Published:Updated:

ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது சாரே... எப்படியிருக்கிறது #Searching

கார்த்தி
ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது சாரே... எப்படியிருக்கிறது #Searching
ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது சாரே... எப்படியிருக்கிறது #Searching

திடீரென ஒரு நாள் டேவிட் கிம்மின் மகள் மார்கட் காணாமல் போகிறாள். மார்கட்டைத்தேட டேவிட்டுக்கு உதவுகிறார் டிடெக்டிவ் அதிகாரி ரோஸ்மேரி. மார்கட் என்ன ஆனாள் என்பதை Point Of View முறையில் பதிவு செய்திருக்கிறது #Searching. 

ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது சாரே... எப்படியிருக்கிறது #Searchingசினிமா டெக்னாலஜி வளர வளர தன்னை மேம்படுத்திக்கொண்டே வந்தாலும், கதை சொல்லுதல் என்னும் முறையில் அது மிகவும் மெதுவாகத்தான் நகர்கிறது. ரேஷமோனில் (1950) காலகட்டத்திலேயே கதை சொல்லுதலில் புதிய யுக்திகளை கையாள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே டேக்கில் எடுக்கப்படும் சினிமாக்கள், HandyCam காட்சிகளை வைத்து நகரும் சினிமாக்கள், Point of View சினிமாக்கள் என இவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளிவந்த ஓர் இரவு protagonist's viewpointல் எடுக்கப்பட்ட சினிமாக்களில் ஒன்று.

#Searching திரைப்படம் இதற்கு முன்னர் வரவே வராத கதையா, வேற லெவல் த்ரில்லரா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், படத்தில் வரும் பிரதான காட்சிகள் இதைப் பிற படங்களில் இது வேறுபடுத்திக்காட்டுகின்றது. படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் ஸ்கிரீனின் பார்வையில்தான் பார்வையாளனுக்குக் காட்டப்படுகின்றது. அது கம்ப்யூட்டர் ஸ்கிரீன், மொபைல் ஸ்கிரீன், ஃபேஸ்டைம், ஃபேஸ்புக், டம்ப்ளர், ட்விட்டர், யூ-டியூப், தொலைக்காட்சி என விரிவாகிக்கொண்டே செல்கிறது. இந்த டெம்ப்ளேட்டில் இதற்கு முன் வெளியான படங்கள் என்றால், Unfriended (2015), Unfriended : dark Web (2018). இந்த மூன்று படங்களையும் தயாரித்தவர் டிமுர் பெக்மென்பட்டோவ் என்ற ரஷ்யர்தான். இனியும் இப்படிப்பட்ட படங்களைத் தயாரிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். +

ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது சாரே... எப்படியிருக்கிறது #SearchingSearching படத்தின் முதல் காட்சியே படத்தின் டோனை எளிதாக செட் செய்துவிடுகிறது. பச்சைப் பசேலென இருக்கும் மலை, சின்னச் சின்ன வெள்ளை மேகங்களுடன் இருக்கும் நீல வானம், இதுதான் முதல் காட்சி. ஆம், விண்டோஸ் XPல படம் ஆரம்பிக்கிறது. இதிலிருந்து மெள்ள மெள்ள ஸ்கிரீனிலேயே காட்சிகள் விரிகின்றன. மகளின் சிறுவயது சம்பவங்களிலிருந்து அனைத்து விஷயங்களையும் கணினியில் பதிவேற்றி வருகிறார் டேவிட் கிம். மகளின் பியானோ வகுப்புகள், மனைவி பமீலாவின் மருத்துவமனை நாள்கள் என எல்லாமே நாட்குறிப்புகளாக, வீடியோக்களாக கணினியில் பதிவேற்றப்பட்டு வருகிறது. மார்கட் தாயாரின் கடைசிக் காட்சிகளை விவரிக்க ஸ்கிரீனில் நிகழும் மாற்றங்கள் ஒரு மென்சோக சம்பவம். நிகழ்காலத்தில் நடக்கும் தந்தை மகளுக்குமான உரையாடல்கள்கூடல் பார்வையாளனுக்கு மொபைல் ஸ்கீரீன் சார், ஆப்பிள் லேப்டாப் சாட் என்றே காட்டப்படுகிறது. இந்தப் பரிசோதனை முயற்சி பல இடங்களில் `அட ' சொல்ல வைத்தாலும், ஒரு கட்டத்துக்கு சலிப்பை உண்டாக்கி நம் மொபைல் ஸ்கிரீனையே பார்க்க வைத்துவிடுகின்றது.

