Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில், டைட்டில் கேரக்டரில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானதும், பிறகு அதிலிருந்து அவர் விலகியதும் உலகம் அறிந்தது. ஸ்ருதிக்குப் பதிலாக பலரையும் பரிசீலித்தவர்கள், இறுதியில் பாலிவுட் நடிகை திஷா பதானியை ஓகே செய்தனர். ‘தோனி’ படத்தில், தோனியின் காதலி ப்ரியங்கா கேரக்டரில் நடித்த திஷா, ‘சங்கமித்ரா’வாகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ராம்கோபால் வர்மாவின் அடுத்த படம் ‘லட்சுமி’ஸ் என்.டி.ஆர்’. ‘என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சி’யின் தலைவரும் என்.டி.ஆரின் 2-வது மனைவியுமான லட்சுமி பார்வதிக்கும், என்.டி.ஆருக்குமான உறவைச் சொல்லும் கதையாக உருவாகிறதாம் இந்தப் படம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

பாலிவுட்டில் பெரும் வெற்றிபெற்ற ‘குயின்’ படம், தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் ஆகிறது. தமிழில் காஜல் அகர்வால் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப்படம், தமன்னா நடிக்க ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் தெலுங்கில் உருவாகிவருகிறது. தற்போது மலையாளத்தில் உருவாகும் ‘குயின்’ ரீமேக்கில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஜம் ஜம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

மியாவ் பதில்

மிஸ்டர் மியாவ்

‘‘ ‘அரசியலுக்கு வருவேன்’ எனச் சொல்லும் விஷாலின், அரசியல் தயாரிப்புகள் எப்படி இருக்கின்றன?”

‘‘களத்தில் இறங்கிப் போராடுபவர்களுக்கும், மக்களோடு மக்களாக நிற்பவர்களுக்கும் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார் விஷால். அதனால்தான் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வாக சில விஷயங்களைப் பேசி வருகிறார்.

தன் ரசிகர் மன்றத்தையும் கச்சிதமாகக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார். ஷூட்டிங் இடைவேளையில் ரசிகர்களுக்குத் தனது கையொப்பமிட்ட புகைப்படங்களைக் கொடுப்பது, தன் ரசிகர்கள் மன்றம் எப்படி இயங்கவேண்டும், எதை நோக்கிப் பயணிக்கவேண்டும் போன்ற குறிப்புகளைக் கொண்ட புத்தகங்களை விநியோகிப்பது... எனத் தன் பாணியை வடிவமைத்துக் கொண்டு, அரசியலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார் விஷால்.