பிரீமியம் ஸ்டோரி

இன்ஜெக்ஷன்... இன்ஃபெக்ஷன்!

 'ஒரு நடிகையின் வாக்குமூலம்’ உங்கள் சொந்தக் கதையா? அந்தப் படத்துக்காக உங்கள் கொழுகொழு உடம்பைக் குறைக்க ஊசி போட்டுக்கொண்டீர்களா? கல்யாணம் எப்போ..? என்று சோனியா அகர்வாலிடம் கேள்விகளை வீசினேன்.

''என்னோட பெர்சனல் லைஃப்ல நடந்த ஒரு இன்சிடென்ட்கூட இந்த ஃபிலிம்ல இல்லை. இது ஒரு நடிகையோட வாழ்க்கை  பத்தி டைரக்டரோட கற்பனைக் கதை.

யார் கிளப்பிவிட்டது இந்த கொழுப்பு குறைக்கிற ஊசி மேட்டர்? கண்ட கண்ட இன்ஜெக்ஷன் போட்டா உடம்பு இன்ஃபெக்ஷன் ஆயிடும். டெய்லி எக்சர்சைஸ் செய்து ஸ்லிம் ஆனேன்.

செல்வாவோட மேரேஜ் நடந்தப்பவே நான் பிளான் பண்ணலை... தானாவே நடந்துச்சு. இனிமே என்ன நடக்க ணுமோ அதுவும் தானாவே நடக்கும்!''

மிஸ்டர் மியாவ்

ஒஸ்தி குஸ்தி..!

சிம்பு என்றால் வம்பு என்பது உலக பிரசித்தி. அவரது படத்துக் கும் அதே நிலை!

'ஒஸ்தி’ படத்துக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்கிறது தியேட்டர்கள் சங்கம்.  ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். என்னதான் நடக்கிறது என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகரிடம் கேட்டோம்.

மிஸ்டர் மியாவ்

''எங்களோட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், சென்னை தியேட்டர்கள் சங்கத் தலைவர் 'அபிராமி’ ராமநாதன் ஆகியோர் சேர்ந்து 'ஒஸ்தி’ படத்துக்கு ஒரு தடையும் இல்லை என்று கையெழுத்துப் போட்டு அறிவித்து இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு