Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘பிக்பாஸ்’ தந்த புகழால் ஓவியா இப்போது பிஸி. பல படங்கள் பேச்சுவார்த்தையில் இருந்தாலும், ‘காஞ்சனா 3’-ல் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார். ‘‘அந்தப் படத்தின் முதல் இரு பாகங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் இந்தப் படத்துக்குக் கேட்டதும், உடனே ஓகே சொன்னேன்’’ என்கிறார் ஓவியா.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடிக்க, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியான முதல் நாளே ஒன்றரை கோடிப் பேர் ரசித்திருக்கிறார்கள். பல்வேறு பாலிவுட் பிரபலங்களோடு, ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமெளலியும் இப்படத்தின் பிரமாண்ட உருவாக்கத்தைப் பாராட்டி ட்வீட் தட்டியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

  ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி, விரைவில் சினிமாவுக்கு அறிமுகமாகவிருக்கிறார். அதற்கான முயற்சிகளில் ஸ்ரீதேவி இருக்க, பிகினி உடையில் கலக்கும் குஷியின் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய படங்களின் வெளியீடு நிறுத்தப்பட்ட சூழலில், ‘தரமணி’ படத்தை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டுவந்தார், அப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ். சென்னையின் சில திரையரங்குகளில் படம் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

‘காலா’ படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்தையும் முடித்துக்கொடுத்துவிட்டார் ரஜினி. ‘2.0’ படத்தில் ரஜினி - எமி ஜாக்ஸன் பங்குபெறும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்படாமல் இருந்தது. அதன் படப்பிடிப்பையும் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘சதுரங்கவேட்டை-2’, ‘கர்ஜனை’, ‘மோகினி’, ‘96’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா, புதுமுக இயக்குநர் திருஞானம் தயாரித்து இயக்கும் ‘பரமபதம்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி யிருக்கிறார். இதில், டாக்டராக நடிக்கிறாராம் த்ரிஷா.

மியாவ் பதில்

வேலு நாச்சியார் கதையை, வைகோ திரைப்படமாகத் தயாரிக்கிறாரே?

“வை
கோ இதுபற்றி, ‘திரைப்படங்கள் மீது எனக்கு மிகப்பெரிய காதல் இருக்கிறது. ஆனால், அதை அதிகம் வெளிக்காட்டிக்கொண்டதில்லை. வேலு நாச்சியாரின் கதையைப் படமாக்குவது என் மிகப்பெரிய கனவு’ எனத் தெரிவித்திருக்கிறார். கமல், ரஜினி, விஜய், விஷால்... என சினிமாவிலிருந்து பலரும் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கும் முனைப்பில் இருக்கும் இன்றைய சூழலில், அரசியலில் இருக்கும் வைகோ திரைப்படத் தயாரிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தடம்பதிக்கிறார். வாழ்த்துவோமே!