Published:Updated:

``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''

``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''
பிரீமியம் ஸ்டோரி
``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''

திரைக்குப் பின்னால் மா.பாண்டியராஜன்

``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''

திரைக்குப் பின்னால் மா.பாண்டியராஜன்

Published:Updated:
``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''
பிரீமியம் ஸ்டோரி
``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''

ரு படம் உருவாகப் பலருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் திரையில் தெரியும் நடிகர்கள்  மட்டுமே. திரைக்குப் பின்னாலும் முகம் காட்டாமலே  உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். நடிப்பைத் தாண்டி இயக்கம், ஒளிப்பதிவு, கலை இயக்கம் என சினிமாவின் பிற துறைகளிலும் பெண்களின் பங்கு  சிறப்பானது. `நாங்க தூணிலும் இருப்போம்... துரும்பிலும் இருப்போம்' என தம்ஸ்அப் காட்டும் திரை ஆளுமைப்  பெண்கள் தங்களைப் பற்றிப் பகிர்கிறார்கள் இங்கே!

கலை இயக்குநர் ஜெயஸ்ரீ

`` `பிசாசு' படத்தின் மூலம் ஆர்ட் டைரக்டரா அறிமுகமானேன். `வனமகன்' படத்துலயும் வொர்க் பண்ணியிருக்கேன். எம்.ஏ broadcasting communication படிச்சதால இயக்கம், ஒளிப்பதிவு, ரேடியோ என எல்லாத்துறைகளிலும் பயிற்சி எடுக்கணும். அப்படித்தான் ஆர்ட் டைரக்‌ஷனை செலக்ட் பண்ணினேன். ராஜீவன் சார்கிட்ட உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நேரத்துல பெண்கள் யாரும் ஆர்ட் டைரக்‌ஷனில் இல்லை. யாரைப் பார்த்தாலும், ‘ஆர்ட் டைரக்‌ஷனில் பெண்ணா? சிரமமா இருக்குமே’னு கேட்டாங்க.

``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''

எந்த வேலையாக இருந்தாலும் ஆண், பெண் எனப் பிரித்துப் பார்க்கக் கூடாதுனு நினைக்கிறேன். ஏன்னா, ஒரு வேலையைப் பெண் செய்தாலும், ஆண் செய்தாலும் அந்த வேலைக்கான ஃபார்மெட்டில்தானே செய்வாங்க? என்னைப் பார்க்கும்போது ஆர்ட் டைரக்டர் என்றில்லாமல், ஒரு பெண்ணாகத்தானே  பார்க்கிறார்கள். அந்த நேரத்தில் வருத்தமாக இருக்கும். என் குழுவில் என்னைவிட வயது மூத்தவர்களிடம் நான் வேலைவாங்கித்தான் ஆக வேண்டும். ‘என்னடா ஒரு சின்னப்பொண்ணு நம்மளை வேலை வாங்குது,  பொண்ணு நம்மகிட்ட வேலை சொல்லுது’னு அவங்கெல்லாம் நினைப்பாங்க. அவங்ககிட்ட வேலை வாங்குறதுதான் கஷ்டமே தவிர, ஆர்ட் டைரக்டரா ஒரு பெண் வேலை பார்க்குறதுல எந்தக் கஷ்டமும் இல்லை.

ஷூட்டிங் ஸ்பாட்டில் வொர்க் பண்ணும்போது பெண்களுக்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யுது. ஹீரோயின் தவிரவும் பல பெண்கள் படப்பிடிப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இன்று வரை ஹீரோயின்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கு மட்டும்தான் கேரவன் இருக்கிறது. பெரும்பாலும் டெக்னீஷியன்ஸுக்கு கேரவன் கிடைக்குறது இல்ல. சிரமம்னு எடுத்துக் கிட்டாதான் சிரமம். மத்தபடி எதையும் சமாளிச்சு முன்னுக்கு வர்ற தைரியம் பெண்களிடம் இருக்கு. இப்பல்லாம் படம் டைரக்‌ஷன் பண்றதுக்கு பெண்கள் நிறைய பேர் வராங்க. அதே மாதிரி மற்ற துறைகளுக்கும் அதிகமா வரணும்னு ஆசைப்படுறேன்.’’

இயக்குநர் பிரியதர்ஷினி

``என் சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. சின்ன வயசுல இருந்தே கிரியேட்டிவ்வா யோசிப்பேன். கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். அப்போவே நமக்கான இடம் சினிமா தான்னு முடிவு பண்ணிட்டேன். காலேஜ் முடிச்சப் பிறகு இயக்குநர் மிஷ்கின் சாரும் நானும் சேர்ந்து உலக சினிமா பற்றி ஒரு அசைன்மென்ட் பண்ணினோம். அதுக்கப்புறம் `பிசாசு' படத்துல மிஷ்கின் சாருக்கு உதவியாளரா வொர்க் பண்ணினேன். இப்போ வரலட்சுமியோட ‘சக்தி’ படத்தை இயக்குறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமலே இயக்குநரா வந்திருக்கேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. என்னைப்போல பின்புலம் இல்லாத பெண்களும் சினிமாவுக்கு வரலாம். அதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதைச் சரிசெய்ய நம்மிடம் சரியான திட்டம் இருக்கணும். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே `2018-ல் என் முதல் படம் ரிலீஸாகணும்’னு ப்ளான் பண்ணினேன். அதுக்காக நிறைய உழைச்சேன். இப்ப என் கனவு நிறைவேறப் போகுது. முதல் படத்தை ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இயக்குகிறேன். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் எல்லாம் இந்த மாதிரிதான் இருக்கும் என்று ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதை என் படம் உடைக்கும்னு நம்புகிறேன்.’’

ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஜெயராமன்

“பி.சி.ஸ்ரீராம் என் மாமாதான். அவரைப் பார்த்து வளர்ந்ததால சின்ன வயசுலேருந்தே போட்டோகிராபில ஆர்வம் இருந்துச்சு.  ஸ்கூல் முடித்ததும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்துட்டேன். கோர்ஸ் முடிச்சதுக்குப் பிறகு  மாமாகிட்டதான் உதவியாளரா வொர்க் பண்ணிட்டு இருந்தேன். ‘மே மாதம்’ படத்திலிருந்து ‘குருதிப்புனல்’ படம் வரை அவரோடதான் இருந்தேன். அப்புறம் தனியா வந்து சில டாக்குமென்ட்ரி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். ‘கண்ணாமூச்சி ஏனடா’ என்னோட ஒளிப்பதிவுல வந்த முதல் படம். அதுக்கப்புறம் ‘அபியும் நானும்’, ‘கெளரவம்’, ‘உன் சமையல் அறையில்’னு வரிசையா சில தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களும் பண்ணிட்டு இருக்கேன்.

``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்!''

நான் ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்ல ஸ்டூடண்ட்டா சேரும்போதும் சரி, மாமாகிட்ட உதவியாளரா சேரும்போதும் சரி... அந்தக் கூட்டத்துல நான் மட்டும்தான் பொண்ணு. ஏன் இந்தத் துறைக்குப் பெண்கள் வர மாட்டறாங்கனு கவலையா இருக்கும். ஆனால், வொர்க் பண்றதுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. ஏன்னா, நான் படிக்கும்போதும், வொர்க் பண்ணும்போதும் யாரும் என்னை பொண்ணுன்னு ஒதுக்கலை.

இப்போதுவரை ஒளிப்பதிவுத்துறையில் பெண்கள் ஆர்வம்காட்டுவதில்லை. பெண் என்பதாலே பல கமிட்மென்ட்ஸுக்குள் மாட்டிக்கிறாங்க. சீக்கிரம் கல்யாணம் பண்ணணும், கல்யாணம் பண்ணி கொஞ்ச வருஷத்துக்குள்ள குழந்தை பெத்துக்கணும், குழந்தை பிறந்துட்டா வேற வேலைக்குப் போக நேரம் இருக்காதுனு பல காரணங்களால்தான் பெண்கள் இந்தத் துறைக்கு வர மாட்டறாங்கனு நினைக்கிறோம்.

குடும்பத்தோட சப்போர்ட் இல்லாம பெண்கள் எந்தத் துறையிலும் வேலை பார்க்க முடியாது. என் குடும்பம் எனக்கு நூறு சதவிகிதம் சப்போர்ட் பண்றாங்க. அதுனாலதான் என்னால வொர்க் பண்ண முடியுது. அதனால எல்லாத்துறையிலயும்  இருக்கிற சிரமங்களைப் போலத்தான் இந்தத் துறையிலும் இருக்குனு நினைச்சாலே போதும்... இங்க எதையும் வேலையா பார்க்காம கலையா பார்க்க ஆரம்பிச்சிடுவோம்.’’