Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

நஸ்ரியா மீண்டும் நடிக்க வருகிறார். அதற்காக, கதை கேட்பதில் தீவிரமாக இருக்கிறார். இதை அறிந்து தமிழிலிருந்து சில இயக்குநர்கள் அவரிடம் பேசியுள்ளனர். ‘‘ஹீரோ அஜித் என்றால் கதைகூட கேட்காமல் கமிட் ஆகிவிடுவேன்’’ என்கிறாராம் நஸ்ரியா.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கமல் சில புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். ‘எல்லோருக்கும் சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கணும்னு ஆசை இருக்கும். எனக்கு கமல் சார்கிட்ட இருந்து கிடைத்த இந்தப் பரிசுகள் அதை நிறைவேற்றியுள்ளன’ என ட்வீட் தட்டியிருக்கிறார் சுஜா வாருணி.

மிஸ்டர் மியாவ்

‘பாகுபலி-2’க்குப் பிறகு, நடிகை அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாக்மதி’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளும் ‘பாகுபலி’ அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. ஹாரர் - காமெடி படமான இது, பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சர்ச்சைகளில் சிக்கவைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் திரைப்படமாக எடுக்கிறார்கள். விஞ்ஞானி நம்பியின் கேரக்டரில் நடிப்பது மாதவன்.

மிஸ்டர் மியாவ்

தெலுங்கில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கில் நடிப்பதன்மூலம், சினிமாவுக்கு அறிமுகமாகிறார், நடிகர் விக்ரமின் மகன் துருவ். தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் உருவாகிறது இந்தப் படம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கி பச்சா’ இறுதிக்கட்டப் பணிகளில் இருக்க, சித்தார்த் - ஆண்ட்ரியா ஜோடி சேரும் புதிய படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. தமிழில் ‘அவள்’, தெலுங்கில் ‘க்ருஹம்’, ஹிந்தியில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என மும்மொழிகளில் வெளியாகும் இப்படத்தை மிலிந்த் இயக்குகிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவுக்குப் புதிய வாய்ப்புகள் குவிகின்றன. லாரன்ஸ் நடித்து இயக்கும் ‘காஞ்சனா-3’ல் நடிக்கும் ஓவியா, இப்போது ‘காட்டேரி’ என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர் டி.கே இயக்கும் இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

மியாவ் பதில்

ரஜினியின் அரசியல் பிரவேசம்பற்றி லதா ரஜினிகாந்த் பேசியுள்ளாரே?


ரஜினியின் பேச்சைவிட அதிகக் குழப்பமாக இருக்கிறது லதா ரஜினிகாந்த் பேச்சு. ‘ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் நடக்கும்’ என்கிறார். ‘மக்களுக்கு நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவருடைய மனதில் இருக்கும்’ என்கிறார். ஆனால் இறுதியில், ‘அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்’ என்று முடிக்கிறார். இப்போது சொல்லுங்கள்... ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்கிறீர்களா?