Published:Updated:

`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா?' - சமுத்திரக்கனி பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா?' - சமுத்திரக்கனி பதில்
`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா?' - சமுத்திரக்கனி பதில்

`` `நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே...’ இதுதான் `நாடோடிகள்’ முதல் பாகத்தோட ஒன்லைன். `நீ, நான் இல்லாமல் நாமாவோம்...’ என்பதுதான் `நாடோடிகள் 2’ படத்தின் ஒன்லைன்."

``தாமிராவும் நானும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பிளான் பண்ணினப்போ, அவர் ஒரு கதை சொன்னார். அந்தக் கதையைக் கேட்டுட்டு, ’நாம கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணுலாமே’னு சொன்னதும், ‘என்கிட்ட இன்னொரு கதை இருக்கு. அத சொல்றேன்’னு அவர் சொன்ன கதைதான் `ஆண் தேவதை.’ தாமிரா இந்தக் கதையைச் சொன்னதும், அந்தச் சமயத்தில் நான் பார்த்த ஒரு சம்பவம் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு. ஒரு நாள் நான் கார்ல போயிட்டு இருக்கும்போது, பைக்ல ஒருவர் தன்னோட மனைவி, ரெண்டு பிள்ளைங்களோடு போயிட்டு இருந்தார். அதுல ஒரு குழந்தை பெட்ரோல் டேங்ல படுத்து தூங்கிட்டு இருந்தது. ஒரு வேகத்தடையில வண்டி ஏறி இறங்கும்போது, அந்தக் குழந்தையோட தலை டேங்ல அடிச்சிடக் கூடாதுனு அந்த அப்பா குழந்தையோட தலையைக் கையால தாங்குனாரு. இதைப் பார்க்கும்போதே மனசுக்குள்ள ஒரு மாதிரி இருந்துச்சு. இந்தச் சம்பவம் நடந்தது இரவு 8 மணி. இதுக்கப்பறம் அவங்க வீட்டுக்குப் போய் நைட் சமைச்சு, சாப்பிட்டு தூங்கணும். மறுபடியும் காலையில எந்திரிச்சு அவசர அவசரமா ஓடணும். இந்தச் சம்பவம் என் மனசுக்குள்ள இருக்கும்போது, தாமிராவும் அதே கதையைச் சொன்னதால, அதைப் பதிவு பண்ணணும்னு தோணுச்சு. இப்படித்தான் `ஆண் தேவதை’ ஆரம்பமாச்சு...’’ எனப் பேச ஆரம்பித்தார் சமுத்திரக்கனி.

படத்தில் குட் டச், பேட் டச் பற்றி பேசியிருக்கீங்க. இப்போ இருக்குற காலகட்டத்தில் அது குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம்னு நினைக்கிறீங்க..?

``இப்போ மட்டும் இல்லை, அது எப்போதும் குழந்தைகளுக்கு முக்கியமானது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் காலம் காலமா நடந்துட்டுதான் இருக்கு. இப்போ அதிகமா வெளியில தெரியுறனால பயமும் பதற்றமும் அதிகமா இருக்கு. அதுனால குட் டச், பேட் டச்சை குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொல்லிக்கொடுக்கணும்; கட்டாயமாக ஸ்கூல்களிலும் அதைச் சொல்லிக்கொடுக்கணும். இது ரெண்டும் சரியா நடந்தாலே குழந்தைகளுக்குப் புரிஞ்சிடும் எது சரி, எது தவறுனு.’’

`நாடோடிகள் 2’ என்ன கதை..? 

`` ‘நண்பனின் நண்பன் எனக்கு நண்பனே...’ இதுதான் `நாடோடிகள்’ முதல் பாகத்தோட ஒன்லைன். `நீ, நான் இல்லாமல் நாமாவோம்...’ என்பதுதான் `நாடோடிகள் 2’ படத்தின் ஒன்லைன். நாடோடிகள் படத்தோட தொடர்ச்சியா இது இருக்காது. `நாடோடிகள்’ ட்ரெய்லர்தான்; ’நாடோடிகள் 2’தான் படம். அவ்வளவு டெப்த்தா படம் வந்திருக்கு.’’

திரைப்படங்களில் விவசாயம் குறித்து மரபுவழி மருத்துவம் குறித்து நிறைய பேசுறீங்க. இதையெல்லாம் உங்களோட வாழ்க்கையில எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கிறீங்க?

``நான் ஒரு விவசாயக் குடும்பம்தான். இப்போதும் விவசாயம் பண்றதுக்கான வேலைகள் ஊருல பார்த்துட்டு இருக்கேன். எனக்கு அரசியல் அவ்வளவாகத் தெரியாது; அதைச் செய்றதுக்கும் ஆசை இல்லை. சக மனிதர்களுக்கிடையே எந்த வித அன்பும் இல்லாம இயந்திரமா வாழ்ந்துட்டு இருக்கோம். `நாம் கடந்து போற வழியில பார்க்குற எல்லார்கிட்டேயும் அன்பு செலுத்துங்க’னு என் படங்களிலும் சொல்றேன்; நானும் அப்படித்தான் வாழ்றேன்.’’

அமீர், சசிகுமாருடனான நட்பு..?

``வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்திப்போம். அமீர் அண்ணனைப் பார்க்கும் போதெல்லாம் எங்க நட்பு, விட்ட இடத்திலிருந்து தொடங்கும். எத்தனை நாள் பார்க்காமல் இருந்தாலும் அந்த அலைவரிசை அப்படியேத்தான் இருக்கும். அதே மாதிரிதான் பாலா அண்ணனும் சசிகுமாரும். இது நட்பையும் தாண்டி வேற ஒரு பாண்டிங்.’’

தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்ற புகார் பற்றி என்ன நினைக்கிறீங்க..?

``தமிழ் சினிமாவில் அப்படி எதுவுமே கிடையாது. அது அவங்க மனநிலையையும் அவங்க எப்படி பழகிக்கிறாங்க என்பதையும் பொருத்திருக்கு.’’

சமுத்திரக்கனியின் முழுமையான பேட்டியை வரும் வியாழக்கிழமையன்று ஆனந்தவிகடனில் படிக்கலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு