விஜய் சேதுபதி... இன்றைய இளைஞர்களுக்கான மாரல் ரோல் மாடல். வித்தியாசமான படங்களில் கலக்கியடிக்கும் சக்சஸ் ஹீரோ. தன் வாழ்வில் மறக்க முடியாத, வாழ்க்கைக்கு அழகும் அர்த்தமும் சேர்த்த, மனசுக்குள் எப்போதும் நெருக்கமாக இருக்கும் இறைவிகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியதும், தூறத் தொடங்கின பேரன்பின் வார்த்தைகள்...

`அம்மா' சரஸ்வதி

``நம்ம வாழ்க்கையில நமக்கு முதன்முதல்ல அறிமுகம் ஆகிறது அம்மாதான். எல்லோருக்குமே அவங்கவங்க அம்மா ஸ்பெஷல்தான். எனக்கும் அப்படித்தான். அம்மா பேரு சரஸ்வதி. அவங்க பெரிசா படிக்கலையே தவிர, ரொம்ப மெச்சூர்டாக நடந்துப்பாங்க. பத்தாவது படிக்கும்போதிருந்தே அவங்களை நான் `சரசு'னு கூப்பிட ஆரம்பிச்சேன். இப்போவரைக்கும் `டேய்... சரசு'ன்னுதான் செல்லமா கூப்பிடுவேன். அம்மா என்னை `அப்பா'ன்னுதான் கூப்பிடுவாங்க. அவங்களுக்கு மொத்தம் மூணு பசங்க, ஒரு பொண்ணு. நானும் எங்க அம்மாவும் ரொம்ப க்ளோஸ். அம்மாவுக்கு நான் அப்பா; எனக்கு அவங்க பொண்ணு. நான் என்ன பண்ணினாலும் அதுல பெருசா தலையிட மாட்டாங்க `பார்த்துக்கோப்பா சேது'னு மட்டும் சொல்வாங்க. எங்க அப்பாவும் ரொம்ப சுதந்திரமான மனிதர். நான் துபாய்க்கு வேலைக்குப் போகும்போது எனக்கு 20 வயசு. எங்க அப்பா என்கிட்ட `இதுதான் உனக்கு சரியான வயசு சேது. எல்லாத்தையும் சுதந்திரமாப் பண்ணுடா. இவன் என்ன நினைப்பான், அவன் என்ன சொல்லுவான்னு எதையும் யோசிக்காதே. இந்த வயசு அனுபவங்களைத் தேடும் வயசு. உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணுடா... எதுவுமே தப்பு இல்லைடா'னு சொன்னார். எங்க அம்மா உடனே `புள்ள ஏதாவது தப்புத்தண்டா பண்ணிடப் போகுது'னு சொல்லிட்டு, என்கிட்ட `நீ அம்மா புள்ளையாப் போய்ட்டு, அம்மா புள்ளையாகவே வந்திடணும்ப்பா'ன்னு சொன்னாங்க.