காணாமல் போன, மகளின் கணினியில் இருக்கும் சமூக வலைதளங்கள கணக்குகளுக்குள் நுழைய முயல்கிறார் டேவிட். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. Forgot Password கொடுத்தால், புதிய பாஸ்வர்டு டேவிட்டின் மனைவியின் ஜீமெயிலுக்குச் செல்கிறது. அந்த ஐடி இருப்பது விண்டோஸ் XP இயங்குதளத்தில் இருக்கும் கணினியில். மீண்டும் பழைய கணினிக்குள் சில நேரம் சென்று, அனைத்தையும் கண்காணிக்கிறார் டேவிட். ஒரே நேரத்தில் XP, ஆப்பிள் மேக், ஐஃபோன் ஃபேஸ்டைம் எனக் கடந்த 10 ஆண்டுகளின் அனுபவத்தைத் தருகிறது. 

ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது சாரே... எப்படியிருக்கிறது #Searching


ஃபேக் ஐடிக்களை நம்பி வாழ்க்கையைத் தொலைக்கும் இணையவாசிகள், #FindMargot, #ProudDad என இணையத்தில் முளைக்கும் ஆதரவு ஹேஷ்டேக்குகள், பப்ளிசிட்டிக்காக மார்கட்டை தெரிந்தது போல் காட்டிக்கொண்டு லைக்ஸ் அள்ள துடிக்கும் நபர்கள் என லேட்டஸ்ட் இணைய பரிதாபங்களையும் நுண்பகடி செய்திருக்கிறார்கள்.

நம்முடைய ஃபேஸ்புக்கில் இருக்கும் நண்பர்கள் பட்டியலில் எத்தனை பேரை நாம் நேரில் சந்தித்து இருப்போம். அதில் எத்தனை ஃபேக் ஐடிக்கள் இருக்கும் என உங்களால் யூகிக்க முடியுமா போன்ற கேள்விகளையும் #Searching எழுப்பத் தவறவில்லை. 

படம் இந்தப் புதுவிதமான கதை சொல்லுதலோடு நிற்கவில்லை. Unfriended டைப் படங்களிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் அனீஷ் சக்நத்தி. டேவிட் கிம், அவரது மகள் மார்கட், கிம்மின் சகோதரர், டிடெக்டிவ் அதிகாரி ரோஸ்மேரி, சில நண்பர்கள் எனப் படம் முழுக்க வரும் கதாபாத்திரங்கள் இவ்வளவுதான். சிலந்தி தன் வலையின் ஒவ்வோர் அடுக்குகளையும் ஒரு தேர்ந்த கலைஞன் போல் பின்னிக்கொண்டு இருக்கும். எந்தவோர் இடத்திலும் கவனம் பிசகாமல், அது அதன் வேலையைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். 100 நிமிடக் கதையில் கடைசி நிமிடம் வரை அந்த த்ரில்லரை சாத்தியப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அது சற்று ஓவர்டோஸாகிவிட்டதுதான் வருத்தம். 

படத்தின் டிரெய்லர்

சினிமா காதலர்கள், வித்தியாசமான த்ரில்லர் விரும்பிகள் தாராளமாய் #Searching படத்துக்காக 100 நிமிடங்கள் செலவு செய்யலாம்.