Published:Updated:

மனிதனுக்கும் மிருகத்துக்குமான முதல் நட்பு.... 20000 வருட ஃபிளாஷ்பேக்! #Alpha படம் எப்படி?

கார்த்தி
மனிதனுக்கும் மிருகத்துக்குமான முதல் நட்பு.... 20000 வருட ஃபிளாஷ்பேக்!  #Alpha படம் எப்படி?
மனிதனுக்கும் மிருகத்துக்குமான முதல் நட்பு.... 20000 வருட ஃபிளாஷ்பேக்! #Alpha படம் எப்படி?

மனிதனுக்கும் மிருகத்துக்குமான முதல் நட்பு.... 20000 வருட ஃபிளாஷ்பேக்! #Alpha படம் எப்படி?

மனிதனுக்கும் மிருகத்துக்குமான முதல் பிணைப்பு எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்பதை விசுவலாக சொல்லியிருக்கிறது இந்த வாரம் வெளியாகியிருக்கும் அல்ஃபா #Alpha திரைப்படம். "உன்னை இனி இழப்பதாய் இல்லை. நாம் வீட்டை நெருங்கிவிட்டோம்..." என படத்தின் முக்கிய காட்சி ஒன்றில், ஆல்ஃபாவிடம் கேடா சொல்வான். அங்கு ஏற்பட்டிருக்கலாம் மனிதனுக்கு மிருகத்துக்குமான நட்பு. அந்த எளிமையான அன்பு பிறந்த  துவங்கப்புள்ளியைத்தான் மிகப் பிரமாண்டமான காட்சிகள் மூலம்  காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆல்பர்ட் ஹூக்ஸ். 


பல்லாண்டு பல்லாண்டும் பல்லாயிரத்தாண்டு பல நூறு ஆயிரம் வருடங்களுக்கு (20000 ஆண்டுகள் ) முன் ICE Age சமயத்தில் நிகழ்கிறது கதை. Tau டௌ , தன் குழுவுக்கு வேட்டையாட பயிற்சி தருகிறான். மனிதன் மூர்க்கமாக மிருகங்களை தாக்குவதற்குப் பழக, டௌவின் மகன் கேடா keda மட்டும் வன்முறைக்குத் தயங்குகிறான். மோட்டிவேசன் கட்டுரைகளை பலவற்றை டௌ வாசித்தாலும், கேடா கேட்பதாயில்லை. அரை மனதோடு , ' வா மை சன் ' என கேடாவை அழைத்துக்கொண்டு பைசனை வேட்டையாட கிளம்புகிறான் .குளிர்காலத்துக்குத் தேவையான பைசன்கள் சிக்க, ஒரு கெடா பைசன் கோளாறாய் யூ டர்ன் எடுத்து கேடாவைத் தாக்கிவிடுகிறது. கேடா இறந்துவிட்டதாக நினைக்கும் குழு, திரும்பி சென்றுவிடுகிறது. அடிபட்ட கேடா உயிருக்குப் போராட, அவனை தாக்க வருகிறது ஓநாய் படை. அதில் ஒரு ஓநாயை தாக்கிவிட்டு அவன் தப்பிக்க, அடிப்பட்ட ஓநாயைவிட்டுவிட்டு, மற்றவை பிரிந்து செல்கின்றன. ஒரு பக்கம் அடிபட்ட கேடா, இன்னொரு பக்கம் அடிப்பட்ட ஓநாய். இரண்டும் அந்த கடுமையான் சீதோஷண நிலையைக் கடந்து தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பிகிறார்களா என்பதே அல்ஃபா திரைப்படம். (ஏண்டா முழுக்கதையையும் எழுதுவியா என யாரும் பொரும வேண்டாம். இவை அனைத்துமே டிரெய்லரில் வரும் காட்சிகள் ).

அகண்ட நிலபரப்பு, 20000 ஆண்டுகள் முந்தைய கதை என்பதால் புரியாத மொழி ( சப்டைட்டிலில் மட்டுமே கதை சொல்லப்படுகிறது ), அட்டகாசமான விசுவல்ஸ் , இப்போதைய விலங்குகள் பரிணாம வளர்ச்சிக்கு முன்னர் இருந்த படிமங்களை வைத்து உருவாக்கப்பட்ட CGI மிருகங்கள் என உழைப்பைக்கொட்டி மெர்சலாக எடுத்திருக்கிறார்கள். அது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெறிக்கிறது. பெரிய திரையில் சில காட்சிகள் எல்லாம் டாப் கிளாஸ். ஒளிப்பதிவாளர் மார்டினின் ஒவ்வொரு ஷாட்டும் Crystal Clear . ஐமேக்ஸ் மாதிரியான திரைகளில் இன்னமும் அழகாக இருக்கிறது அல்ஃபா. சைபீரியன் ஹஸ்கி இன நாய் போல் இருக்கும் அல்ஃபா ஒவ்வொரு காட்சியிலும் அப்லாஸ் அள்ளுகிறது. முதல் முறையாக மனிதனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமைதி காக்கும் மிருகம், தன் எஜமானர் என நினைத்து மனிதனைக் காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைத்து எடுக்கும் சாகசக் காட்சி என நாய்களின் மீது நேசம் காட்டும் மனிதர்கள் பார்க்க வேண்டிய சினிமா இந்த அல்ஃபா.  X-MEN அபோகலிப்ஸ் படத்தில் நைட் கிராலராக வரும் கோடி ஸ்மித் தான் அல்ஃபாவில் கேடா . கால் ஒடிந்திருக்கும் நிலையில் நடப்பது, ஓநாயை எப்படியேனும் காப்பாற்றிவிட வேண்டும் என துடிப்பது, புழுக்களை சாப்பிடுவது, மிருகங்களுடன் தயங்கிக்கொண்டே அப்பிராணியாக சண்டை போடுவது, முயலைக் கொல்ல வேற லெவலில் யோசிப்பது என பல காட்சிகளில் நடிப்பில் ஈர்க்கிறார். ஹக்ஸ் இரட்டையர்களில் ஒருவரான அல்பெர்ட் ஹக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார்.

கண்களில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு விசுவலாக காட்சிகள் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் National Geographic Channel, BBC எர்த் போன்றவற்றில் வரும் நிலப்பரப்பு காட்சிகளின் டாக்குமென்ட்ரி ஃபீலைத் தவிர்க்க முடியவில்லை. 96 நிமிடங்கள் ஓடும் படமே, ஏனோ பல மணி நேரம் ஓடுவது போல், நம் மொபைலை எடுத்து நேரம் பார்க்க வைக்கிறது.எப்படியும் கேடா தன் இருப்பிடத்துக்கு வந்துவிடுவான். ஆனால், அந்த பயணம் எப்படியிருக்கும் என்பது தான் கதை என்பதால், அதை முடிந்தளவுக்கு சுவாரஸ்யமாக தர முயன்று இருக்கிறது படக்குழு. அதுவும் அந்த இறுதிக்காட்சியில் மனிதனுக்கும், மிருகத்துக்குமான அந்த பிணைப்பு காட்சிகள் நெகிழ்ச்சியான தருணங்கள். இப்படித்தான் மனிதன் முதன்முதலில் வேட்டையாட நாயை பயன்படுத்தியிருப்பான் என நம்ப வைக்கும் அளவுக்கு கதை இருப்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஆனால், லாஜிக்கலாக யோசிக்க ஆரம்பித்தால், மனிதன் குடும்பமாக வாழத் தொடங்கிய காலம், மனிதன் சக மனிதன் மீது அன்பு காட்டிய காலம், மனிதன் மிருகத்துக்கு எஜமானன் ஆனது எல்லாம் வேற வேற காலம்ல என்பதும் மூளைக்கு எட்டாமல் இல்லை. 


படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு , தி ரெவெனென்ட், இயக்குநர் அலெஜான்றோ இன்னரிட்டோ, ஆஸ்கர் பெர்பாமன்ஸ் லியோனோர்டோ டி காப்ரியோ ரேஞ்சுக்கு படம் இருக்கும் என அதீத லெவல் எதிர்பார்ப்புடன் செல்லாமல் சாதாரண மனநிலையுடன் சென்றால், படம் நிச்சயம் ஈர்க்கும் .

அடுத்த கட்டுரைக்கு