Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘பிரேமம்’ மலர் டீச்சர் கேரக்டரில் அசத்திய சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கரு’. விஜய் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தில், நான்கு வயது குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார் சாய் பல்லவி. கருக்கலைப்பு சம்பந்தமான விழிப்பு உணர்வைக் கொடுக்கும் விதமாக ‘கரு’ உருவாகிறது.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘பிச்சைக்காரன்’ படத்துக்குப் பிறகு சசி இயக்கும் புதிய படத்துக்கு ‘இரட்டைக் கொம்பு’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, ‘ஈரம்’ அறிவழகன் இயக்கவிருக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்தப்படமும், நாயகிகளை மையப்படுத்திய கதைதான்.  நயனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

பார்ட்-டூ படங்களின் வரிசையில் இணையவிருக்கிறது, சுந்தர்.சி இயக்கிய ‘கலகலப்பு’. விரைவில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜீவா, ஜெய் ஆகியோர் நாயகர்களாகவும், கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கவிருக்கிறார்கள். ‘ஹிப்ஹாப்’ ஆதி இசையமைக்கும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.

மியாவ் பதில்

‘மெர்சலாயிட்டேன்’, ‘மெர்சல்’ என ஒரேமாதிரியான பெயர்கள் பதிவு செய்யப்பட்டது தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, சம்பந்தப்பட்ட இரு தயாரிப்பாளர்களுக்கோ இப்போதுதான் தெரியுமா?

‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பு தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவரால் 2014-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிறகு, ‘மெர்சல்’ என்ற தலைப்புப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரேமாதிரியான தலைப்புகளைப் பதிவுசெய்திருப்பது, தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காததன் விளைவுதான், இன்று ‘மெர்சல்’ தலைப்புப் பிரச்னையில் சிக்கக் காரணம்.  தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தும் பலன் இல்லாததால், நீதிமன்றத்தை அணுகி அக்டோபர் 3 வரை ‘மெர்சல்’  என்ற பெயரில் படத்தை விளம்பரப்படுத்தவோ, வெளியிடவோ தடை வாங்கியிருக்கிறார் ‘மெர்சலாயிட்டேன்’ படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன்.