பல சமயங்களில் அப்பா, அம்மாகூட சண்டை போடுவாங்க. நான் அம்மாகிட்ட `நீ எதுக்கு இந்த மனுஷன் என்ன பண்ணினாலும் இவரைவிட்டுப் போகலை'னு கேட்கும்போதெல்லாம், `எனக்கு நாலு புள்ளைங்கப்பா. நான் படிக்காத பொம்பளை. என் புள்ளைங்களுக்கு அப்பா வேணுமில்லை. அப்பா இருந்தாத்தானே புள்ளைங்களுக்குத் தப்பு பண்ணக் கூடாதுனு பயம் வரும். என் புள்ளைங்க கெட்டுப் போயிடுச்சுன்னா, நான் எங்கப்பா போவேன்'னு சொல்வாங்க. எனக்கும் என் மனைவிக்குமே அடிக்கடி சண்டை வரும். அது இயல்புதான். என் குழந்தை, என் மனைவிகிட்ட இதே கேள்வியைக் கேட்கலாம்... `நீ ஏன் இந்த ஆளுகூட இருக்கே?'னு. ஆனா, அந்த இடத்துல இருந்து குழந்தைக்காக என்ன சண்டை போட்டாலும், அப்பாவும் வேணும்னு ஒரு முடிவு எடுக்கறாங்கல்ல... அதுதான் அம்மா. நாங்க அண்ணன், தம்பி, தங்கச்சிங்க ஒண்ணா இருக்கோம்னா அதுக்குக் காரணம் அம்மா எங்களை வளர்த்த விதம்தான். அம்மா எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்துபோய் உட்கார்ந்ததே இல்லை. ஏதாவது பிரச்னை வரும்போதுதான் அவங்களுக்கு 10 மடங்கு அதிக பலம் வரும். எனக்குக் கோபம் வந்தா, அம்மாவைக் கன்னாபின்னான்னு கத்திட்டு விட்டுடுவேன். கோவிச்சுட்டு என்கூடப் பேச மாட்டாங்க. நான் திரும்பவும் போய் அவங்களைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்து, சமாதானம் பண்ணிடுவேன். அப்படியே உருகிடுவாங்க. அப்படியும் உருகலைனா. `டேய் சரசு... பசிக்குது... சாப்பாடு வை'னு சொன்னா, தட்டுல சாப்பாடு வெச்சுட்டு எல்லாத்தையும் மறந்துடுவாங்க. நமக்கு எத்தனை வயசானாலும், நாம என்ன ஸ்டேட்டஸ்ல இருந்தாலும், அம்மாவுக்கு நாம எப்போதும் குழந்தைதான்.’’

`தங்கை' ஜெயஸ்ரீ சிம்மவாகினி

``எங்க வீட்டுல எல்லோருக்கும் ரொம்பப் பெரிய பேரு. எங்க பாட்டி பேரு சண்முகம்கிறதால என் அண்ணனுக்கு `உமா சண்முகப் பிரியன்'னு பேரு வெச்சாங்க. எங்க தாத்தா பேரு குருசாமிங்கிறதால, எனக்கு `விஜய குருநாத சேதுபதி'னு வெச்சாங்க. என் தம்பி பேரு யுவபாரதி ராமநாதன். என் தங்கச்சி பேரு ஜெயஸ்ரீ சிம்மவாகினி. இவதான் என் முதல் குழந்தை. நான் ஸ்கூல் படிக்கும்போதே எனக்கும் அவளுக்கும் நாலு வயசு வித்தியாசம். அவ ஸ்கூல்ல அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்கன்னா நான்தான் போவேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் அவளுக்கு ஸ்கூல். நான் ஊர்ல இல்லாத சமயத்துல அவ ப்ளஸ் ஒன் போகும்போது, எக்மோர்ல உள்ள ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க. `நீ யாரைக் கேட்டு என் புள்ளைய அங்கே சேர்த்தே?'னு எங்க அப்பாகிட்ட சண்டை போட்டேன். அவ விஷயத்துல நான் ரொம்பப் பயப்படுவேன். அது அவளுக்குமே தெரியும். எங்க வீட்டுல அண்ணன்-தங்கை சண்டை இருந்ததே இல்லை. ஏன்னா, அவதான் கடைசிப் பொண்ணு. ரொம்பச் செல்லமா பார்த்து வளர்ந்த குழந்தை. அவ காலையில வெளியே கிளம்பறான்னா, நான் லேடீஸ் பஸ்ல ஏத்திவிட்டுட்டு வருவேன். திரும்பவும் வரும்போது பத்திரமாக் கூட்டிட்டு வருவேன். நான் துபாய்ல வேலை செஞ்சுட்டு, திரும்பவும் அங்கே போகாம இருக்க ரெண்டு காரணங்கள் இருந்துச்சு. ஒண்ணு, என் மனைவி அப்போ மாசமா இருந்தாங்க. இன்னொண்ணு, என் தங்கச்சி `துபாய் போகாதே'னு சொன்னாங்க. இந்த ரெண்டு காரணங்களுக்காகவும்தான் இங்கயே தங்கி சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணினேன்.

