், தங்களின் படங்களில் நடிக்கவைக்க சிலர் அவரை அணுகினர். ‘‘ ‘மேயாத மான்’ ரிலீஸுக்குப்பிறகு அடுத்தப் படம் பற்றிப் பேசலாம்’’ என்கிறாராம் பிரியா.

மிஸ்டர் மியாவ்

இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம், ‘பள்ளி பருவத்திலே’ படம் மூலம்  ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். நந்தன்ராமின் தந்தையாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், தாயாக ஊர்வசியும் நடித்துள்ளனர். வாசுதேவ் பாஸ்கர் இயக்குகிறார்.  விஜய் நாராயணன் என்ற புதுமுகம், இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.  ஏ.ஆர்.ரஹ்மான், தன் ஆரம்ப காலத்தில் சிற்பியிடம் கீபோர்டு பிளேயராகப் பணியாற்றியிருக்கிறார். அந்த அன்பில், சிற்பி தன் மகனுடன் ரஹ்மானைச் சந்தித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘மதயானைக் கூட்டம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, ‘சேதுபதி’, ‘கிடாரி’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். ‘பாயும் புலி’ படத்தில் விஷாலுக்கு அப்பாவாக சாதுவான கேரக்டர். மலையாளத்தில் விஷால் வில்லனாக அறிமுகமாகும் ‘வில்லன்’ படத்திலும், அவருக்கு அப்பாவாக கல்லூரி வாட்ச்மேன் கேரக்டரில் வேல.ராமமூர்த்தி நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மஞ்சு வாரியர், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்குப் பிறகு, வேல.ராமமூர்த்திக்கு மலையாளத்திலும் நிறைய வாய்ப்புகள் வருமாம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஆங்கிலப் படம் ஒன்றை இயக்குகிறார் சிம்பு.  தமிழ், தெலுங்கு உள்பட சில மொழிகளில் இந்தப் படம் டப்பிங் செய்யப்படுகிறது. படத்தின் கதையை எழுதி முடித்துள்ள சிம்பு,  படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறார். கவுதம் மேனன்தான் வசனம்.  படத்தை டிசம்பரில் முடித்துவிட்டு, ஜனவரியில் மணிரத்னம் படத்தில் நடிக்கச் செல்கிறார் சிம்பு.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘கும்கி’ படத்தை இயக்கிய பிரபு சாலமன், அதன் அடுத்த பாகத்தைத் தொடங்கி விட்டார். முதல் பாகத்தில் நடித்த விக்ரம் பிரபு, லட்சுமி மேனனுக்குப்  பதிலாக,  ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடித்த மதி, ஹீரோவாகவும் ஜீவிதாவின் மகள் ஷிவானி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் யானைக் கூட்டங்களுடன் படமாக்கப்பட்டு வருகின்றன.

மியாவ் பதில்கள்

மிஸ்டர் மியாவ்

மணிரத்னம் தன் அடுத்தப் படத்தை எப்போது தொடங்குகிறார்?

ணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் அர்விந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய டீமே இருக்கிறது. வழக்கம்போல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. தன், ‘ராவணன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்... என பக்காவான டீமை லாக் செய்திருக்கிறார் மணி. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ படங்களை அர்விந்த்சாமி முடிக்கவும்... ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘96’, ‘சீதக்காதி’, ‘ஜுங்கா’ படங்களை விஜய் சேதுபதி முடிக்கவும்... ஜனவரியில் தன் பட ஷூட்டிங் தொடங்கவும் சரியாக இருக்கும் என்பது மணியின் பிளான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு