ஒளிப்பதிவாளர் வெற்றி, ஏற்கெனவே தெலுங்கில் மூன்று படங்களுக்கு கேமரா பிடித்திருக்கிறார். தமிழில் `தெனாவெட்டு', `மாசிலாமணி' `காஞ்சனா' என மூன்று படங்கள்... அடுத்து அஜித் நடித்த மூன்று படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். தமிழ் சினிமாவில் வழக்கமாகப் படப்பிடிப்பு இல்லையென்றால், விசா எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவார்கள். வெற்றி, விதிவிலக்கு. ஷூட்டிங் இல்லையென்றால், சொந்த ஊருக்கு விவசாயம் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் விவசாயம் எனப் பன்முகம்கொண்ட வெற்றி, படப்பிடிப்புத் தளத்தில் அஜித்திடம் பழகிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

வீரம்: ``அப்போது அஜித் சார் `ஆரம்பம்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் என் நண்பர் இயக்குநர் சிவாவிடம் இருந்து அழைப்பு. `வெற்றி, அஜித் சாரிடம் உன்னைப் பற்றிச் சொன்னேன். டபுள் ஓகே சொல்லிவிட்டார்’ என்று சொன்னார். அஜித் சாரை ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் `வீரம்' ஷூட்டிங்கில் முதன்முதலாகப் பார்த்தேன். பெரிய நடிகர் என்பதால், சில காட்சிகளைப் படமாக்கும்போது இன்னொரு முறை கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. ஒரு காட்சியில் தயங்கித் தயங்கி `ஒன்ஸ்மோர்’ கேட்டுவிட்டேன். அஜித் சார் தேடிவந்து, தோளில் கைபோட்டு `சார், நீங்க ஒவ்வொரு சீனுக்கும் நாங்க நல்லாத் தெரியணும்னு வேலை பார்க்கிறீங்க. நீங்க எதிர்பார்க்கிற ரிசல்ட் கிடைக்கிறவரைக்கும் ஒன்ஸ்மோர் கேட்டா தப்பே இல்லை' என்று சொல்ல, நான் நெகிழ்ந்து போனேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் `சார்... சார்...' என்றுதான் என்னை அஜித் சார் அழைப்பார். ஒருநாள், `சார்... இந்தப் படத்துல உங்களுக்கு நாலு தம்பிங்க. அஞ்சாவது தம்பியா என்னை நினைச்சுக்கிட்டு இனிமே வெற்றின்னே கூப்பிடுங்க சார்' என்றேன். `நீங்க என்னோட தனிப்பட்ட நண்பரா இருந்தா, தாராளமா பேரைச் சொல்லியே கூப்பிடுவேன். நீங்க செய்ற தொழிலுக்கு நாலு பேருக்கு மத்தியில மரியாதை தரணும். அதான் `சார்’னு கூப்பிடுறேன்' என்று சொன்னார். `வீரம்' படத்தில் க்ளைமாக்ஸ் சண்டை மழையில் நடக்கும். ஒரு ஷாட் முடிந்ததும், `நீங்கள் கேரவனில் ரெஸ்ட் எடுங்கள். பிறகு அழைக்கிறோம்’ என்றோம். `நான் மறுபடியும் மழையில நனையணும்; சேத்துல புரளணும். அதுக்குப் பேசாம இங்கேயே இருந்துடறேன்' என்று சொல்லிவிட்டு சண்டைக்காட்சி எடுத்து முடிக்கும்வரை அங்கேயே இருந்தார்.''

வேதாளம்: `` `வீரம்' படத்தில் அஜித் சார் முழுக்க முழுக்க வேஷ்டி சட்டையோடு கிராமத்து கேரக்டரில் நடித்திருந்தார். `வேதாளம்' படத்தை நகரத்தில் படமாக்கத் திட்டமிட்டோம். முதல் ஷெட்யூல் சென்னையில். `வீர விநாயகா' பாடல் காட்சியைப் படம்பிடித்தோம். அடுத்தது கொல்கத்தா. அங்கே, அஜித் சாரை யாருக்கும் அவ்வளவாக அடையாளம் தெரியாது என்பதால், மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் அவரை நடக்கவைத்து, ஓடவைத்து, பஸ்ஸில் ஏறவைத்து லைவ்வாக படமாக்கினோம். எங்களுக்குப் பிரமாதமாக ஒத்துழைப்புக் கொடுத்தார். `வேதாளம்', பூஜை போட்டு, ஆறே மாதங்களில் தீபாவளிப் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம். ஒரு மாதம் தொடர்ந்து இரவு பகலாக ஷூட்டிங் நடந்தது. நள்ளிரவு மூன்று மணிவரை அஜித் சார் நடித்துக் கொண்டிருப்பார். அவரது ஷாட் முடிந்த பிறகும் வீட்டுக்குப் போகாமல் எங்களுடனே இருப்பார். `வேதாளம்' படத்தின் க்ளைமாக்ஸ் முடியும்போதே, `நாம அடுத்த படத்துலேயும் ஒண்ணா வொர்க் பண்றோம்' என்று சொல்லிவிட்டார்.''

விவேகம்: ``இயக்குநர் சிவா அஜித் சாரிடம், `நீங்க `விவேகம்' படத்துல ஒரு இன்டர்நேஷனல் ஏஜன்ட் கேரக்டர்ல நடிக்கிறீங்க. அதுக்கு பிசிக்கலா ஃபிட்னஸ் இருந்தா நல்லா இருக்கும் சார்' என்றார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அஜித் சார் வந்தார். வயிறு குறைந்து, புஜங்கள் பெருத்து, செம ஃபிட்னஸாக எங்களை அசத்தினார். `விவேகம்' படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் வெளிநாட்டிலேயே நடந்தது. தனது உடலில் வெயிட் போட்டுவிடக் கூடாது என்பதில் அஜித் சார் மிகமிகக் கவனமாக இருந்தார். நாங்கள் விதவிதமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அவர் வேகவைத்த காய்கறிகளையும் சூப்பையும் குடித்துக்கொண்டிருந்தார். ஒரு பைக் சேஸ் காட்சிக்குப் பயிற்சி கொடுக்க ஃபிரான்ஸில் இருந்து இரண்டு மாஸ்டர்களை வரவழைத்திருந்தனர். அஜித் சார் எப்படியெல்லாம் பைக்கை இயக்கி, சாகசம் செய்ய வேண்டும் என்று செய்து காண்பித்தார் ஒரு மாஸ்டர். `நான் ஒருமுறை முயன்று பார்க்கட்டுமா?' என்று சொல்லிவிட்டு, மாஸ்டர் செய்த அத்தனை சாகசங்களையும் அவர் செய்துகாட்ட, அந்த மாஸ்டர் ஆச்சர்யப்பட்டுப் போனார். `உண்மையிலேயே அஜித் ரியல் ஹீரோ' என்று மனம் திறந்து பாராட்டினார். அஜித் `நாம கடுமையாக உழைச்சு ஒரு ஸ்டார் அந்தஸ்தை அடைஞ்சிருக்கோம். அதை இழக்காம தக்க வெச்சுக்கணும்னா, முன்பைவிட அதிகமா உழைக்கணும்' என்கிற வாசகத்தைத்தான் அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.''

விவசாயம்: ``படப்பிடிப்பு இல்லையென்றால், சொந்த ஊருக்குப்போய் விவசாயம் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். என் அப்பா என்.எஸ்.பழனிச்சாமி, விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். கோயம்புத்தூர் கல்லூரியில் புரொஃபஸர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயப் போராட்டங்களில் கலந்துகொண்டு போராடினார். 1996-ம் ஆண்டு உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பாக அ.தி.மு.க கூட்டணியில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக ஜெயித்தார். அதன்பின் அரசியல் சார்பு இருக்கக் கூடாது என்று `தமிழக விவசாயச் சங்கம்’ என்ற ஒன்றை நிறுவினார். நான் கடந்த 20 வருடங்களாகச் சென்னையில் இருந்ததால், அவருடைய பெருமை எனக்குத் தெரியவில்லை. அப்பா மறைந்த பிறகு, விவசாயச் சங்க அமைப்பில் எங்கள் குடும்பத்தில் யாராவது பதவி வகிக்க வேண்டும் என்று கேட்டனர். என்னை மிகவும் வற்புறுத்தியதால் கெளரவமான ஒரு பொறுப்பை ஏற்றிருக்கிறேன். இளைஞர்களுக்காக `ஏர்முனை இளைஞர் அணி' என்கிற அமைப்பை உருவாக்கினோம். திருப்பூரில் வியாபாரிகள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகளுக்காகப் போராடியிருக்கிறோம். எல்லோரும் தென்னை மரத்தையே நடுகிறார்கள், விரும்புகிறார்கள். உண்மையில், பனைமரம்தான் நிலத்தடி நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் பண்புகொண்டது. அந்த விழிப்புஉணர்ச்சியை உண்டாக்கும் விதமாக நாடெங்கிலும் பனை விதைகளை நட வேண்டும் என்பதே எங்களின் அடுத்த திட்டம்’’ என்கிறார் வெற்றி உறுதியோடு!