‘மெர்சல்’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு விடுமுறைக்காக பார்சிலோனா பறந்த விஜய், தீபாவளிக்குமுன் சென்னை வருகிறார். அடுத்து, இயக்குநர் முருகதாஸ் படத்துக்குத் தயாராகிறார். ஏற்கெனவே விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களைப்போல் அல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் இது இருக்குமாம்.

தன் பிறந்தநாளை, காதலி நயன்தாராவுடன் நியூயார்க்கில் கொண்டாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன், கொண்டாட்டப் படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். ‘இதைப்போன்ற பிறந்தநாள் இனி வராது. கடவுளுக்கு நன்றி’ என்று நெகிழ்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

சமந்தா திருமணத்துக்கு ரெடி! தன் திருமண, நிச்சயதார்த்த உடைகளை வடிவமைக்கும் பணியை கர்ஷா பஜாஜ் என்ற ஆடை வடிவமைப்பாளரிடம் கொடுத்துள்ளார். தயாராகும் உடைகளுடன் போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘எப்படி இருக்கு?’ என ரசிகர்களிடம் கருத்துக் கேட்கிறார்.

தெலுங்கில் ‘மகாநதி’, தமிழில் ‘நடிகையர் திலகம்’. இது நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைப் பேசும் படம். இதில், சீனியர் நடிகர்களின் கேரக்டர்களில் அவர்களின் வாரிசுகளை நடிக்கவைக்கப் பேச்சு நடக்கிறது. என்.டி.ராமாராவாக அவரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்., நாகேஸ்வரராவாக அவரின் பேரன் நாக சைதன்யா, சிவாஜியாக அவரின் பேரன் விக்ரம் பிரபு நடிக்கக்கூடும்.

மியாவ் பதில்

ராதாரவி, சரத்குமார் இருவர் மீதும் விஷால் போலீஸீல் புகார் கொடுக்கப்போகிறாராமே?

ஆம். நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட இந்த இருவரின் மீதும் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கிரிமினல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரைச் சந்திக்கத் தயாராகி வருகிறார் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால். நடிகர் சங்கத்துக்குத் தானமாக கொடுக்கப்பட்ட நிலம், சங்க கணக்குகளில் வரவு வைக்கப்படாமலேயே விற்கப்பட்டிருக்கிறதாம். அதுகுறித்து விசாரிக்கக்கோரியே இந்தப் புகாராம்.