`புதுப்பேட்டை' ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போட்டோ ஷூட் எடுத்தாங்க. அதுல நான் தனுஷுக்குப் பின்னாடி நிற்பேன். அதைப் பார்த்த அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். இப்போ நான் நடிகன் ஆனதுல அவளுக்கு அவ்வளவு பெருமை. ஆனா, எதையும் வெளியே காமிச்சுக்க மாட்டா. அவளுக்கு நான் நடிச்சதுல `பீட்சா' , `பண்ணையாரும் பத்மினியும்' ரொம்பப் பிடிச்ச படங்கள். கோபம் வந்தா, என்னை `பன்னிப் பயலே'ன்னுதான் திட்டுவா. அவகிட்ட பிடிச்சது என்னன்னா, ரொம்ப நேர்மையா இருப்பா. லைஃப்ல பெண் குழந்தை பெத்துக்கிறதும், பெண் குழந்தையோட பொறக்கிறதும் பெரிய வரம்னு எனக்கு புரிய வெச்சது அவதான். அவளுக்கு இப்போ ஒரு பெண் குழந்தை இருக்கா. அவ பேரு இனியவள். நான் அவளை `மருமக'ன்னுதான் கூப்பிடுவேன். என் `மருமக' அப்படியே என் மாப்பிள்ளை ஜெராக்ஸ். ஆனா, யாரு கேட்டாலும் என்னை மாதிரி இருக்கேன்னுதான் சொல்வா. என்னை `விஜி மாமா'னுதான் கூப்பிடுவா. `விஜி மாமா மாதிரி ஏன் நடந்துக்க மாட்டேங்கிறீங்க?’னு அவ அப்பா அம்மாகிட்ட சொல்வா. இப்போ அவங்க தாம்பரத்துல இருக்காங்க. எப்பயாவதுதான் மீட் பண்ணுவேன். என் தங்கச்சி என்னை எவ்வளவு நேசிக்கிறான்னு என் மருமக என்னை நேசிக்கிறதுல இருந்து தெரிஞ்சுது. அவ ஏதாவது சாப்பிடலைன்னா ‘எனக்குத் தெரியாது. உன் மாமாதான் கொடுத்துவிட்டாங்க'னு சொன்னா போதும், எவ்வளவு கசப்பான மருந்தா இருந்தாலும் சாப்பிட்டுருவா. அது எனக்கே பெரிய ஆச்சர்யமா இருக்கும். என் லைஃப்ல நான் அவகூட ரொம்ப நேரம் இருந்ததுகூட இல்லை. அது ஒரு கிரேட்டஸ்ட் லவ். தங்கச்சி என் மேல வெச்ச பாசம் என் மருமகளுக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆனது பெரிய ஆச்சர்யமான விஷயம். அது ஒரு பேரானந்தம்னு வெச்சுக்கோங்களேன். பெரிய கிஃப்ட்.’’

`மனைவி' ஜெஸ்ஸி

``என் மனைவி பேரு ஜெஸ்ஸி. எந்த நம்பிக்கையில என்னைக் கல்யாணம் பண்ணாங்கங்கிறதே பெரிய கேள்விதான். யாஹூ சாட்லதான் அறிமுகம் ஆனோம். அப்படியே லவ் பண்ணினோம். வீட்டுக்குப் போனோம். பார்த்தோம். அவளுக்குப் பிடிச்சிருச்சு. அஞ்சு மாசம்தான் லவ். அப்புறம் உடனே கல்யாணம். `என் தலைமேல 10 லட்ச ரூபா கடன் இருக்கு'னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணினேன். என்கூட அவங்க பழகவும் இல்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அது என்னன்னுதான் தெரியலை. மே பி, என் ஃப்ரெண்டு சந்துருனு ஒருத்தன் இருக்கான். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அவனோட எக்ஸ்-கொலீக் அவங்க. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் என்னைப் பற்றி நிறைய சொல்லியிருப்பாங்க. இருந்தாலும் யாரு என்ன சொன்னாலுமே, நேர்ல பார்த்துப் பழகாத ஒரு நபரைக் கல்யாணம் பண்றது ஆச்சர்யம்தான். என் கையில ஒரு பைசா காசு இருக்காது. அதனால, கல்யாணத்துக்கு அப்புறம்தான் அவங்க நிறைய கஷ்டப்பட்டாங்க. அன்னிக்குத் தேதியில விஜய் சேதுபதின்னா, விஜய குருநாத சேதுபதி மட்டும்தான். அவனை `சேது'னு சொல்வாங்க. இல்லை... `விஜய்'னு சொல்வாங்க. வீட்லல்லாம் `விஜி'னு கூப்பிடுவாங்க. இதுதான் அவங்களுக்குத் தெரிஞ்சிருந்துச்சு. என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கத் தோணும். `ரொம்பக் கூச்ச சுபாவம் உள்ளவன். வேற யார்கிட்டயும் பேச மாட்டான். அவன் வந்து திடீர்னு சினிமாவுக்கு நடிக்கப் போறேன்னு சொல்றான். சொல்பேச்சுக் கேட்க மாட்டேங்கிறான். குழந்தை வேற பொறந்துடுச்சு. பொய் சொல்லிட்டே இருக்கான். அவன்கூட வாழுறது பெரிய ரிஸ்க்...’ இருந்தாலும் எல்லாத்தையும் தாங்கிட்டு என்கூட இருந்தாங்க.

