தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நாயகி - காமெடி கதாநாயகி!

நாயகி - காமெடி கதாநாயகி!
பிரீமியம் ஸ்டோரி
News
நாயகி - காமெடி கதாநாயகி!

கணேசகுமாரன்

மிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றால், அவர்களில் எத்தனை பேர் ஹீரோயின் ஆனார்கள் என்று வாய்விட்டே சொல்லிவிடலாம். ஆனால், ஹீரோயின்களாக இருந்து கொண்டே நகைச்சுவைக் காட்சிகளில் சாதித்துக் காட்டியவர்களும் உண்டு. அந்தச் சிரிப்பழகிகளைப் பார்க்கலாமா?

நாயகி - காமெடி கதாநாயகி!

காஜல் அகர்வால்: ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் ஹியூமர் கேரக்டரில் செமையாக செட்டானார். சீரியஸாக காமெடி செய்யும் கதாபாத்திரத்தில் அசால்ட் செய்தார். `சித்ரா தேவி பிரியாவின் இன்னிசைக் கச்சேரி' என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொண்டு, இவர் அந்தப் படத்தின் கதாநாயகன் கார்த்தியை மட்டுமா டார்ச்சர் செய்தார்? தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் பரதத்தினை எம்.எஸ்.பாஸ்க ரிடம் இவர் சீரியஸாகக் கற்றுக்கொள்ளும் காட்சியில் தியேட்டர் குலுங்கியதென்னவோ உண்மைதான்.

நாயகி - காமெடி கதாநாயகி!

ஊர்வசி: கிளாமர் ஹீரோயின்களுக்கு மத்தியில் ஹியூமர் ஹீரோயின் என்றாலே சட்டென்று நம் ஞாபகத்தில் முதலில் வருவது ஊர்வசிதான். ‘மைக்கேல் மதன காமராஜ'னில் பாலக்காட்டு பிராமணப் பெண்மணியாக வந்து கமலிடம் ஈஷிண்டு நிற்கும் (உபயம்: கமல்ஹாசன்) ஊர்வசியின் உடல் மொழியும் வாய்ஸ் மாடுலேஷனும்  செம. அவரின் அந்த ‘ஓ...’ இழுவை அவருக்கான ஸ்பெஷல். `சாகப் போகிறேன்' என்று விஷத்தைத் தேடிக்கொண்டிருக்கும்போது கமலிடம் விரல் நீட்டி அழுகையும் ஆத்திரமுமாக ‘ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க... ஆம்பள கெட்டா வெறும் அத்தியாயம்தான். பொம்பள கெட்டா புஸ்தகமே போட்டுடுவா’ என்றபடி அலமாரிப் பொருள்களைக் கலைக்கும் ஊர்வசியின் நடிப்புக்கு முன்னால் கமலே வேடிக்கை பார்க்கும் நாயகன்தான் அங்கே. ‘மை.ம.கா.ரா’ மட்டுமல்ல, பழைய ‘மகளிர் மட்டும்’ படத்திலும் சமீபத்திய ‘மகளிர் மட்டும்’ படத்திலும்கூட ஊர்வசிக்கு நகைச்சுவை நடிப்பு என்பது அருமையான அல்வா தான்!

நாயகி - காமெடி கதாநாயகி!

அசின்: ‘கஜினி’யில் அட்வர்டைசிங் கம்பெனியில் பண்ணும் அலப்பறையிலிருந்து, `சஞ்சய் ராமசாமியின் லவ்வர் தான்தான்' என்பதை எல்லோரையும் நம்பவைக்க பில்டப்பிலேயே பெப் ஏற்றுவதும், சூர்யா ஆபீஸுக்குக் கெத்தாக போன் செய்ய ‘நான் கல்பனா பேசுறேன்’ என்றதுமே ‘மொட்ட மாடி கல்பனாவா... வைம்மா போனை’ என மொக்கை வாங்கியதைச் சமாளித்தபடி ‘ஆபீஸே நடுங்கிப்போச்சு’ என்னும் அசினின் உடல்மொழி ஹியூமருக்குரியதே. சூர்யாவிடமே அவரைப்பற்றி கப்சா அளக்கும் காட்சியில் தியேட்டரே கலகலத்தது. `போக்கிரி'யில் கூடவே வடிவேலு. மாஸ்டர் என்று அழைத்தே மண்டையில் கொட்டினார். ‘வா சுருதி நாம போகலாம்’ என்பது இந்தப் படத்தின் ஒரு பானை ஹியூமருக்கு ஒரு சோறு பதம்.

நாயகி - காமெடி கதாநாயகி!

சிம்ரன்: கமல்ஹாசனோடு இணை சேர்ந்த படங்களில் ‘பம்மல் கே. சம்பந்தம்’  படத்தில் காமெடியில் கலக்கினார் சிம்ரன். டாக்டரான சிம்ரன் ஆபரேஷனின்போது கமல் வயிற்றில் தன் வாட்ச்சை வைத்துத் தைத்துவிட, அந்த வாட்ச்சை எடுக்க சிம்ரன் நடத்தும் நாடகமே படம் (படமே நாடகம் மாதிரிதானே இருந்துச்சுன்னு கேட்கக்கூடாது!). ஒவ்வொரு முறையும் வயிற்றுக்குள் இருக்கும் வாட்ச் பற்றித் தெரிந்துவிடுமோ என்கிற பயத்திலேயே சிம்ரன் கமலை வாட்ச் பண்ணுவதும் (ஹை ரெண்டு வாட்ச்!) கமலின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திணறும் சிம்ரனின் ரியாக்‌ஷன்களும் ரசித்து ரசித்துச் சிரிக்க வைத்தவை. ‘அரசு’ படத்திலும் சிம்ரனின் ஹியூமர் சிறப்பாகவே வெளிப்பட்டது. வடிவேலுவிடம் ‘அவுட்’ என்று சொல்லி வெளியே போகச் சொல்லும் காட்சியில், வடிவேலுவின் கமென்ட்டான ‘என்ன வாய் வாசப்படி வரைக்கும் போயிட்டு வருது’ என்பதுபோலவே சிம்ரனின் ரியாக்‌ஷனும் இருக்கும்.

நாயகி - காமெடி கதாநாயகி!

லைலா : அழகிய லைலாவாகத்தான் அறிமுகமானார் சினிமா இண்டஸ்ட்ரியில். ஆனால், தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியான லூசு ஹீரோயின் கேரக்டருக்கு அவ்வளவு பாந்தமாய் பொருந்திப்போனார் லைலா. ‘தீனா’வில் அஜித்தின் சாகசம் பார்த்து, கண் விரித்து வாய் பிளந்து அவரின் தோழியிடம் ‘ஒடம்புல நாலு கிலோ இரும்பு வெச்சுருக்கான்டி’ எனக் கவலை பொங்கச் சொல்லும் இடத்தில் அப்பாவி லைலாவின் எக்ஸ்பிரஷன்ஸ் ரகளை. ‘பிதாமகனி’ல் சூர்யாவின் வம்படிகளுக்கு ஆளாகி ‘ பொம்பளப் புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பாக்குறேன்...கடுப்பக் கெளப்பாத’ என்று காண்டாகி, ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுக்கும் லைலா சிறப்பென்றால், சங்கிலியைப் பிடித்து இழுத்ததற்கு அபராதமாக 500 ரூபாய் பணம் கட்டிவிட்டு ‘எதுக்குடி 500 ரூபா ஃபைன்?’ எனச் சூழல் புரியாமல் கேட்கும் மாமியிடம் ‘ ம்ம்ம்... நீ கக்கூஸ் போனதுக்கு’ என்று கவுன்ட்டர் கொடுக்கும் இடத்தில் லைலா வேற லெவல்.