Published:Updated:

`என் உடல்... என் உரிமை!' ஹீரோயின்களின் முழக்கம்

`என் உடல்... என் உரிமை!' ஹீரோயின்களின் முழக்கம்

`என் உடல்... என் உரிமை!' ஹீரோயின்களின் முழக்கம்

`என் உடல்... என் உரிமை!' ஹீரோயின்களின் முழக்கம்

`என் உடல்... என் உரிமை!' ஹீரோயின்களின் முழக்கம்

Published:Updated:
`என் உடல்... என் உரிமை!' ஹீரோயின்களின் முழக்கம்

லகத்தில் பிறந்த ஒவ்வோர் உயிருக்கும் சுதந்திரம் இன்றியமையாதது. அதில், மனிதரும் அடங்குவர். மனித மனம் விரும்புவது பறவையைப் போன்ற சுதந்திரம். எல்லாருக்கும் அது கிடைத்துவிடுவதில்லை. நாடு, இனம், மதம், மொழி என மனிதனே இன்னொரு மனிதனை அடக்குகிறான். எல்லாவற்றிலும் பொதுவாக, காலம் காலமாகப் பாதிக்கப்படுவது பெண்களே. கொல்லைப்புறத்திலிருந்து வாசலின் கீழ்ப்படிக்கட்டு வரைதான் அவர்களின் வானமாக வரையறுக்கப்பட்டது. கால மாற்றத்தில் பெண்களுக்குச் சுதந்திரமும் சமஉரிமையும் அளித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், யாருக்கும் யாரும் எதையும் அளித்துவிட முடியாது. சம உரிமையும் சுதந்திரமும் பிறக்கும்போதே உடன் பிறந்துவிடுவது என்றாலும், இன்றும் பல பெண்கள் சமத்துவத்துக்காகப் போராடிவருகின்றனர். அப்படிப் பெண்களின் உரிமைகள், பாலியல் கொடுமைகள், பெண்ணாகத் தங்களைப் பற்றி என ஹாலிவுட் ஹீரோயின்கள் கூறிய சில வரிகளின் தொகுப்பு இது. 

ஏஞ்சலினா ஜூலி

 * உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு தொற்றுநோயாகப் பரவிவருகிறது. அமைதியான சமூகங்களிலும் பிரச்னைக்குரிய பகுதிகளிலும் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், அது சிறிய குற்றமாகவும் அதிகம் முன்னுரிமை அளிக்கப்படாததாகவும் பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* உலக அளவில் பல பிரச்னைகளைத் தீர்க்க மறந்துவிட்டோம். அதனுடைய தொடர்ச்சியே இந்த வன்முறைகள். இது நம் சமூகத்துக்கான மிகப்பெரிய தோல்வி. பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடக்கும்போது, எதுவும் செய்யமுடியாத நிலைதான் இங்குள்ளது.

* பாலியல் வன்முறைகள் தவிர்க்கமுடியாத ஒன்று என்பது கட்டுக்கதை. தவிர்க்கமுடியாதவை என்று ஒன்றுமில்லை. இந்த வன்முறைகள் எல்லாம் அதிகாரத்துக்காகச் செய்யப்படுபவை. அப்பாவி மக்களை சித்திரவதைச் செய்வதற்கும், சிறு பிள்ளைகளைச் சித்திரவதைச் செய்வதற்கும்தான் இப்படிச் செய்கிறார்கள்.

* நான் ஒரு பெண்ணாக என்னைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. நான் என்னை அதிகாரம் மிகுந்தவளாக உணர்கிறேன். அதுதான் என்னை உறுதியான பல முடிவுகளை எடுக்கவைக்கிறது. இது என்னுடைய பெண்மையை நலிவடையச் செய்யமுடியாது.

* பெண்களால் கவனிக்கப்பட்டு, பெண்களால் வடிவமைக்கப்பட்டு, பெண்களால் செயல்படுத்தப்படும் பெண்களின் பாதுகாப்புக்கான கொள்கைகள் நமக்குத் தேவை. அது, ஆண்களைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது.

எம்மா வாட்ஸன்

* சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமையும் வாய்ப்புகளும் இருக்க வேண்டும் என்பதுதான் வரையறை. இதுதான் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பாலினச் சமத்துவக் கோட்பாடு.

* இளம்பெண்கள் தங்களை இளவரசியாகவும் பலவீனமானவர்களாகவும் கருதுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஒரு படை வீரன் தன்னைப் படை வீரனாக மட்டுமன்றி, போர் வீரனாகவும் அடையாளம் கண்டுகொள்கிறான். நான் இளவரசியாக இருந்தால், போர் செய்யும் இளவரசியாகவே இருப்பேன்.

* பெண்ணியம் பற்றி அதிகமாக நான் பேசியிருக்கிறேன்; அதிகமாக உணர்ந்திருக்கிறேன். பெண் உரிமைக்காகப் போராடும்போதெல்லாம் அது மனிதர்களால் வெறுக்கும் ஒன்றாகவே உள்ளது. இந்த மாதிரி நான் அறிந்த விஷயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஓப்ரா வின்ஃப்ரே

 * ஆண்களின் மிருகத்தனமான கலாசாரத்தின் கீழ், அதிக ஆண்டுகள் பெண்கள் வாழ்ந்துவிட்டனர். ஆண்களிடம் தைரியமாகப் பேசமுடியும் என்று பெண்கள் பல காலம் நம்பவே இல்லை. பெண்கள் சொன்னதை ஆண்கள் கேட்கவே பல காலம் ஆனது. இனி அப்படிப்பட்ட ஆண்களின் காலம் முடிந்துவிட்டது. இது, பெண்களுக்கான காலம்.

* நான் என்னை ஏழையான இடத்தைச் சேர்ந்த பெண் சாதித்ததாகக் கருதவில்லை. எனக்கு நானே பொறுப்பாளியாக சிறுவயதிலேயே மாற்றிக்கொண்டேன்.

* உண்மையைப் பேசுவதே மிகப்பெரிய ஆயுதம் என்று எனக்குத் தெரியும். அதுமட்மன்றி, பல வலுவான மற்றும் அதிகாரமிக்க பெண்கள் தங்கள் கதைகளை என்னுடன் பகிர்ந்துள்ளனர். அதனால் நான் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளேன்.

ஜெனிஃபர் லாரன்ஸ்

* பெண்ணியம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஏன் பயப்படுகிறார்கள். பெண்ணியம் என்பது சமத்துவத்தைத்தானே அர்த்தப்படுத்துகிறது. முன்னேறுகின்ற சமூகத்தில் பெண்கள், தங்களை வலுவானவர்களாக உணர வேண்டும். பெண்ணிற்குரிய பண்புகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் பெண்களுக்கு இல்லை. நாமும் உணர்ச்சிவசப்படுகிறோம். நாமும் மகிழ்ச்சி அடைகிறோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் அல்லது தவறுகளையும் செய்யலாம்.

* இது என்னுடைய உடல். இதைப் பற்றிய முடிவுகளை நான்தான் எடுக்க வேண்டும். அது என் உரிமையும்கூட. இது என்னுடைய விருப்பம் இல்லை என்று கூறுவது வெறுக்கக்கூடிய ஒரு மனநிலை.

* நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்கின்றபோதும் உங்களுக்கென்று ஒரு தனி வாழ்க்கையையும் தனித்துவத்தையும் வைத்திருங்கள். இது மிகவும் முக்கியமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism