அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மும்பையில் ஃபர்ஸ்ட் லுக், துபாயில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீடு, ஹைதராபாத்தில் டீஸர், சென்னையில் டிரெய்லர்... என உச்சபட்ச விளம்பரத் திட்டமிடலில் இருக்கும் ‘2.0’ படக்குழு, கிரிக்கெட் ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் மூன்றாவது நடுவருக்கான எல்.இ.டி டிஸ்பிளேக்களில் ‘2.0’ படத்தை விளம்பரப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சந்தானம் ஜோடியாக ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் வைபவி சாண்டில்யா, கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘ஹரஹர மஹாதேவகி’ படக்குழுவின் அடுத்த படமான இதுவும், அடல்ட் காமெடிப் படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு வாழ்த்துகளோடு வாய்ப்புகளும் வருகின்றன. பல இயக்குநர்கள் அவரைத் தொடர்புகொண்டு கதை சொல்ல, ‘சிலம்பாட்டம்’, ‘சிப்பாய்’ படங்களின் இயக்குநர் எஸ்.சரவணன் கதையை மட்டும் டிக் அடித்திருக்கிறார், ஆரவ். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

தெலுங்கில் ‘எம்.சி.ஏ’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், நடிகை சாய் பல்லவி. மலையாளப் படமான ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானதால், தெலுங்கு ரசிகர்கள் இவரை மல்லு எனக் குறிப்பிட்டு அழைக்க, ‘நான் கோயம்புத்தூர் பொண்ணு. தெலுங்குத் திரைப்பட விழா ஒன்றில் ஒருவர், என்னை மலையாளி என அழைத்தது வருத்தமாக இருக்கிறது. என்னைத் தமிழ்ப் பெண்ணாகவே குறிப்பிட விரும்புகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார், சாய் பல்லவி.

மிஸ்டர் மியாவ்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு ‘கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற படத்தை இயக்கி நடிப்பதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார், சிம்பு. பாடல்கள், இடைவேளைக் காட்சி இல்லாத படமாக இது இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இப்படத்தின் வேலைகள் எதுவும் தொடங்காத சூழலில், மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒப்பந்தமானார். தவிர, மேலும் இரு கதைகளை ஓகே செய்துவைத்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை பிரியா பவானிசங்கர், இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜூங்கா’ படத்தின் முக்கியக் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு கோகுல் இயக்கும் இப்படத்தில் சாயிஷா ஹீரோயினாக

மிஸ்டர் மியாவ்

நடிக்கிறார்.

மியாவ் பதில்

“ஹெச்.ராஜாவின் ‘ஜோசப் விஜய்’ கண்டுபிடிப்பு சர்ச்சையாகியிருக்கிறதே?”

‘’ஹெச்
.ராஜாவின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடு இது. நடிகர் விஜய் இப்போதைய அறிக்கையில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய பல அறிக்கைகளிலும் ‘ஜோசப் விஜய்’ என்றேதான் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசை எதிர்த்து வசனம் பேசிவிட்டார் என்பதற்காக, ஹெச்.ராஜா மதரீதியான அடையாளத்தைக் கையிலெடுத்திருக்கலாம். ஆனால், அவர் எதிர்பார்த்த விளைவுகள் எதுவும் நடக்காததுதான், அவருக்குக் கிடைத்த பெரிய அடி. ஹெச்.ராஜாவின் அந்த ட்வீட்டுக்குப் பிறகு ‘ஜோசப் விஜய்’ என்ற பெயர் இன்னும் அதிக அளவு ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. திருச்சியில் சில ரசிகர்கள் ‘ஜோசப் விஜய் நற்பணி மன்றம்’ என்று பெயர் வைத்தே கட்-அவுட் வைத்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரில் பல ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஆக, விஜய் தனது அடையாளத்தை இதுவரை மறைத்து வைக்கவில்லை. ரசிகர்களுக்கு அது தேவையில்லை. ஹெச்.ராஜாவுக்கு மட்டுமே இப்போது தேவைப்பட்டிருக்கிறது.”