Published:Updated:

"டிடிவி தினகரன் அண்ணன் முதல்வர் ஆவார்!" - இசையமைப்பாளர் தினா

"டிடிவி தினகரன் அண்ணன் முதல்வர் ஆவார்!" - இசையமைப்பாளர் தினா

``ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு உருவான வெற்றிடத்தை டி.டி.வி.தினகரன் அவர்கள் நிரப்புவார்!" - இசையமைப்பாளர் தினா பேட்டி.

"டிடிவி தினகரன் அண்ணன் முதல்வர் ஆவார்!" - இசையமைப்பாளர் தினா

``ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு உருவான வெற்றிடத்தை டி.டி.வி.தினகரன் அவர்கள் நிரப்புவார்!" - இசையமைப்பாளர் தினா பேட்டி.

Published:Updated:
"டிடிவி தினகரன் அண்ணன் முதல்வர் ஆவார்!" - இசையமைப்பாளர் தினா

சின்னத்திரை, பெரியதிரை மூலமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர், இசையமைப்பாளர் தினா. இவரது இசையில் பல சீரியல்களின் பாடல்களும், சினிமா பாடல்களும் ஹிட் ஆகின. இந்நிலையில், டிடிவி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார், தினா. அவரிடம் பேசினோம். 
 

``உங்களுடைய இசைப் பயணம் எப்படித் தொடங்கியது?"  

``நான் எடுத்தவுடனேயே இசையமைப்பாளரா ஆகல. ஒரு வீணை பிளேயரா அறிமுகமானேன். அப்புறம் கிட்டார், பியானோ கத்துக்கிட்டேன். அப்புறம் அசிஸ்டன்ட் மியூசிக் டைரக்டரா இருந்தேன். இசையமைப்பாளர் தினானு என் பெயர் வராதானு ஏங்கின நாள்கள் அதிகம். பிறகு ஒருநாள் மனோபாலா சார் ராதிகா மேடம்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். `சித்தி' சீரியலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைச்சது. பிறகு, `அலைகள்', `மெட்டி ஒலி' உள்ளிட்ட நிறைய சீரியல்கள்ல வொர்க் பண்ணினேன். டிவியில இருந்து பெரிய திரைக்கு வரணும்னு ஆசை வந்தப்போ, பிரபு சார் நடிச்ச `மிடிள்கிளாஸ் மாதவன்' பட வாய்ப்பு கிடைத்தது. பிறகு, `கிங்', `திருடா திருடி', `திருப்பாச்சி'னு 87-க்கும் அதிகமான படங்களுக்கு மியூசிக் பண்ணிட்டேன்." 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``டி.டி.வி.தினகரனுக்கும் உங்களுக்குமான அறிமுகம்?" 

 ``ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு தமிழக அரசியல்ல இருக்கிற வெற்றிடம் எனக்குள்ள ஒரு ஆதங்கமாகவே இருந்தது. இசைத் துறையில இருந்துக்கிட்டு அதை என்னால வெளிப்படுத்த முடியல. ஜெயலலிதா அம்மா இருந்தப்போவே காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் கரிகாலன் எனக்கு நல்ல பழக்கம். அவர்தான் அ.தி.மு.க சாதனைகளைப் பற்றி பாடல்கள் பண்ணணும்னு என்கிட்ட கேட்டார். அப்போ, ஒவ்வொரு பாடல்கள் பண்ணும்போதும், அதிமுக மீதான ஈர்ப்பு அதிமானது. அப்புறம், `தன்னலம் காத்த'னு தொடங்கும் பாடலை சின்னம்மாவுக்காகப் பண்ணினேன். அதுல அவருடைய தியாகங்கள், நாம் பார்த்த நிகழ்வுகள் எல்லாம் இருந்தது. உண்மையான சரித்திரத்தைப் பாடலா பண்றோம்ங்கிற திருப்தியும் உற்சாகமும் இருந்தது. இப்போ டி.டி.வி அண்ணன் வருங்காலத்துல எப்படி வருவார், இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக இருப்பது, எடுக்கிற முடிவு.. எல்லாத்தையும் வெச்சுப் பாடல்கள் பண்ணினேன். அப்போதிலிருந்தே அவர் மீதான ஈடுபாடு அதிகமாச்சு. அப்போ, டி.டி.வி அண்ணனைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. ஏற்கெனவே அவரை எனக்குப் பிடிக்கும். பக்கத்துல இருந்து பார்க்கும்போது இன்னும் மனசுக்கு நெருக்கமாகிட்டார்."

``கட்சியில இணையணும்னு எப்போ எண்ணம் வந்தது?" 

``அம்மா இல்லாத வெற்றிடத்தை தினகரன் அண்ணன் நிரப்புவார்னு நம்பிக்கை இருந்தது. `எங்க தலைவா வா வா வா... எங்க தமிழா வா வா வா' என்ற பாடலை அவருக்காக உருவாக்கியிருக்கேன். மனோவும், மாலதியும் பாடினாங்க. வரும் ஆண்டுகள்ல, இந்த வரிகள் உண்மையாகும். காதல்மதி, ம.கரிகாலன் ரெண்டுபேரும் எழுதியிருக்காங்க. அரசியல் மீறி அன்பாகப் பழகக்கூடியவர், அவர். சேர்ந்தால் இந்தக் கட்சியில்தான் சேரணும்னு முடிவுல இருந்தேன். இப்போ சேர்ந்துட்டேன். இது என் வாழ்நாளில் பெரும் பாக்கியமா பார்க்கிறேன். சலுகையை மட்டும் கொடுத்தால் போதுமா. ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டாமா. அதுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் தினகரன் அண்ணன் இருக்கார். நிச்சயம் அவர் முதலமைச்சர் ஆவார். அதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. அடுத்த பாடலுக்கான வேலைகளைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கும்போது, கழகத்துல இணையணும்னு சொன்னேன். உடனே, என்னை வரவேற்றுக்கிட்டார், சந்தோஷமா இருக்கு."  

``அ.தி.மு.க-வுக்குப் பாடல்கள் உருவாக்கும்போது, ஜெயலலிதாகிட்ட இருந்து என்ன ரெஸ்பான்ஸ் வரும்?" 

``அம்மாவின் தீவிர பக்தன் நான். என் டியூன்ஸ் கேட்டுட்டு அதுல சில கரெக்‌ஷன்ஸ்கூட அவங்க சொல்வாங்க. குறிப்பா, `அம்மா வருக வருக வருக' பாடலை எஸ்.பி.பி சாரை வெச்சுப் பாடச் சொன்னாங்க. தினாகிட்ட சொல்லி இதை இப்படிப் பண்ணச் சொல்லுங்கனு சொல்லிவிடுவாங்க. ஆனா, அதிகமா சந்திச்சுப் பேச வாய்ப்பு கிடைக்கல. டிடிவி தினகரன் அண்ணன் ரொம்ப எளிமையான நபர். அவரை ஈஸியா பார்த்துப் பேசிடலாம். இன்றைய இளைஞர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். கோபமான விஷயங்களைக்கூட நையாண்டியாகச் சொல்லி அதை மாத்திடுவார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே இப்படி ஒரு கட்டமைப்பு வந்திருக்கிறது ஆச்சர்யமா இருக்கு."
 

``கட்சிப் பெயர், கொடி, சின்னம் எல்லாம் ஓபிஸ் - ஈபிஸ் டீம்கிட்ட இருக்கே?"  

``கட்சிக் கொடி, சின்னம்தான் இல்லையே தவிர, மொத்த ஆளுமையும் எங்ககிட்டதான் இருக்கு. சின்னம் இல்லைனு கஷ்டமாதான் இருக்கு. பார்ப்போம், அரசியல்ல எதுவும் நடக்கலாம்!" 

``இசையமைப்பாளர் சங்கத் தலைவரா உங்க முதல் திட்டம் என்ன?" 

``இசையமைப்பாளர்கள் சங்கத்துல நிறைய முன்னேற்றங்கள் தேவைப்படுது. கமலா தியேட்டர் பக்கத்துல இருக்கிற எங்க யூனியன் பில்டிங்கை புதுப்பிச்சுக் கட்டணும்னு ஆசை. அதுதான் எங்க முதல் திட்டம். அதுக்கான வேலைகள் நடக்குது. கட்சியிலேயும் ஏதாவது பொறுப்பு கொடுத்தா, அதை உணர்ந்து தினகரன் அண்ணன் தலைமையில் மக்கள் பணிகளைச் சிறப்பாச் செய்யணும்னு நினைக்கிறேன்."