நாங்க நிறைய சண்டை போட்டிருக்கோம். நான் ரொம்ப ஹார்டான ஆள். என்கூட இருக்கிறது ரொம்பக் கஷ்டம். நான் பேசுறது சில சமயம் பாதி எனக்கே புரியாது. நான் ரொம்ப சென்சிடிவ். சுர்ர்ர்ருனு ரியாக்ட் பண்ணிடுவேன். மனைவி வேலைக்குப் போயிட்டிருந்தாங்க. நான் எவ்வளவு பொய் சொன்னாலும்கூட அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. நான் சினிமாவுல தோத்தே போயிட்டாலும், குழந்தைங்க லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சது, அவங்க மேல இருந்த நம்பிக்கையினாலதான். ஒருவேளை அன்னைக்கு அவங்க, `இனிமே வேலைக்குப் போக மாட்டேன்'னு ஒரு முடிவு எடுத்திருந்தாங்கன்னா, இன்னைக்கு நான் சினிமாவுல இருந்திருக்க மாட்டேன். குழந்தைங்களுக்காக நான் சம்பாதிச்சுதான் ஆகணும்னு கட்டாயம் இருந்திருக்கும். ஏதாவது வேலைக்குப் போயிருப்பேன். அந்த வகையில இன்னிக்கி சினிமாவுல நான் இருக்கேன்னா, என் மனைவி ஜெஸ்ஸிதான் முக்கியமான காரணம். நான் நடிச்ச முதல் படம் பார்த்துட்டு, டைரக்டருக்கு போன் பண்ணி `என் புருஷனை எதுக்கு ஹீரோவாக்குனீங்க?'னு சண்டை போட்டாங்க. ஏன் சண்டை போட்டாங்க... எதுக்கு சண்டை போட்டாங்கனு நானும் இதுவரைக்கும் கேட்டுக்கலை. அது ஒரு சேஃபர் சைடாகூட இருக்கலாம்னு நினைக்கிறேன். ஏன்னா, அந்தக் கேள்விக்கான பதிலை நான் எதிர்பார்க்கலை.

இப்போ நான் நடிச்ச படங்களைக் குடும்பத்தோட போய் நாலஞ்சு தடவைப் பார்த்துடுவாங்க. என் படம்னு இல்லை. எல்லாப் படங்களையும் பார்ப்பாங்க. ஷி என்ஜாய்ஸ் தட். அவங்க ஒரு மூவி லவ்வர். அவங்ககூட என் படங்கள் பார்த்தாலே எனக்கு டிஸ்டர்ப் ஆகிடும். நான் படத்துல அழுதா, அவங்களும் அழுதுடுவாங்க. கத்தினா கத்திடுவாங்க. எனக்கு அப்படிப் படம் பார்த்தா எரிச்சலா இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல அவங்ககூட ஒண்ணா சேர்ந்து படம் பார்க்கிறதையே விட்டுட்டேன். என் படத்தை மட்டும் சேர்ந்து பார்க்க மாட்டோம். வேற படம்ன்னா போவோம். `வெண்ணிலா கபடிக்குழு' பட ரிலீஸ் அப்போ, நாங்க நாலு பேர் ஒண்ணாப் படம் பார்த்துட்டு இருந்தோம். `தயவுசெஞ்சு நான் வரும்போது மகன், மகள்கிட்ட ‘அப்பா.. அப்பா’னு சொல்லிக் கொடுக்காதே’னு சொல்லித்தான் உட்கார வெச்சிருந்தேன். அப்புறம் பார்த்தா, நான் வந்தவுடனே, `டேய்... அப்பாடா அப்பாடா'னு கத்துறாங்க.

அவங்களுக்கு நான் நடிச்ச எல்லாப் படமும் பிடிக்கும். இப்பவும் நான் நடிச்ச படங்களுக்கு கமென்ட்ஸ் கொழந்தைங்ககிட்டதான் கேட்பேன். பையன் சூர்யா ரொம்ப சென்ஸ் பண்றான். `படம் பார்த்துட்டுப் பிடிச்சிருக்கு. பிடிக்கலைனு மட்டும் சொல்லக் கூடாது. எது நல்லா இருக்கு, நல்லா இல்லைனு சொல்லணும்’னு சொல்வேன். படம் பார்த்துட்டு நாங்க டிஸ்கஸ் பண்ணுவோம்.’'

`மகள்’ ஸ்ரீஜா

ஸ்ரீஜாகிட்ட க்யூட்டான விஷயம் என்னன்னா, அவளுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது ஒருநாள் நான் காலையில எழுந்து வாக்கிங் போனேன். அப்போ மழை வந்துடுச்சு. நான் போன பாதையைப் பார்த்து `மழை பெய்யுதே... என் புள்ள குடை எடுத்துட்டுப் போனானா?'னு அவ கேட்டிருக்கா. இதை என் பொண்டாட்டி என்கிட்ட சொன்னா. `பொம்பளப் புள்ளை பெத்தாத்தான்டி காயப்போடுற துணிகூட கலர்ஃபுல்லா இருக்கும்'னு சொன்னேன். பொம்பளைப் புள்ளைன்னாலே ஒரு எமோஷனல் பாண்ட் இருக்கும். அஃப்கோர்ஸ் என் பையன் சூர்யா என்னை ரொம்ப லவ் பண்றான். ஆனா, இவ லவ் ரொம்ப டாமினேட்டிங்கா, கன்ட்ரோல்டா இருக்கும். ஆம்பளைப் பசங்க லவ் பெரிசா தெரியாது. என் பையன் ரொம்ப எமோஷனல் பாண்ட் உள்ள ஓர் ஆள். நான் எதாவது சொன்னா, தாங்க மாட்டான். ஆனா, என் பொண்ணு டாமினேட் பண்ணுவா, லவ் பண்றதுல. அதுலதான் கொஞ்சம் பிரச்னை வரும். நான் நைட் வர லேட் ஆகும். பெட்ல அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல `இந்த இடம் அப்பாவுக்கு’ன்னு தலைகாணி போட்டு வெச்சுக்குவா.

ஒருநாள் நான் ஷூட்டிங் முடிஞ்சு ஊர்ல இருந்து வந்தேன். பையன் ஸ்கூலுக்குப் போயிட்டான். நான் ஸ்ரீஜாகிட்ட `இருடா... அப்பா உன்னைக் கொஞ்சநேரம் கொஞ்சிட்டுக் கொண்டுபோய் ஸ்கூல்ல விடுறேன்'னு சொல்லிட்டேன். ஸ்கூல்ல விடும்போது 10 நிமிஷம் லேட் ஆகிடுச்சு. ஹீரோ மூஞ்சிதானே ஸ்கூல்ல எதுவும் சொல்ல மாட்டாங்க. விட்டுடுவாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, பிரின்ஸிபால் என்னைக் கிழிகிழினு கிழிச்சுட்டார். `நீங்க யாரா வேணா இருந்துக்கங்க'னு சொல்லிட்டாப்ல. அது என் வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட பெரிய பாடம். என் பொண்ணு முன்னாடி என்னைத் திட்டிட்டாங்க. எனக்கு இது தேவைன்னு நல்லாத் தெரியுது. அப்ப அவ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டோ, செகண்ட் ஸ்டாண்டர்டோதான் படிச்சுட்டு இருந்தா. நான் ஸ்கூல்ல இருந்து கிளம்பினதுக்கு அப்புறம், நேரா பிரின்ஸிபால்கிட்ட போய், `அது என் அப்பாவோட தப்பு இல்லை. என்னோட தப்புதான். ஐ யம் ஸாரி'னு சொல்லிட்டு வந்துட்டா. அதை அந்த பிரின்ஸிபால் என் மனைவிக்கு கால் பண்ணி சொல்லி, `ஸாரி' கேட்டிருக்கார். என் பொண்ணு கொஞ்சம் தைரியமான ஆளு. எங்க வீட்ல என் தங்கச்சி மாதிரிதான் அவ. இப்போ அஞ்சாவது படிச்சுட்டு இருக்கா. அப்பாவின் வாழ்க்கையை கலர்ஃபுல்லா ஆக்குறது மகள்கள்தான்.’’

ஹீரோயின்ஸ்

``என்கூட நடிச்ச ஒரு ஹீரோயினை மட்டும் தனியா குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்றது சரியாகவும் இருக்காது. ஹீரோயின்களுக்கு சினிமாவுல லாங்-டர்ம் லைஃப் ரொம்பக் குறைவு. சரியான இயக்குநர்கள், கதைகள் அமையறது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது. ஒரு காட்சிக்கு ரெடியாகறதுக்கும், அந்த காஸ்ட்யூம் கலையாம பார்த்துக்கிறதுக்கும், தங்களை பிரசன்ட் பண்ணிக்கிறதுக்கும் அவங்க அவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு. 31 வயசுல ஒரு பொண்ணு ஹீரோயினா இருக்காங்கன்னா, அது அவங்களுக்குக் கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் ஏஜ். எனக்குத் தெரிஞ்ச ஒரு ஹீரோயின் 14 வயசுல நடிக்க வந்துட்டாங்க. சினிமான்னா என்னன்னே தெரியாம நான் சுத்திட்டு இருந்த காலகட்டத்துல ஹீரோயின் ஆகி இருக்காங்கன்னா, அது ரொம்பப் பெரிய விஷயம். அவங்களோட டீன் ஏஜ்ல 40 வயசு ஆளுங்ககூட பேசி சமாளிக்கணும், சில சமயம் செட்ல அடல்ட் கன்டென்ட் எல்லாம் பேசுவாங்க. இந்த மாதிரி நிறைய சவால்கள் அவங்களுக்கு இருக்கு. இது எல்லா ஹீரோயின்ஸுக்கும் பொருந்தும்.

எல்லாம் சரியா வரணும்ங்கிற நோக்கத்துல சில முடிவுகள் எடுப்பாங்க. அது சரியில்லாமப் போயிருக்கும். சில முடிவுகள் வாழ்க்கையையே மாத்திடும்.

நமக்கு 20 வயசுல வாழ்க்கை புரியறதே கஷ்டமா இருக்கும். அவங்க வாழ்க்கையையும் புரிஞ்சுக்கணும்; தொழிலையும் புரிஞ்சுக்கணும்; அவங்களைவிட வயசுல பெரிய ஆளுங்களையும் புரிஞ்சுக்கணும். இது எல்லாத்தையும் தாண்டி வர்றது அவ்வளவு ஈஸி இல்லை. என்கூட வொர்க் பண்ற எல்லா ஹீரோயின்ஸையும் பார்த்திருக்கேன். ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஃபுல்லான லைஃப் அவங்களுடையது. ஹீரோயின்ஸ் பற்றிய தேவையில்லாத சில நெகட்டிவ் கமென்ட்ஸ் பார்க்கும்போது கஷ்டமா இருக்கும். அப்படி டக்குனு போறபோக்குல ஒருத்தர் மேல சேற்றை வாரி வீ்சிடுறோம்.

பெண்களாலதான் உலகம் இயங்குது. இந்த உலகத்துல இருக்கிற அத்தனை உணர்வுகளையும் கனெக்ட் பண்றது அவங்கதான். அம்மா, தோழி, மகள்னு எல்லாவிதத்துலேயும் எமோஷனல் பாண்டிங் உருவாக்கறது அவங்கதான். நாம வாழற வாழ்க்கையை அழகாகவும் பொறுப்புள்ளதாகவும் மாத்துறது பெண்கள்தான்.''

படங்கள்: `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தில் இருந்து...